அதில் தமிழக மற்றும் ஈழப் புதின எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், சுய விவரக் குறிப்புகள், படைப்புகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
அதில் ஒரு கட்டுரை என்னைப் பற்றியும் சுசீலாம்மா பற்றியும் வெளியாகி இருந்தது. கட்டுரை யாத்தவர்கள் அனைவருமே பல்வேறு கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் சார்ந்த முனைவர்கள் & பேராசிரியர்கள்.
அந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக நானும் சென்றிருந்தேன். எனது கருத்துக்களைக் கூட முன்பே எழுதி இருக்கிறேன். எனது உரையையும் சவுண்ட் க்ளவுடில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறேன்.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின,சிறுகதை ஆசிரியர்கள்
அழகப்பா பல்கலையில் 2018 ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் தமிழக மற்றும் ஈழப் புதின எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், சுய விவரக் குறிப்புகள், படைப்புகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
அதில் ஒரு கட்டுரை என்னைப் பற்றியும் சுசீலாம்மா பற்றியும் வெளியாகி இருந்தது. கட்டுரை யாத்தவர்கள் அனைவருமே பல்வேறு கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் சார்ந்த முனைவர்கள் & பேராசிரியர்கள்.
அந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக நானும் சென்றிருந்தேன். எனது கருத்துக்களைக் கூட முன்பே எழுதி இருக்கிறேன். எனது உரையையும் சவுண்ட் க்ளவுடில் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறேன்.
இந்த நூலில் 120கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சில கட்டுரைகள் படைப்புகள் பற்றியும் அநேக கட்டுரைகள் படைப்பாளி பற்றியும் பேசுகின்றன.
ஸ்டீபன் மைக்கேல் ராஜின் படைப்புகளில் தொடங்கி அயலகத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளுமைகளில் முடிந்திருக்கின்றன கட்டுரைகள்.
இலக்கியப்படைப்பும் சமூகப் பிரதிபலிப்பும், ஸ்டீஃபன் மைக்கேல்ராஜ் சிறுகதையில் திருவிவிலியமும் திருக்குறளும்,
தே பிரித்தோ சிறுகதை எழுத்தாளர்கள், சமூகப் பண்பாட்டுத் தளத்தில் கூத்து என்ற கட்டுரைகள் வித்யாசம்.
மு. இராமகிருஷ்ணன்
- வாய்மொழியாகக் கதை கேட்டறிந்து பதிந்துள்ள ஊர்மேலழகியான் கருசமுத்து அம்மாள் பற்றிய கட்டுரையும் , நண்பனாய் சீடனாய் குருவாய் என்ற தலைப்பில் நாஞ்சில்நாடன் பற்றிய முனைவர் மு.பழனியப்பனின் கட்டுரையும் வியக்க வைத்தன.
சாரு நிவேதிதா, ப.சிவகாமி, ஜோ.டி. குருஸ், சு. தமிழ்ச்செல்வி, மு. சுப்பிரமணி, சுபாஷ் சந்திரபோசு , அம்பை , அய்க்கண், செந்தமிழ்ப்பாவை, ஜெயமோகன், பூமணி, சூர்யகாந்தன், பெருமாள் முருகன், வை. மு. கோதைநாயகி, பாரதியார், சி. கோவிந்தராஜன், விந்தன், இரா. சிவகாசிநாதன், மேலாண்மை பொன்னுச்சாமி,
மீ. ப.சோமு, வெ. இறையன்பு , சு. வேணுகோபால், வல்லிக்கண்ணன்,
கி.ராஜநாராயணன்,
தோப்பில் முகம்மது மீரான்,லா.ச. இராமாமிர்தம், எம்.ஏ . சுசீலா, சுந்தர ராமசாமி, சாண்டில்யன், இந்திரா சௌந்திரராஜன்,
தமிழ்மகன், சி.சு. செல்லப்பா, உத்தமசோழர், முடியரசன், ஆ. மாதவன், கலைஞர் கருணாநிதி, அனுராதா ரமணன், வீராசாமி இராசமாணிக்கம்,
கொத்தமங்கலம் சுப்பு, தி. ஜானகிராமன், கோ. திலகவதி ஐபிஎஸ், ஜெகசிற்பியன்,
கோவி.பால.முருகு, ராமகிருஷ்ணன், கிருத்திகா, பாவண்ணன், பிரபஞ்சன், புதுமைப்பித்தன்,
கௌதம நீலாம்பரன், தேனம்மைலெக்ஷ்மணன், ஆண்டாள் பிரியதர்ஷிணி, மு. பழனி இராகுலதாசன், சாந்தகுமாரி, செம்பை சேவியர், வாஸந்தி, ரமணி சந்திரன், லட்சுமி, இந்திரா பார்த்தசாரதி, தொ. மு. சி. இரகுநாதன், அபிமானி, பாமா, சி. என்.நாச்சியப்பன், டி. செல்வராஜ், பி. எஸ். இராமையா, கோணங்கி, அகிலன், தேவி நாச்சியப்பன், கீரனூர் ஜாகிர்ராஜா, சிவசங்கரி ஆகியோர் பற்றிய விவரச் சித்திரங்கள் வெகு அருமை.
கண்ணதாசன், அண்ணாதுரை, சோலை சுந்தரப்பெருமாள், பா.செயப்ரகாசம், கல்கி, அசோகமித்திரன்,
அப்பாத்துரை முத்துலிங்கம்,
மு. வ, தேவன், கு. அழகிரிசாமி, சிவசங்கரி, சுஜாதா, நா. பார்த்தசாரதி, பாலகுமாரன், இராஜம் கிருஷ்ணன், வண்ணதாசன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், ஜெயகாந்தன், தமிழ் ஒளி இவர்களைப் பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகி உள்ளன.
