எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 ஜனவரி, 2020

ஐபிசிஎன் - 2019 நூல். IBCN - 2019.


ஐபிசிஎன் - 2019 நூல். 


துபாயில் 2017 இல் நடைபெற்ற ஐபிசிஎன் மாநாட்டையும் அதில் இடம்பெற்ற தொழில் முனைவோரின் பேட்டிகளையும் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள். இதில் எண்டர்ப்ரைனர்ஸ் ஆஃப் தெ வீக்  (EOTW COMMITTEE ) கமிட்டி மெம்பராக நம்மையும் அறிமுகம் செய்திருப்பதால் அதை அறிவிக்கவே இந்த இடுகை.


(மேலே உள்ள புகைப்படத்தில் அமர்ந்திருக்கும் மூவர் துபாய் வாழ் நகரத்தார் பெண்மணிகள். எனவே வெவ்வேறு ஊரிலும், தேசங்களிலும் இருக்கும் எங்களின் புகைப்படத்தைத் தனித்தனியாகப் போடாமல்  டீம் மெம்பர்கள் என்பதற்காக இணைத்துள்ளார்கள். ) 

முதல் பக்கம் பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர் படம், பாடுவார் முத்தப்ப செட்டியார், கவியரசு கண்ணதாசன், மகாகவி பாரதியார் ஆகியோரின் வரிகளோடு ஆரம்பமாகிறது இந்தப் புத்தகம். முழுவதும் ஆங்கிலம்தான். தலைவர் திரு சொக்கலிங்கம், செயலாளர் திரு ரமேஷ் ஆகியோரோடு ஜஸ்டிஸ் திரு ஏ ஆர் லெட்சுமணன் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றுள்ளது.

2007 இல் ஐசிஎன் என்று கோலாலம்பூரிலும், 2013இல் சிங்கப்பூரிலும், 2015 இல் கோயம்புத்தூரிலும் நடைபெற்ற இது 2017 இல் துபாயில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதோடு 2019 இல் சென்னையிலும் நடைபெற்றுள்ளது. 

திட்டமிடுதல், ஃபார்ம் படி பேட்டி எடுத்தல், தகவல் தரவுகள், எழுத்தாக்கம், ஆன்லைன் பதிவுகள் என முன் முயற்சிகளோடு தமிழ் மற்றும் ஆங்கில நூலாக்கமும் செய்திருப்பது சிறப்பு. அதேபோல் துபாய் ஐபிசிஎன் நிகழ்வுக்கு இளம் தொழில் முனைவோருக்கான போட்டிகள் வைத்துத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறார்கள். பெண் தொழில் முனைவோர்களும் நிகழ்ச்சிப் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ் முதற்கொண்டு , வரவேற்பு, தங்குமிடம் போக்குவரத்து, கேளிக்கைகள், உணவுகள், மாநாட்டுக்கான அரங்கம், அரங்க ஏற்பாடுகள், தொய்வில்லாத நிகழ்ச்சிகள் என பக்காவாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். துபாய்வாழ் நகரத்தார் அனைவரையும் விதம் விதமான கமிட்டியில் மெம்பர்களாக அமைத்துப் பங்கேற்கச் செய்திருப்பது நல்ல கட்டுக்கோப்பு.

அந்நாட்டுப் பிரபலங்களை அழைத்து சிறப்பு செய்திருப்பதும், மோடிவேஷனல் ஸ்பீக்கர்கள் கொண்டு தன்னம்பிக்கை உரை வழங்கி இருப்பதும் பாராட்டுக்குரியது. இங்கிருந்து செல்ல இயலாதவர்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப் மூலமும் உதவி அழைத்துச் சென்று பங்கேற்க வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஹேட்ஸ் ஆஃப்.

இந்நூலில் வெளிநாடு வாழ் இளையர்களுக்கான ( நம் கலாச்சாரத்தின் வேர்கள் பற்றி அறிந்து கொள்ள ) கலாச்சாரச் சுற்றுலா பற்றியும் புகைப்படங்களோடு பகிர்ந்திருக்கிறார்கள். அதேபோல் ஐபிசிஎன் நிகழ்வுக்கு வந்த பிரபலங்களோடு துபாயின் முக்கிய இடங்களைப் பார்வையிட்டிருக்கிறார்கள். சாண்ட் சஃபாரி, டெஸ்ர்ட் ஸபாரி, இரவுக் கலை நிகழ்வுகள் ஆகியற்றோடு மால்களையும் சுற்றிக் காண்பித்திருக்கிறார்கள்.

வியாபாரம் சம்பந்தமான ஏ டு இஸட் அனைத்துத் தகவல்களும், ஆலோசனைகளும் இதில் கட்டுரைகளாக, பேட்டிகளாக, நேர்காணல்களாக , மேடை நிகழ்வுகளாக இடம்பெற்றுள்ளன.

பத்தாவது வாரத்தில் இருந்து நம்ம பேட்டிகள் ஆரம்பம்.  கல்லுப்பட்டி பிரதர்ஸ் – இவங்களுக்கு நாம கொடுத்த தலைப்பு வெற்றி இணையர்கள் , 25 ஆவது வாரத்தில் கேரியிங் பேஸ்கட்ஸ் ஆஃப் கான்ஃபிடென்ஸ் - கூடை கூடையாய்த் தன்னம்பிக்கை கொடுக்கும் நம்ம விஜயலெக்ஷ்மி, 31 ஆவது வாரத்தில் தெ ட்ரையம்ப் ஆஃப் பர்சிஸ்டென்ஸ்- முயற்சி திருவினை ஆக்கும் திரு. ராஜமாணிக்கம். 43 ஆவது வாரத்தில் அச்சீவிங் சக்ஸஸ் வித் க்ளினிக்கல் ப்ரிசிஷன்- சோதனையில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி , 52 ஆவது வாரத்தில் தெ ப்ளஸண்ட் அரோமா ஆஃப் சக்ஸஸ் தன்னம்பிகையின் திருவுருவம் திருமதி சீதா ஆகியோர் பற்றிய கட்டுரை நான் பேட்டி எடுத்தது. J இவை எல்லாம் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளன.

மிக்க நன்றி ஐபிசிஎன். இவங்க எனக்கு இப்பேட்டிகளுக்காகக் கணிசமான தொகையையும் வழங்கினாங்க. அதுக்கும் நன்றி. மொத்தத்தில் ஹேட்ஸ் ஆஃப் துபாய் ஐபிசிஎன் & என்பிக் நிகழ்வுகளுக்கு J

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...