எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 3 ஜனவரி, 2020

படச்சுருள் - ஒரு பார்வை.


படச்சுருள் – ஒரு பார்வை.


படச்சுருள்

டிஸ்கவரியில் நவம்பர் 2015 இல் வாங்கி வந்த இதழை அன்றே படித்துவிட்டாலும் இன்றுதான் வலைத்தளத்தில் அதைப் பதிவிட முடிந்தது. சினிமாவுக்கென ஒரு இதழ். நடுப்பக்கப் படங்கள் இல்லாமல் அசட்டுப் பிசட்டு ஜோக்குகள், நையாண்டி இல்லாமல் சீரியஸான பேட்டிகளுடன் அதுவும் பெண் சினிமா இயக்குநர்/ஆவணப்பட இயக்குநர், நடிகைகள் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருக்கும் இதழ் இது.

பி லெனின், தியோடர் பாஸ்கரன், யமுனா ராஜேந்திரன், சொர்ணவேல், ட்ராட்ஸ்கி மருது, லீனா மணிமேகலை ஆகியோர் இதன் ஆலோசனைக் குழுவினர். இவர்களில் சொர்ணவேல், லீனா மணிமேகலை ஆகியோரின் கட்டுரைகளும் பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன.

பெல்ஜியத்தில் பிறந்த ஃப்ரெஞ்ச் பெண் இயக்குநர் அக்னஸ் வார்தா பற்றிய சொர்ணவேலின் கட்டுரை சிறப்பு. அதேபோல் ஆச்சி மனோரமா பற்றியும் சுவாரசியமாகத் தந்திருக்கிறார். ஸ்மீதா பாடீல்& சில்க் ஸ்மிதா பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும். அவர்கள் எவ்வாறு வாழ்க்கையால் துரத்தப்பட்டார்கள் அதுவும் தற்கொலை வரைக்கும் என்பதும் அதிர்ச்சியூட்டியது.

பெண் இயக்குநர்களே பெண்களின் குரலாக ஒலிக்கத் தடையாக இருப்பது எது என்ற கேள்விக்கு விடைதேடும் முயற்சியாகவேதமிழ் சினிமாவில் பெண்கள்என்னும் இச்சிறப்பிதழை வெளியிட்டுள்ளதாக இதன் ஆசிரியர் தலையங்கத்தில் கூறுகிறார்.

இயக்குநர் ஜானகி விஸ்வநாதன் குட்டி, கனவு மெய்யப்பட வேண்டும் ஆகியன எடுத்தவர் ஷாரூக் எனப் பெயரிடப்பட்ட படத்தால் பட்ட இம்சைகளைப் புட்டுவைக்கிறார்.  40 வயதில் நடிக்க வந்த லெக்ஷ்மி ராமகிருஷ்ணன் பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் சினிமாதான் என அடித்துச் சொல்கிறார்.

இயக்குநர் ரேவதி படைப்பாற்றலில் ஆண் பெண் பேதம் கிடையாது என்கிறார். வாழ்வில் தான் எதிர்கொண்ட அரசியலைத்தான் தன் படம் பிரதிபலிக்கிறது என்கிறார். திருதிரு துருதுரு இயக்குநர் நந்தினி ஜே எஸ் சிவப்புகல் மூக்குத்தி பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பகிர்ந்துள்ளார்.

ரிஷான் ஷெரிஃபின் ஹவ்வா, அஹூ, ஹூரா மூன்று விதப் பெண்கள் ஒரு கோட்டில் சந்திக்கும் ஈரானியப் படம் பற்றி விவரித்துள்ளது யதார்த்தத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தியது

மாதவிடாய் பற்றி கீதா இளங்கோவன், இதிகாச பெண் , மணற்குன்று எழுதிய ஆசிரியை& நர்த்தகியின் இயக்குநர் விஜயபத்மா , பண்பாட்டுப்புரட்சி பற்றி லீனா மணிமேகலை, பாலின பாகுபாடுகளை எதிர்கொண்டதில்லையெனக் கூறும் பிரியா பற்றிய கட்டுரைகள் காத்திரம்.  

தமிழ் சினிமாவில் பெண்கள்என்ற சிவகாமி எஸ்ஸின் கட்டுரை வெகு காட்டம். உடை, நிறம், சித்தரிக்கப்படும் விதம், திணிக்கப்படும் எதிர்பார்ப்பு, பழமையான கோட்பாடு, நவீனத்துவத்திலும் மெருகான அடிமைத்தனம், ஆண்களை சார்ந்தே கதாநாயகிகள் முடிவில் ஜெயிப்பதாகக் காட்டுவது ஆகியன குறித்து விளாசியிருக்கிறார்.

மொத்தத்தில் சிறப்பான இதழ்

நூல் :- படச்சுருள் ( மாதாந்திரி)
ஆசிரியர்:- அருண். மோ
விலை :- ரூ. 20/-

3 கருத்துகள்:

  1. புதியதொரு மாத இதழ் பற்றி உங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி சகோ.

    பதிலளிநீக்கு
  2. நன்றி

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...