வெவ்வேறு கோணங்கள் என்றாலும் அவர்கள் சுயவிவரம் வெளியிட்ட நூல் என்றும் தொடர்ந்து அதே வருவதால் அடுத்த முறை ஒரு எழுத்தாளுமைக்கு ஒரு கட்டுரை என்றும் அதைப் பதிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிப்புச் செய்துவிடலாம். வெப்சைட் ஒன்று போட்டு அதில் எழுத்தாளர்கள் பெயரை அறிவித்துவிட்டால் அதை ஒருவர் தேர்ந்தெடுத்தபின் அடுத்தவர் வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்படி அமைப்பில் மாற்றம் செய்யலாம்.
தோப்பில் முகம்மது மீரான், ஜெயகாந்தன் ஆகியோரின் கல்வி, மொழி பற்றிய பகுதிகள் சுவாரசியமானவை. சிவகங்கை மாவட்ட எழுத்தாளுமைகள், தமிழ்நாடு - சிறுகதை எழுத்தாளுமைகள், அயலகத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளுமைகள் அனைவரையும் தனித்தனிக் கட்டுரைகளில் விவரத்தோடு பட்டியலிட்டிருப்பது சிறப்பு.
இந்நூல் இளையோர் மட்டுமல்ல வாசிப்பு ஆர்வம் உடைய ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டிய கையேடு. ஏனெனில் சற்றேறக் குறைய தமிழின் அனைத்து ஆளுமைகளையும் அவர் பற்றிய அரிய தகவல்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது இந்நூல். மொத்தத்தில் அருமையான தொகுப்பு.
நூல் :- இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள்.
பதிப்பகம் :- மணியரசி பதிப்பகம், தேவகோட்டை
வெளியீடு :-தமிழ்ப் பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக் கழகம்,
பதிப்பாசிரியர் :- பேரா. சே. செந்தமிழ்ப்பாவை
பக்கம் :- 544.
விலை:- ரூ 450/-

///சாரு நிவேதிதா, ப.சிவகாமி, ஜோ.டி. குருஸ், தேனம்மைலெக்ஷ்மணன், சு. தமிழ்ச்செல்வி, மு. சுப்பிரமணி, சுபாஷ் சந்திரபோசு , அம்பை , அய்க்கண், செந்தமிழ்ப்பாவை, ஜெயமோகன், பூமணி, சூர்யகாந்தன், பெருமாள் முருகன், வை. மு. கோதைநாயகி, பாரதியார், சி. கோவிந்தராஜன், விந்தன், இரா. சிவகாசிநாதன், மேலாண்மை பொன்னுச்சாமி, மீ. ப.சோமு, வெ. இறையன்பு , சு. வேணுகோபால், வல்லிக்கண்ணன், கி.ராஜநாராயணன், தோப்பில் முகம்மது மீரான்,லா.ச. இராமாமிர்தம், எம்.ஏ . சுசீலா, சுந்தர ராமசாமி, சாண்டில்யன், இந்திரா சௌந்திரராஜன், தமிழ்மகன், சி.சு. செல்லப்பா, உத்தமசோழர், முடியரசன், ஆ. மாதவன், கலைஞர் கருணாநிதி, அனுராதா ரமணன், வீராசாமி இராசமாணிக்கம், கொத்தமங்கலம் சுப்பு, தி. ஜானகிராமன், கோ. திலகவதி ஐபிஎஸ், ஜெகசிற்பியன், கோவி.பால.முருகு, ராமகிருஷ்ணன், கிருத்திகா, பாவண்ணன், பிரபஞ்சன், புதுமைப்பித்தன், கௌதம நீலாம்பரன், ஆண்டாள் பிரியதர்ஷிணி, மு. பழனி இராகுலதாசன், சாந்தகுமாரி, செம்பை சேவியர், வாஸந்தி, ரமணி சந்திரன், லட்சுமி, இந்திரா பார்த்தசாரதி, தொ. மு. சி. இரகுநாதன், அபிமானி, பாமா, சி. என்.நாச்சியப்பன், டி. செல்வராஜ், பி. எஸ். இராமையா, கோணங்கி, அகிலன், தேவி நாச்சியப்பன், கீரனூர் ஜாகிர்ராஜா, சிவசங்கரி ஆகியோர் பற்றிய விவரச் சித்திரங்கள் வெகு அருமை.//
பதிலளிநீக்குஇந்த ஒட்டுமொத்த பேரையும் எப்படி ஒரே செம்புக்குள் அடைக்க முடியும்?..
நீங்கள் குறிப்பிட்டிருக்கிறா வரிசைப்படி தான் வரைச் சித்திரங்கள் இருக்கின்றனவா?
நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், க்விஞர், கட்டுரையாளர் என்று ஏதாவது தலைப்பின் கீழாவது இவர்கள் வரிசை படுத்தப் பட்டிருக்கிறார்களா?
தெரிந்து கொள்ள ஆவல்.
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஇதுபோன்ற நூல் முயற்சி பாராட்டத்தக்கதாகும். இதில் நீங்களும் இடம்பெற்றதறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஜிவி சார் கட்டுரைகள் கிடைத்த வரிசையில் அவர்கள் தமிழ்ப் புதின சிறுகதை ஆசிரியர்களைத் தொகுத்திருக்கிறார்கள். அவ்வளவே. இது வரிசைக்கிரமம் அல்ல :)
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
நன்றி ஜம்பு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!