காக்கைச் சிறகினிலே - ஒரு பார்வை.
காக்கைச் சிறகினிலே
விருது அரசியலை விரிவாக அலசுகிறது தலையங்கம். கல்விக்கூடக் கொலைகள்/தற்கொலைகள் பற்றிக் காட்டமாய்த் தாக்குகிறது ஒரு கட்டுரை. கவிஞர் சேரனுடன் நேர்காணல் ஈழ இனப் படுகொலையைக் கண்டிக்கிறது.
இராணுவ முகாம்களுக்குள் இருக்கும் எனது வீடு என்ற தீபச்செல்வன் கட்டுரை பூமி யாருடையது என்ற கேள்விகளை எண்ணமெங்கும் நிறைத்தது. இன ஒடுக்குமுறை என்பது எவ்வளவு மலினமான செயல்பாடு. யதீந்திராவின் இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும் விரிவான அலசல்.
நூல் நயத்தில் மாநில சீரமைப்புக் குழுவின் தலைவர் என கே எம் பணிக்கர் பற்றிக் குறிப்பிட்டிருப்பது ஆவணம். உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை கதை பற்றி அழகிய பெரியவனின் சொல் முகவை சரியாகச் சித்தரித்துள்ளது.
ஜாராதுஷ்டிர பற்றிய ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கட்டுரையும் முன்னோரைத் தெய்வமாக வழிபடும் ( ஆறாலதேவன்) ஆறாவயல் பற்றிய ஆறாவயல் பெரியய்யாவின் கட்டுரையும் பிரமிக்க வைத்தன.
தாமிராவின் நீர்மை என்ற சிறுகதை முதுவான் பற்றி யோசிக்க வைத்தது. நாலும் அஞ்சும் என்ற கசனின் சிறுகதை ஜாதி பேதத்தின் சீர்கெட்ட சுருதியை அலறவைத்தது. திசைகளற்ற வெளி கையறு நிலையில் நிற்கும் ஒருவனின் சித்திரத்தை வரைந்தது.
விடுதி என்ற யூமா வாசுகியின் ( அடிவாலோ மஜே ஃபியேர்ஸ்) மொழிபெயர்ப்புக் கதையும் உள்ளது. வி.கே. பாலகிருஷ்ணனின் ( இந்திரா கோஸ்வாமி) யாத்திரை அஸாமின் மாவோமேரியஸ் புரட்சியைப் பற்றிப் பதறவைக்கும் கதை.
கிருஷ்ணப்ரியா, திவ்யா தனஞ்செயன், அகவி , இன்குலாப் , கி. பி. அரவிந்தன் ஆகியோரின் கவிதைகள் வெளியாகி உள்ளன. ய. மணிகண்டனின் பாரதி/பாரதிதாசன் & அருணகிரி நாதர் படைப்புகள் பற்றிய ஆய்வு, பாரதி புத்திரனின் அர்ஜுன ரதங்களும் அதன் சிற்பங்களும் வித்யாசம்.
தமிழின் முதல் மாணவர் இதழ் “ பித்தன் “ என்ற செய்தி புதிது. ஓவியர்கள் ஆதிமூலம், வீரசந்தானம், மருது ஆகியோரின் ஓவியங்கள் நூலுக்குப் பொலிவு சேர்க்கின்றன.
க. திருநாவுக்கரசுவின் ”அறம் மாஃபியாக்களை நின்று கொல்லும்” என்ற கட்டுரையும் , இரா. எட்வினின் ” ஞாயிற்றுக் கிழமையும் மாணவர்க்கில்லை “ என்ற கட்டுரையும் அதிர்ச்சி ரகம். அ.குமரனின் புலம்பெயர் இலக்கியம் ஈழ இலக்கிய வளர்ச்சியின் நீட்சி என்ற கட்டுரையும் முத்தொள்ளாயிரம் ஆங்கில மொழிபெயர்ப்பின் இலக்கியத்தாக்கமும் ஆசுவாசம் அளித்தது.
நூல்:- காக்கைச் சிறகினிலே (இலக்கியச் சிற்றிதழ்)
ஆசிரியர்:- வி,முத்தையா, இதழாசிரியர் :-வைகறை
விலை :- 20/-

நூல் விமர்சனம் அருமை!
பதிலளிநீக்குஒரே நூலா இல்லை குறிபீட கால பதிப்பா
பதிலளிநீக்குநல்லதொரு விமர்சனம்/அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ரவிச்சந்திரன் சார்
பதிலளிநீக்குஒரே நூலின் குறிப்பிட்ட காலப் பதிவுகள் , மாதாந்திரி பாலா சார்
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!