எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 மார்ச், 2019

சாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் எச்சரிக்கும் இல்லீகல் அட்வைஸர்ஸ் !

இந்த வாரம் இல்லீகல் அட்வைஸர்ஸ் பற்றிக் கூறி எச்சரிக்கிறார் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள். 

இல்லீகல் அட்வைஸர்ஸ் !

”ஹலோ,  மிஸ்டர் ஸ்ரீனிவாசனா ?”

“யெஸ், பிளீஸ்”

“ஸார், எனக்கு ஒரு மெடி-கிளெயிம் பாலிஸி எடுக்கணும்.  இன்னைக்கே உங்கள மீட் பண்ண முடியுமா ?”

ஒரு புதுமுக முகவர் வேண்டுமானால் இந்தக் கோரிக்கையைக் கேட்டுப் பூரிப்பு அடையலாம்.  ஆனால் மேனியெங்கும் அனுபவ வடுக்கள் நிறைந்தவர்கள் சட்டென்று வீழ்வதில்லை.

லாஜிக் ரொம்ப சிம்பிள்.   நட்பு வட்டத்தில் இருப்பவர்களே பாலிஸி எடுக்கத் தாமாக முன்வருவதில்லை.  இந்த நிலையில் என்னை யார் என்றே தெரியாத ஒருவர் ஏன் என்னை அணுக வேண்டும் ?

அடுத்த சில நிமிட உரையாடலே போதும்.  அவருடைய குறிக்கோள் என்னவென்று புரிந்து கொள்ள. 


“ஸார்,  செக் கூட இல்ல.  கேஷே தர்ரேன்.  இன்னைக்கே பாலிஸிய கொடுத்துடுவீங்க இல்ல ?”

”முடியும் ஸார்”

“அப்புறம் ஒரு சின்ன டவுட்டு ஸார்.  பாலிஸி வந்தப்புறம் எத்தன நாள்ல கிளெயிம் போடலாம் ?”

”மூணு வருஷம் கழிச்சி”

“என்னது ? மூணு வருஷம் கழிச்சா ? ஏன் ஸார் ?”

“அப்பத்தான் ஸார் ஒங்களுக்குக் கிளியர் எலிஜிபிலிடீ வரும்”

“ இல்ல ஸார்,  பாலிஸீங்கறது ஒரு காண்ட்டிராக்ட்.  அதுல அவங்க எப்படி ஸார் பேக் அவுட் பண்ண முடியும் ?”

சரி,  சைத்தான் சைக்கிள்ல வருது ! (வண்டு முருகன் வாய்ஸில் படிக்கவும்)

என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியும்.  இவர் ஒரு டாக்டரைப் பார்த்திருப்பார்.  ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் வந்திருக்கும்.  அதனால் யெல்லோ பேஜஸ்ஸைப் பார்த்து என்னை அணுகியிருக்கிறார். 

அவரது நட்பு வட்டத்திலேயே ஐந்தாறு ஏஜெண்ட்டுகள் இருப்பார்கள்.  அவர்களிடம் போனால் ”முன்” விவரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.  கைவிரித்து விடுவார்கள்.  அதனால் முகம் தெரியாத ஸ்ரீனிவாசனுக்குத் தூண்டில் போட்டிருக்கிறார்.  

மெடி கிளெய்ம் பாலிஸி நாம் நினைப்பது போல் எளிதான கான்ட்டிராக்ட் அல்ல.  நுட்பங்கள் நிறைய கொண்டது. 

எளிமையாக விளக்குகிறேன்.  அறுவை சிகிச்சையிலும் டிரை கிளீங்க் போல் இரண்டு வகை உண்டு.  1. அர்ஜெண்ட் 2. ஆர்டினரி.  மெடிக்கல் ஃபீல்டில் எமெர்ஜென்ஸி மற்றும் எலெக்டிவ் என்பார்கள். 

