எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 மார்ச், 2019

தினமலரில் காதல் வனம் நாவல் பற்றிய நூல்முகம். :-

தினமலரில் காதல் வனம் விமர்சனம்.

நன்றி தினமலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.  

தங்கள் நாவல் கிடைத்தது. 70 நிமிடங்களில் படித்து முடித்தேன்.

ஒரு சாயுங்கால நேரத்து குட்டித்தூக்கத்தில் இருபதின் இளமையில் நிகழ்ந்திட்ட ஒருகனவு கண்டு விழித்ததுபோல ஒருசுக அனுபவத்தை மனதில் சேர்த்தது காதல்வனம் கதை.
குடும்பம் தாம்பத்தியம் என்ற சிறையில் அடைப்படாமல் இருந்திருந்தால் சாமின் மூன்றுகாதலையும் கொண்டாடியிருக்கலாம். அந்தக் கொண்டாட்ட மனநிலையை தேவி வந்து தடுத்துவிடுகிறாள்.

அந்தந்த கணத்தில் சாம் வாழ்பவனாக படைக்கப்பட்டிருந்தாலும் அது அந்தந்த நேரத்து நியாயம் என்பதை அழுத்தமாக ஏனோ பதிவு செய்யவில்லையோ என்று தோன்றுகிறது.

கதை விட்டுவிட்டு வருடிச் செல்லும் குளிர்க்காற்றாக வருடிச்செல்கிறது.

நாயகனும் நாயகியும் பாட்டுப்பித்தர்களோ. இடம்பெற்ற அத்தனை பாடல்களும் கதையை நகர்த்தும் சூழலில் பிணைந்திருந்தன. குறிப்பா எங்கள் ஊர் திருக்கண்ணபுரம் முத்துமாரியும் பாடலில் இடம்பெறுகிறது. அந்தப்பாடலை நான் கேட்டதேயில்லை.

கதையின் திருப்பங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.

முடிவு ஏதோ ஒன்றை தொக்கி நிக்க வைத்து இறைக்கிடைக்காமல் கூடு திரும்பும் பறவைப்போல பறந்து செல்கிறது. வித்தியாசமான கதை சொல்லல் நேர்த்தி சரியாக பொருந்தியே இருக்கிறது.

குறிப்பு.
மனதில் தீரா நதிதான் காதல். காமம் கலக்காதவரை அந்த நதி எல்லோர் வாழ்விலும் அவ்வப்போது விழியில் நுழைந்து கனவை பிரசவிக்கவே செய்யும்... என்பதை சொல்லாமல் சொல்லுகிறது காதல்வனம்.

பத்துவிரலுக்கும் எண்ணிவிடும் அளவில் கதாபாத்திரங்கள் அமைந்திருப்பது கதைக்கு கூடுதல் பலம்.

நன்றி.

அழகான விமர்சனத்துக்கு அன்பும் நன்றியும் தேவராஜன் ஷண்முகம் சார். :) 

3 கருத்துகள்:

 1. எப்படிதான் எழுதினாலும் எல்லோரையும் திருப்தி செய்ய முடியுமா

  பதிலளிநீக்கு
 2. நல்ல விமர்சனங்கள். வாழ்த்துகள் சகோதரி

  பதிலளிநீக்கு
 3. ஆம் பாலா சார் , கருத்துக்கு நன்றி

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...