புதன், 10 நவம்பர், 2010

நம்பிக்கை..

திரையரங்கோ., கோயிலோ.,
முன்னேற்பாடுகளுடன்
பெரும்பாடாய்..
திட்டமிட்டேதான் நடக்கிறது..
சந்திக்கச் செல்வதற்கான முஸ்தீபும்.,
பழகிப் போன இதே போன்றதான
ஏமாற்றமும்..

விருந்து மண்டபமோ.,
பிறந்தநாள் விழாவோ.,
புகைப்படச் சிரிப்புக்களில்
இல்லாத தன்னை உணர்ந்து
கரைந்து போவதாய்க் கனக்கிறது..

கல்யாணக் கூடமோ.,
சாலையோரப் பூங்காவோ.,
கழுத்து வலிக்க கண்ணை
நெருடிக்கொண்டே இருக்கிறது..
வாயிற்கதவுகளும்.,
விளக்குக் கம்பங்களும்..

தேடுதலின் முடிவில்
கல் இடறிக் கட்டைவிரல்
ரத்தம் அறிவிக்கிறது..
ஏதோ ஒன்றைத் தேடுதலில்
தன்னைத் தொலைத்தது..

இற்று விழும் போதெல்லாம்
சுற்றி வரச் செய்கிறது..
சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..

டிஸ்கி :- இந்தக் கவிதை நவம்பர் 7., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது..

37 கருத்துகள் :

LK சொன்னது…

நம்பிக்கைதானே வாழ்வு. அக்கா, என் கவிதையும் அதே இதழில் வந்து இருக்கிறது

பிரபு . எம் சொன்னது…

//சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//

வெரி நைஸ் அக்கா :)

யாதவன் சொன்னது…

நல்லா இருக்கு.
தெளிவு.

தமிழ் உதயம் சொன்னது…

வேறென்ன நம்பிக்கையை நம்பி தான் ஆக வேண்டும.

வெறும்பய சொன்னது…

நல்லாயிருக்கு..

ஜோதிஜி சொன்னது…

பாராட்டுக்கள்.

ஸாதிகா சொன்னது…

அருமையான கவிதை.

Mrs.Menagasathia சொன்னது…

சூப்பர்ர் அக்கா..நம்பிக்கை அதானே எல்லாம்...

GEETHA ACHAL சொன்னது…

அருமையாக இருக்கு...வாழ்த்துகள்...

அம்பிகா சொன்னது…

//சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள் தேனம்மை.

அம்பிகா சொன்னது…

//சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள் தேனம்மை.

kutipaiya சொன்னது…

//இற்று விழும் போதெல்லாம்
சுற்றி வரச் செய்கிறது..
சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//

மிக உண்மை..அருமை!!

வானம்பாடிகள் சொன்னது…

இற்று விழும் போதெல்லாம்
சுற்றி வரச் செய்கிறது..
சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//

சுற்றவைக்கும் கயிரோ நம்பிக்கை:). நல்லாருக்கு

ராமலக்ஷ்மி சொன்னது…

//இற்று விழும் போதெல்லாம்
சுற்றி வரச் செய்கிறது..
சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//

உண்மைதான் தேனம்மை. நம்பிக்கை நல்கும் நல்ல கவிதை.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//கல்யாணக் கூடமோ.,
சாலையோரப் பூங்காவோ.,
கழுத்து வலிக்க கண்ணை
நெருடிக்கொண்டே இருக்கிறது..
வாயிற்கதவுகளும்.,
விளக்குக் கம்பங்களும்..//

நிஜம்

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க !

Chitra சொன்னது…

அருமையான கவிதை, அக்கா. வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்லா இருக்கு

dineshkumar சொன்னது…

நன்றாக உள்ளது நம்பிக்கை வரிகள்

ஹேமா சொன்னது…

வாழ்க்கையே நம்பிக்கையில்தான் தேனக்கா !

yenshri சொன்னது…

ம்ம் அருமை க்கா ...

நேசமித்ரன் சொன்னது…

இற்று விழும் போதெல்லாம்
சுற்றி வரச் செய்கிறது..
சுற்றும் பூமியைப் போல்//

mm Nice verses

Balaji saravana சொன்னது…

//அற்றுப் போகாததான நம்பிக்கையும் //
சூப்பர்..

சகாதேவன் சொன்னது…

தினமும் பிரபு டிவியில் சொல்வாரே,
"நம்பிக்கை-அதானே எல்லாம்".

சகாதேவன்

RVS சொன்னது…

//இற்று விழும் போதெல்லாம்
சுற்றி வரச் செய்கிறது..
சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//
அறுத்தாலும் மீண்டும் மீண்டும் பின்னும் சிலந்தி போல...

சும்மான்னு ப்ளாக் தலைப்பு வச்சுட்டு இப்படி பின்றீங்க.. நல்லா இருக்கு..

D.R.Ashok சொன்னது…

நல்லாயிருக்குங்க

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான கவிதை தேனக்கா.. நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை அழகாக சொல்லிருக்கீங்க.. எங்களின் வாழ்த்துகள்.

sakthi சொன்னது…

இற்று விழும் போதெல்லாம்
சுற்றி வரச் செய்கிறது..
சுற்றும் பூமியைப் போல்
அற்றுப் போகாததான நம்பிக்கையும்..//

அருமைங்க

பாரத்... பாரதி... சொன்னது…

எழுத்து நடையும், வார்த்தைகளின் கோர்வையும் மிக தேரந்தவராக உங்களை அடையாளம் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

கவிதை வெகு அருமை...

“ஆரண்ய நிவாஸ்”
http://keerthananjali.blogspot.com/

ஆகாயமனிதன்.. சொன்னது…

ரத்தச்சரித்ரா....!!!

ஜோதிஜி சொன்னது…

எப்ப உங்களை ஒரு பத்திரிக்கையாசிரியராக பார்க்கப் போகின்றேன்? முயற்சிகள் ஏதும் நடந்து கொண்டுருக்கா?

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கார்த்திக்., பிரபு., யாதவன்., ரமேஷ்., வெறும் பய., ஜோதிஜி., ஸாதிகா., மேனகா., கீதா., அம்பிகா., குட்டிப்பையா., பாலாசார்., ராமலெக்ஷ்மி., வசந்த., சித்து., டி வி ஆர்., தினேஷ் குமார்., ஹேமா., யென்ஸ்ரீ., நேசன்., பாலாஜி., சகாதேவன்., ஆர்வி எஸ்., அஷோக்., ஸ்டார்ஜன்., சக்தி., பாரதி., ஆர் ஆர் ஆர்., ஆகாய மனிதன்..(!) ., ஜோதிஜி.. ( என்னைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டுக்கு நன்றி.. செய்ய இயலுமா எனத் தெரியவில்லை)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

செந்தில்குமார் சொன்னது…

உண்மை( யான )வரிகள் தேனக்கா.....

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி செந்தில்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...