எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

2461. மரப்பாச்சி இலக்கிய வட்டம் மாதாந்திரக் கூடுகை

2462. அழைப்பிதழ் வந்தும் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. கானாடுகாத்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நண்பர் நலந்தா ஜம்புலிங்கம் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து பகிர்கிறேன்.


 ////இராம் மோகன் ஐயா அவர்கள், உலகெங்குமுள்ள திருக்குறள் ஆர்வலர்களைப் படையாகத் திரட்டி பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தமிழ் மறை திருக்குறள் Thirukural: The Holy Scripture எனும் மிகச் சிறந்த தொகுப்பை உருவாக்கினார்கள்.

தமிழ், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இழந்த மேன்மையை மீட்கவும் அதனினும் மேலாக உயர்ந்த ஓங்க வேண்டும் என்பது ஐயாவின் பெருங்கனவு. அக்கனவு மெய்ப்பட தமிழ் வட்டம் எனும் உலகளாவிய அமைப்பைத் தோற்றிவித்தார்கள்

அந்தத் தமிழ் வட்டம் உலகெங்கும் பிரிட்டிஷ் கவுன்சில், லயன்ஸ், ரோட்டரி அமைப்புகள் போல உலகெங்கும் கிளை விரித்து பரவ பல செயல் திட்டங்களும் வகுத்துள்ளார்கள். அறிவை வளர்க்கும் நூலகம் படிக்கம் கணனி அறை எனப் பல உள்கட்டமைப்புகளைக் கொண்ட வள்ளுவர் அறிவகம் எனும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது ஐயாவின் பெருங்கனவாகும். அதற்கு முன்னுதாரணமாக தமது சொந்த ஊரான கானாடுகாத்தான் (சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு) எனும் சிற்றூரில் ஒரு வள்ளுவர் அறிவகத்தை எழுப்ப விழைந்தார்கள்.

திருக்குறள் கற்று உணர்ந்த அந்நெறியில் வாழ்ந்த அழகப்பா இராம் மோகன் ஐயா 12.12.2019 இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி நம் செவிகளைத் தொடுவற்கு சில நாட்களுக்கு முன்னர், அவருடைய சொந்த ஊரான கானாடுகாத்தானில் அவரது கனவுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா அழைப்பிதழ் நமக்குக் கிடைத்தது.

அவரது கனவை நிறைவேற்றுவது தான் தம் கடமை என பிரிவுத் துயரின் உச்சத்திலும் கடமை பிறழாத் தலைவியாக திருமதி மீனாட்சி இராம் மோகன் அவர்கள் உறுதிபூண்டு விழா குறித்த நாளில் நடைபெறும் அறிவித்துள்ளார்கள்

நிச்சயம் அண்ணனின் எண்ணப்படி விழா சிறப்புற நடைபெறும். எங்கள் கானாடுகாத்தானுக்குக் கிடைத்த பொக்கிஷம். கணவரின் கனவுத் திட்டத்தை உரிய நேரத்தில் நிறைவேற்றும் திருமதி மீனாக்ஷி ராம் மோகன் அவர்களுக்கும் அவர்கள் தம் மைந்தருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.///

முனைவர் தெய்வத்திரு அழகப்பா ராம்மோகன் அவர்களின் வள்ளுவர் அறிவகம் அடிக்கல் நாட்டுவிழா நாளை ( 26. 12. 2019 ) எங்கள் கானாடுகாத்தானில். :)

வள்ளுவர் அறிவகம் அடிக்கல் நாட்டுவிழா இன்று கானாடுகாத்தானில் சிறப்பாக நடைபெற்றது. புகைப்படங்களுக்கும் தகவலுக்கும் நன்றி திரு. ஜம்புலிங்கம் சார்

2463. நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை..

2464. மரவைகள்.

