எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 மார்ச், 2020

பாரதி பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி.

காரைக்குடி புத்தகத் திருவிழா கடந்த மாதம் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதை ஒட்டி மாணாக்கருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. செய்யுள் மனனப் போட்டியாக பாரதி பாரதிதாசன் பாடல்களில் இருந்து 40 வரிகளைச் சொல்லும் போட்டியில் பல்வேறு பள்ளிகளின் மாணாக்கர்கள் கலந்து கொண்டு சிறப்பாக ஒப்பித்தனர்.

இந்நிகழ்வை நடத்தியவர் ஆசிரியரும் குழந்தைக் கவிஞர் திரு அழ. வள்ளியப்பா அவர்களின் புதல்வியுமான திருமதி தேவி நாச்சியப்பன் ஆவார்கள். இவர் இப்புத்தகத் திருவிழாவின் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திருமதி சந்திரா மற்றும் திருமதி ஸ்வேதா ( கார்த்திகேயன் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ) ஆகியோரோடு மூன்று நடுவர்களுள் ஒருவராகப் பங்கேற்றேன்.



நிகழ்வை வரவேற்பும் நடுவர் பற்றிய அழகான அறிமுகமும் கூறி ஆரம்பிக்கிறார் திருமதி தேவி நாச்சியப்பன் அவர்கள். அவரிடம் பங்குபெறும் மாணக்கரின் பெயர் விவரம் கேட்டு வாங்கினேன்.


நடுவர்கள். கார்த்திகேயன் பள்ளி மாணவி ஒருவர் நமக்காகப் புகைப்படம் எடுத்துக் கொடுத்தார்.

போட்டியில் பங்கு பெற்ற மாணாக்கர்கள்.


கோகுல தர்ஷிணி பாடலாகப் பாடினார்.

வித்யப் ப்ரியா குரல் கம்பீரம்.

பாரதியாரின் வசன கவிதையைக் கூறினார் சபரி மணிகண்டன்.

ப்யூலா அன்னமும் சிறப்பாகப் பேசினார்.


பவதாரிணிதான் முதலாமிடம். பிரமாதமாகப் பேசினார்.

அனுஷ்ய பாரதி

மதன் குமார்


மதன் குமார்.
மகாலெக்ஷ்மி.

அனைவருமே சிறப்பாகப் பேசினார்கள். ஓரிருவருக்கு ஞாபக மறதியும் ஏற்பட்டது. நடுவில் தடங்கித் தடங்கி ஓரிருவர் சொன்னார்கள்.

ஆனால் மேடைக்கூச்சம் யாருக்குமில்லை.




நான் ஓரளவு அதிகமாவே மார்க்கை அள்ளிப் போடுவேன். இந்தமுறை கொஞ்சம் மெனக்கெட்டுக் குறைத்துக் கொடுத்தேன்.


தலைமை ஆசிரியை மேடம் ரொம்பக் குறைச்சிருக்காங்க. நான் மீடியம் மார்க் கொடுத்திருக்கேன். இன்னொருவர் தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

முடிவில் பவதாரிணி முதலிடமு, பியூலா அன்னம் இரண்டாமிடமும் மணிகண்டன் மூன்றாமிடமும் பெற்றார்கள்.

நடுவர்கள் அனைவருக்கும் மகரிஷி வித்யா மந்திரின் தமிழாசிரியர் ஜெயங்கொண்டான் நினைவுப் பரிசு வழங்கினார்.




ஓவியப் போட்டிக்கு நடுவராக வந்திருந்தவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட மாணக்கருக்குப் பங்கு பெற்றதற்கான சான்றிதழும் புத்தகப் பரிசும்  வழங்கினோம்.

பரிசு பெற்ற மூவருக்கும் நிறைவு நாளன்று மேடையில் பரிசு வழங்கப்படும் என்று திருமதி தேவி நாச்சியப்பன் அறிவித்தார்.



பங்கு பெற்றவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொடுத்த மாணாக்கியருக்கும் புத்தகப் பரிசு வழங்கினோம்.

முதலிடம் பெற்ற மூவருக்கும் எனது விடுதலை வேந்தர்கள் நூலைப் பரிசாக அளித்து மகிழ்ந்தேன்.

மணிகண்டன்.


ப்யூலா அன்னம்.


பவதாரிணி.


நிகழ்வில் எம்மைக் கலந்து கொள்ள அழைத்துக் கௌரவப்படுத்திய திருமதி தேவி நாச்சியப்பன் அவர்களுக்கு எனது நூல்களைப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தேன்.

இந்நிகழ்வில் நடுவர்கள் மூவருமே மாணாக்கருடன் சில செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம்.

மிக அருமையான நிகழ்வு. இரு குட்டி ஃபோட்டோகிராஃபர்கள். நிகழ்வை முழுமையாக்கித் தந்தமைக்கு நன்றி செல்லங்களே.

இன்னும் சில புகைப்படங்களும் என்னுரையும் சவுண்ட் க்ளவுடில் பதியப்பெற்று இன்னொரு இடுகையாகக் கொடுத்துள்ளேன்.

நன்றி திருமதி தேவி நாச்சியப்பன், கம்பன் மணிமண்டபம் & புத்தகத் திருவிழாக்குழுவினர். 

5 கருத்துகள்:

  1. மூன்றில் ஒன்றான நடுவருக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பணி
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ

    நன்றி பாலா சாஅர்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...