எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 மார்ச், 2020

தோழர் சிவானந்தம் அவர்கள் பார்வையில் காதல் வனம்.

சகோதரி தேனம்மைலக்ஷ்மணன்  அவர்களின் காதல் வனம்   என் போன்ற சிறார்களுக்கு காதல் பொக்கிஷம் . இதனுள் இடம்பெற்ற வாடகைத் தாய் பற்றிய பதிவுகள் என்னை ஒரே நாளில் நாவலை வாசிக்க தூண்டியது.

இப்பிரபஞ்சத்தில் ஆண் பெண் புணர்தலால் உண்டாகும் கருதரித்தலானது  காலப்போக்கில் செயற்கை முறையில் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி பலவாறாக கருத்தரித்தல் நிகழ்வு நிகழ்கிறது. இவற்றுள் வாடகைத்தாயும் உள்ளடக்கம் என்பதனை தெளிவாக பதிவு செய்துள்ளார்.




மேலும் இதனுள் இடம்பெற்ற காதல் கதை என்னை 'அழகி, ஆட்டோகிராப்' போன்ற படங்களை அசை போட வைத்தது.உளுந்தம் களி, விளக்கெண்ணெய் ஆம்லெட் போன்ற உணவுகள் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு நீங்கள் தரும் ஆலோசனையாக உள்ளது.


இன்னும் பல புதையல்கள் இந்நாவலில் புதைந்துள்ளது.... படித்தால் பரவசம் கிட்டும்......

அன்புடன் வே.சிவானந்தம்

-- கருத்துக்கு நன்றி தோழர்.

டிஸ்கி :- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்
காரைக்குடி கிளையின் தோழர் திரு சிவானந்தம் அவர்களின்
கருத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றியும் அன்பும். 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...