2465. என்னது நம்ம போஸ்டை பாகிஸ்தான்லேந்து எல்லாம் வந்து லைக்கிருக்காங்க ! நமக்கே தெரியாம என்னத்தையாவது சீரியஸா எழுதித் தொலைச்சிட்டமா. :)

2466. இரட்டை ஜடை, வட்டப் பொட்டு, புடவை, பெல்ஸ், டிசைன் போட்ட கம்ஸ், ஸ்டெப் கட்டிங், பாடல் வரிகள், இசை, இரவு, கைகளைக் கட்டிக்கொண்டு சிவச்சந்திரன் படிகளில் பின்னோக்கி ஏறுவது... இந்தப் பாடல் தரும் கிறக்கத்தை எந்தப் பாடலும் தந்ததில்லை :)

ப்ளஸ்டூவின் ஏதோ ஒரு நாளில் பள்ளியின் ஏதோ ஒரு விழாவுக்கு மலேஷியாவிலிருந்து மாமா வாங்கி வந்த ப்ரிக் ரெட் நிறப் புடவையை அணிந்து சென்றபோது என்னைப் பார்த்த கண்களில் இருந்த ஆச்சரியமும், துறுதுறுப்பும் கூட இன்னும் இந்தப் பாடலை நேசிக்க வைக்கிறதோ என்னவோ

2467. சென்னையில் பிள்ளையார் நோன்பு கொண்டாடுபவர்களின் கவனத்துக்கு.

நன்றி நலந்தா ஜம்புலிங்கம் சார்
https://nalanthaa.blogspot.com/2019/12/blog-post_25.html

2468. மீண்டும் புதிய உற்சாகத்துடன் காரைக்குடியில் கம்பன் விழா ( மாதச் சொற்பொழிவுக் கூட்டம் ) 4. 1. 2020 இல் இருந்து நடைபெறப் போகிறது.
கம்பன் புகழ் பருகி கன்னித் தமிழ் வளர்க்க யாவரும் வருக

2469. அடிக்கடி முடக்கிவிடும் நத்தைக்கூட்டு மனப்பான்மையிலிருந்து வெளிவருவது எப்படி ?

2470. பாடி ஸ்ப்ரே , ரூம் ஸ்பிரே மாதிரி இந்த பெயிண்ட் வகையறாக்களையும் ஸ்பிரேக்களில் அடைத்து விற்றாலென்ன ? ஸ்விட்ச் போர்ட், வாஷ்பேஸின் இந்த இடங்கள் மட்டும் நிறம் மாறிவிடுகின்றனவே

2471. உனக்கு நீயே ஒளியாவாய்
-புத்தர்-

2472. நமது மண்வாசம் இதழின் ஆலோசகரும், காந்திய சிந்தனையாளரும் எமது வழிகாட்டியுமான திரு. மா. பா. குருசாமி ஐயா நேற்று இயற்கை எய்தினார்.

மிகத் தன்மையான மனிதர். மூன்றாண்டு காலமாக ஐயா அவர்களை சந்திக்கும் பாக்யமும், விருது பெறும் பாக்யமும் கிட்டியது.
திடீரென இன்று கிடைத்த அவரது மறைவுச் செய்தி சிறிது நேரம் செயலற வைத்தது.

அவரது ஆலோசனையாலும் திருமலை சாரின் உழைப்பாலும் இதுகாறும் நமது மண்வாசம் வெற்றிகரமான ஐந்தாவது ஆண்டை எட்டியது.
அவரது மறைவு எங்கள் பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2473. POMMES KING.. FRENCH FRIES SHOP

2474. எங்க ஆரோக்யத்தின் ரகசியம்.. சைக்கிள் ஓட்டுறதுதான்.

2475. COLOGNE CHOCOLATE MUSEUM

2476. COLOGNE CHOCOLATE MUSEUM

2477. பட்டனை அமுக்கினா சாக்லெட் கிடைக்கும் :)கொலோன் சாக்லெட் மியூசியம், ஜெர்மனி.

2478. வள்ளுவனைக் கற்றேன்; மணிவா சகம் உணர்ந்தேன்;
கள்ஊறு கம்பன் கடல்திளைத்தேன் ; - அள்ளுபுகழ்க்
காந்தி யடிகளைஎன் கண்ஆரக் கண்டிட்டேன்;
வாழ்ந்தேன்; இருந்தேன்; மகிழ்ந்து.

- இராமகாதை ஆரண்யகாண்ட நூல் முகத்தில் சொ முருகப்பனாரின் வெண்பா.

2479. உலா போறமா இல்லையா. எவ்ளோ நேரம்தான் காத்திருக்கது

2480. புரவி மேலே ஆரோகணித்திருக்கிறார் முத்துவெள்ளைச் சாத்தையனார்.
எங்கள் புரவியும் காட்டுக் கருப்பரும் , முழு உடை அணிந்த நடனப் பெண்ணும் வாத்தியக்காரர்களும் வேளாரும் கொள்ளை அழகு

டிஸ்கி :-4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...