எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
PISA BELL TOWER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PISA BELL TOWER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 நவம்பர், 2020

பிஸாவுடன் ஒரு செல்ஃபி.

 யூரோப் டூரின் ஏழாம் நாள் இரவு ஜெனிவாவுக்குப் போனோம். பகலில் பிஸா டவரைப் பார்த்தோம். பார்த்தவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டோம். பின்னே இது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பதிநான்காம் நூற்றாண்டில் நிறைவடைந்த பெல் டவர் ஆச்சே !. ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சர்ச்சுடன் இணைந்து பெல் டவர் ஒன்றும் காணப்படுகின்றது. ஏழு நூற்றாண்டு கடந்தும் விழாம சாஞ்சே நின்று பெயர் வாங்கிருச்சு இந்த டவர். இதை உருவாக்கியவர் டியோட்டிசால்வி என்ற கட்டிடப் பொறியாளர். 

இங்கே பிஸா பாப்டிஸ்ட்ரி, பிஸா கதீட்ரல் ( சர்ச்) & பிஸா டவர் ( பிஸா பெல் டவர் ) மூன்றும் அடுத்தடுத்துக் காணப்படுகின்றன. இந்த பிஸா டவர் 55.86 மீட்டர் உயரம் உள்ளது. தோராயமா 184 அடி உயரம். இதோட அடியின் விட்டம் 57 அடி. தரைத் தளம் ( பூமி ) இந்தக் கட்டிடத்தோட எடையைத் தாங்கும் அளவு பலமா இல்லாததால இது நாலு டிகிரி சாஞ்சிருக்குன்னு சொல்றாங்க. ஐஞ்சரை டிகிரி வரை சாஞ்ச இதை 2001 வாகில் நாலு டிகிரி அளவு நிமிர்த்தி சரி செஞ்சிருக்காங்களாம். 

ஏழு மாடியோட சேர்த்து மொத்தம் 8 தளம் உள்ள கட்டிடம் இது. இரண்டரை அடி கனமுள்ள சுவர்கள், 296 படிகள். மழையும் அதுவுமா உள்ளே சுத்தி சுத்திப் போறதுக்குள்ள வழுக்குது. மேலே போனா ரெண்டு டைப் பெல் இருக்கு.  

பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட்தான் வீக்கு என்னும் வடிவேலு வசனம் அசந்தர்ப்பமாக ஞாபகம் வந்து புன்னகைக்க வைத்தது. 

வருடா வருடம் சில இஞ்சுகள் சாய்ந்து வரும் இந்த பிஸா டவர் வருடந்தோறும் கோடிக்கணக்கான உல்லாசப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இங்கே லெமன் செல்லா என்ற ட்ரிங்க் நன்றாக இருக்கும் என எங்கள் டூர் கைட் சந்தோஷ் ராகவன் பரிந்துரைத்தார். ( ஒரு பத்துத் தரமாவது சொன்னாரே என்று வாங்கிவிட்டு ரங்க்ஸ் அது ஒரே புளிப்பு. மனுஷன் குடிப்பானா என்று யாருக்கோ பரிசளித்துவிட்டார் :)


பிஸா டவருக்கு முன்னால் இருக்கும் பிஸா பாப்டிஸ்ட்ரி.இவை அமைந்திருக்கும் இடம் இத்தாலியின் டஸ்கனி. இதை பியாஸா டெல் டுமோன்னும் சொல்றாங்க. 
Related Posts Plugin for WordPress, Blogger...