குடல் வால் நீக்கம் (அபெண்டிக்ஸ்) முதல் கேட்டகரி.  விபத்தும் கூட அப்படியே.  கிளெய்மை செட்டில் செய்வார்கள்.  பெரிய கேள்விகள் ஏதும் இருக்காது.

மற்றபடி பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் எலெக்டிவ் வகைதான்.  கொஞ்சம் பொறுத்திருந்து செய்து கொள்ளலாம்.  ஆனால் அவற்றின் அறிகுறி ஏற்கெனவே தென்பட்டிருக்கும்.  அதை மறைத்துப் பாலிஸி எடுத்தால் உரிமத்தைப் பெறுவதில் சிக்கல்தான் வருமே ஒழிய பணம் வராது.

கேள்வியே கேட்காமல் பணம் தருவது என்பது மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் வருகிறது.  அங்கே நம் வலிமை அதிகம்.   கிளெய்ம் கவுண்டரிலும் கோர்ட்டிலும்.

இளம் வயதிலேயே ஒரு பாலிஸியை எடுத்தல் உசிதம்.  டியூ டேட் வரும் முன்னரே பணத்தைக் கட்டி விடுதல் உத்தமம்.  கிரேஸ் பீரியட் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.  நாம் பணியாற்றும் நிறுவனத்தின் மூலம் பாலிஸி இருந்தாலும் தனியாக ஒன்றை வைத்துக் கொள்வது நல்லது. 

பணியாற்றும் காலத்தில் அலுவலகத்தின் மூலமாக உரிமத்தைக் கோரலாம்.  தொகை எளிதில் கிடைக்கும்.   வேலை மாற்றம்,  ரிடயர்மெண்ட் போன்ற நிக்ழவுகளின் போது சொந்தப் பாலிஸியைப் பயன்படுத்தலாம்.

ஏதோ ஒரு கவுண்டருக்குப் போனோம்.  ஒரு படிவத்தில் கையெழுத்து போட்டோம்.  பாலிஸியை வாங்கினோம்.  எந்த விதமான மெடிக்கல் டெஸ்டும் இல்லை என்றால் பின்னாளில் நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் நம்மையே சாரும்.

இத்தனைப் பிரச்சனைகளையும் ஜீரணிக்கும் ஒரே மாமருந்து 3 வருட வெய்டிங்தான்.   பாலிஸி உரிமைத் தொகையை ஒரு நியாயமான மருத்துவச் செலவிற்குப் பெறலாம்.   

பாலிஸி  என்பது ஒரு காண்ட்டிராக்ட்.  வாடிக்கையாளர் – காப்பீட்டு நிறுவனம் இருவரின் கைக்குலுக்கல்.   ரென்யூவல் செய்ய மாட்டேன் என்று நிறுவனம் சொல்லலாம்.  அவர்களுக்கு உரிமை உண்டு.   நாம் முரண்டு பிடிக்க முடியாது.

அதனால் மெடி கிளெய்ம் பாலிஸ் எடுக்க உங்களுக்கு பரிச்சயமான அனுபவம் நிறைந்த ஏஜெண்ட்டை அணுகுங்கள்.  ”அட,  யெல்லோ பேஜஸ்ஸைப் பாத்து ஒரு ஏஜெண்ட்டைக் கண்டுபிடி.  பாலிஸியை எடுப்பியா.  கிளெய்மப் போடுவியா.  அத உட்டுட்டு சொந்தப் பணத்தச் செலவழிப்பேன்கிறியே.  நீயெல்லாம் எப்படித்தான் பொழைக்கப் போறயோ” என்று  “இல்லீகல்” அட்வைஸ் தரும் நபர்களை நம்பாதீர்கள் !

டிஸ்கி :- மிகச் சரியான எச்சரிக்கை விஷயங்கள் கொடுத்துத் தடுத்தாண்டமைக்கு நன்றி சார். மெடிக்ளெய்ம் எப்படி லீகலாகப் பெறுவது என்று அனைவருமே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். 

2 கருத்துகள்:

  1. மிக்க நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...