எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 11 ஜனவரி, 2020

அன்பெனும் பிடிக்குள்..


அன்பெனும் பிடிக்குள்..

அன்பெனும் பிடிக்குள்..

இது ஒரு மணிவிழா மலர். ஆனால் இதன் கட்டுக்கோப்பும் இவ்விழா நாயகரின் சாதனைகளும் என்னை இந்நூல் பற்றி எழுதச் செய்கின்றன.

2019 நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற திரு நடேசன் அவர்களின் மணிவிழா மற்றும் நகரத்தார்களின் பண்பாட்டுக் கலாச்சார விஷயங்கள் மேன்மைகள் அடங்கிய பொக்கிஷம் இது.

பெரியோரைத் துணைக்கோடல் அதனினும் இலமே ( குறள் 444 ) என்றபடி ரவீந்திர சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி, துளாவூர் சுவாமிகள் , ஜஸ்டிஸ் திரு. ஆர் லெக்ஷ்மணன் , ஜமீன்தார் திரு. சோம. நாராயணன் செட்டியார் ஆகியோரின் ஆசியோடும் பாராட்டுரைகளோடும் இம்மலர் படைக்கப்பட்டுள்ளது. கவியரசு திரு. கண்ணதாசனின் வாழ்த்தும் அணி செய்கிறது.

நலந்தா திரு. செம்புலிங்கம் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்டு  திரு. . சுப்பையா, திருமதி சித்ரா சுப்ரமணியன், இலக்கிய மேகம் திரு. . ஸ்ரீனிவாசன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வாசமுள்ள இம்மலரைப் பூக்க வைத்துள்ளார்கள்.

பாசப்பூக்களாய் சொந்தக்காரர்களின் பாராட்டுக்களும் வாழ்த்துப்பாக்களும் இடம் பெற்றுள்ளன. ஆசியுரை, அமுதமொழி, வாழ்க்கைக் குறிப்பு, பக்திமணம், தாலாட்டு, நகரத்தார் மேன்மை, வாழிய நலம், சமூகவெளி, தொழில்வளம் ஆகிய நவரசங்களும் இடம்பெற்ற மலர் இதுவாகத்தான் இருக்கும்.

பக்திமணத்தில் விநாயகர் கவசம், முருகன் நவரத்தின மாலை, மஹாலெக்ஷ்மி அஷ்டகம், தேவாரம், திருநீற்றுப் பதிகம், திருத்தாண்டகம் ,காலவைரவர் ஸ்தோத்திரம், நாச்சியார் திருமொழியோடு குலதெய்வம், தாங்கள் சார்ந்த கோவில் தெய்வங்களுக்கான பாடல்களும் பதிகங்களும் இடம்பெற்று பக்தி மணம் பரப்புகின்றன.

தாலாட்டுப் பகுதி பூவில் ஊறும் தேன்போல் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் பகுதி. திருமதி சித்ராவின் தொகுப்பான ராமர் தாலாட்டு, வள்ளி தாலாட்டோடு குழந்தைக்கு குலப் பெருமையையும் உறவுகளின் பெருமையையும் தமிழ்ப்பாலையும் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று ஊட்டி இருக்கிறது.

நகரத்தார் திருமண நடைமுறைகள், மேன்மை, உணவு வகைகள்/உணவை ஆக்கும் வகைகள், நகைகள், கார்த்திகை தீபம், பிள்ளையார் நோன்பு, பூசை, படைப்பு, சிறு தெய்வ வழிபாடு, பழக்க வழக்கங்கள், பண்பாடு, உறவு முறைப் பெயர்கள் என எல்லாமே ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது

திருமுருக கிருபானந்த வாரியார், ஏழு நகரத்தார் பள்ளு பிரபந்தம், மகாகவி பாரதியார், தேசியகவி இராமலிங்கம் பிள்ளை, கவிமணி. தேசிய விநாயகம் பிள்ளை, சுவாமி சுத்தானந்த பாரதியார், காஞ்சி மகாப் பெரியவர், கவிஞர் நாரா. நாச்சியப்பன் ஆகியோரின் வாழ்த்துப்பாக்களும் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் இலவச முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என சமூகப் பங்களிப்பும் ஆன்மீகப் பங்களிப்பும் யெஸ் அமைப்பின் மூலம் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதும் பாரட்டப்படவேண்டியவை. கந்தர்சஷ்டி விழாவில் இவரது பங்களிப்பு அளப்பரியது.

முடிவாக நலந்தா திரு செம்புலிங்கம் அவர்களின் மணிவிழா நாயகரின் பெருமனத்துச் சிந்தனை பற்றிய கட்டுரை நல்லதொரு உணர்வைத் தந்தது. வெளிநாட்டு வணிகத்திலும் செழிக்கும் பேப்பர் கிங் அசல் வாழ்விலும் அன்பின் அரசராய் இருப்பதற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

6 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு. மணிவிழா மலர் பற்றிய அறிமுகம் நன்று.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    நன்றி டாக்டர். இதை அப்படியே நீங்க காப்பி செய்து எடுத்துக்கலாம். பிடிஎஃபை எந்த ஐடிக்கு அனுப்புவது ??

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  3. காரைக்குடியில் உள்ள நலந்தா புத்தகக் கடையில் திரு செம்புலிங்கம் அவர்களிடம் கேட்டுப் பெறலாம் சக்திவேல் கிருஷ்ணன் சார்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...