எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 அக்டோபர், 2010

தேன் சிறகு முத்தம்...

தாலாட்டும் ரயில்
தாய் போலெனக்கு...

ஆடுகளும்., பாசி ஊசிகளும்
அசைபோட்டு நடந்தபடி..

கிரானைட் பெஞ்சுகளில்
சாய்ந்து அமர்ந்திருந்தோம்..
அணைத்துக் குலவியபடி..

போவோர் வருவோரெல்லாம்
புகை பொங்கப் பார்த்தபடி..


ஒரு முத்தம் கொடுடா என்றேன்
என் குழல் கற்றையை
விரலால் சுழற்றினாய்..

தோடை.. காதை தடவினாய்..
கன்னத்தோடு கன்னமிழைத்தாய்..
காது கேட்காதது போல்..

தடதடத்து வந்தது ரயில்..
என் கோபம் போல்..

ஒழுங்காய் சாப்பிடு..
சமர்த்தாய் தூங்கு..
இந்தா என் கைக்குட்டை..

இம் என்று வாங்கினாய்..
முத்திரை இடாத தபாலாய்
தளதளப்பாய் ஒரு வாரம் ஆகுமென்றேன்..

இம் என்றாய்..
பொய்க்கோபம் மிக
போயமர்ந்தேன்..
உன் முகம் ஏக்கமாய்ப் பார்த்து..

இதழ்களில் பிஞ்சுக்கரம் பதித்து
பறக்கும் முத்தம் பரிசளித்தாய்..
பட்டாம் பூச்சியாய் அது
கன்னம் அப்பியது..
தேன் சிறகுகளோடு..

உன் அப்பா கையிலிருந்து..
இன்னும் இன்னும் வாரியிறைத்தாய்..
அட படவா.. முன்பே கொடுப்பதற்கென்ன......:))

டிஸ்கி :- இது 24. 10 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது.

21 கருத்துகள்:

 1. / இதழ்களில் பிஞ்சுக்கரம் பதித்து
  பறக்கும் முத்தம் பரிசளித்தாய்..
  பட்டாம் பூச்சியாய் அது
  கன்னம் அப்பியது..
  தேன் சிறகுகளோடு.. /

  கலக்கல்....

  பதிலளிநீக்கு
 2. எப்போதோ குமுதத்தில் படித்த வைரமுத்து கவிதை நினைவிற்கு வருகிறது

  பதிலளிநீக்கு
 3. இம் என்றாய்..
  பொய்க்கோபம் மிக
  போயமர்ந்தேன்..
  உன் முகம் ஏக்கமாய்ப் பார்த்து..

  அருமை

  வரிகள் ஒவ்வொன்றும் ரசனை

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  நன்றி
  நட்புடன்
  மாணவன்
  http://www.urssimbu.blogspot.com/

  பதிலளிநீக்கு
 4. //தாலாட்டும் ரயில்
  தாய் போலெனக்கு.//

  போய் நேரா நின்னு பாருங்க அது தாயா இல்லை பேயான்னு தெரியும். ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 5. முத்திரை இடாத தபாலாய்
  தளதளப்பாய் ஒரு வாரம் ஆகுமென்றேன்../////

  இது நல்லா இருக்கே...

  பதிலளிநீக்கு
 6. //இதழ்களில் பிஞ்சுக்கரம் பதித்து
  பறக்கும் முத்தம் பரிசளித்தாய்..
  பட்டாம் பூச்சியாய் அது
  கன்னம் அப்பியது..
  தேன் சிறகுகளோடு.. //

  அழகான வரிகள் தேனம்மை மேடம்.

  பதிலளிநீக்கு
 7. இதழ்களில் பிஞ்சுக்கரம் பதித்து
  பறக்கும் முத்தம் பரிசளித்தாய்..
  பட்டாம் பூச்சியாய் அது
  கன்னம் அப்பியது..
  தேன் சிறகுகளோடு..

  ..... cho chweet!!!!

  பதிலளிநீக்கு
 8. வாவ் அழகான தாய்மையன்போடு சொல்லப்பட்ட கவிதை மா மிக ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 9. முத்தம் வாங்க எப்படி கஷ்டபட் வேண்டி இருக்கு அதே போல் நிப்பாட்ட எப்படி கஷ்டபட் வேண்டி இருக்கு

  பதிலளிநீக்கு
 10. அருமை அக்கா,உங்கள் கவிதையை எப்பவும் இரண்டு மூன்று முறை வாசிப்பது வழக்கம்.

  பதிலளிநீக்கு
 11. //இதழ்களில் பிஞ்சுக்கரம் பதித்து
  பறக்கும் முத்தம் பரிசளித்தாய்..
  பட்டாம் பூச்சியாய் அது
  கன்னம் அப்பியது..
  தேன் சிறகுகளோடு..//

  அழகான வரிகள் தேனம்மை மேடம்.

  பதிலளிநீக்கு
 12. மனதைத் தொடும் வரிகள் தேனம்மை....வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. Superb kavithai...

  Muthuathin Eiram than manitham valara urrum thannir...

  பதிலளிநீக்கு
 14. நன்றி கார்த்திக்., புவனா., வினோ., ஜோதிஜி., கதிர்., வெறும் பய., மாணவன்., சசி., சௌந்தர்., கோமதி., மோகன் ஜி., சித்ரா., சக்தி., யாதவன்., காஞ்சனா., ஆசியா., ராமலெக்ஷ்மி., ஜிஜி., நித்திலம்., தங்கிலிஷ் பையன்

  பதிலளிநீக்கு
 15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.1
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...