ட்ரான்சிட்
எதிஹாடின் டிவியில் 2, 4, 8, 16 என்று எண்களைச் சேர்த்துக் கொண்டிருந்தான் பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஜெர்மானியன். 2048 என்றோரு எண் விளையாட்டு. காகுரே சுடோகு போல் அகிலாவுக்குப் பிடித்த எண் விளையாட்டு. நூற்றுக்கணக்கான முறை விளையாடியிருப்பாள் அவள். முப்பத்திஐயாயிரத்துச் சொச்சம் மதிப்பெண்களோடு அவளின் செல்ஃபோனில் உறைந்திருந்துக்கிறது அந்த ஆன்லைன் விளையாட்டு. நேரே நின்று லைஃப்ஜாக்கெட்டை எப்படி அணிவது எனச் சொல்லத் தொடங்கி இருந்தாள் பணிப்பெண்.