எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஜனவரி, 2020

பேபி பூமர்ஸ் + ஜெனரேஷன் எக்ஸ் வெர்சஸ் மில்லென்னியல்ஸ் + ஜெனரேஷன் இஸட்.

பேபிபூமர்ஸும் மில்லெனியல்ஸும்.

அதென்ன பேபி பூமர்ஸ் என்கின்றீர்களா. அவங்க தாங்க 1940 களில் வதவதன்னு பிள்ளைகளைப் பெத்துப் போட்ட சமூகம். அப்ப மில்லெனியல்ஸுன்னா என்னன்னு கேக்குறீங்களா. சொல்றேன். 1980 களில் அரசாங்கம் பெருகிவரும் மக்கள் தொகையைக் குறைக்கக் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டமா ”நாம் இருவர் நமக்கிருவர்”னு அறிவிச்சுது. 2000 ஆம் வருடங்களில் ”நாம் இருவர் நமக்கு ஒருவர்”னு அறிவிச்சுது. இப்ப 2020 களில் நம்ம இளைய சமூகம் நாமே இருவர் நமக்கேன் ஒருவர் அப்பிடின்னு கேக்குற நிலைக்கு வந்திருக்கு. இவங்கதான் இந்த மில்லென்னியல்ஸ்.

எங்க காலத்துல நாங்க நாப்பது மைல் நடந்தே போய் பள்ளிக்கூடத்துல படிச்சோம் என்று பெருமை பேசுற இந்த பேபி பூமர்ஸை மில்லென்னியல்ஸ் ”ஓகே பூமர்ஸு”ன்னு நையாண்டி மீம்ஸ் போட்டுக் கிண்டல் பண்ணுவாங்க. இரண்டாம் உலகப்போர்க்காலத்துல அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொண்டு அதைக் கடவுள் தந்தது எனக் கருதுவது இவர்கள்தான். பீட்டில்ஸ்பாப் தில்லான்ராக் அண்ட் ரோல் , ட்ரான்ஸிஸ்டர், ரேடியோ, கிராமஃபோன், டேப் ரெக்கார்டர்சார்லி சாப்ளின்லாரல் & ஹார்டி , எம்ஜியா, சிவாஜி, கே ஆர் விஜயா காலத்தவர்.


செக்ஸுவல் ஃப்ரீடம் கிடைக்காதவர்.  பீடி,சிகரெட்சுருட்டுகஞ்சா போன்ற ரகசிய போதை உபயோகிப்பு செய்பவர் சிலர். பொருளாதார தட்டுப்பாடு உணர்ந்தவர்.  ஆன்லைனை உபயோகப்படுத்த ஆவல் ஆனால் டெக்னிக்கலாக தெரிவதில்லைசெல்ஃபோனில் எதையும் வாங்க பயம்இவர்களில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர், ஓலா போன்றவை புக் செய்பவர்ட்ரெயின்பஸ் டிக்கெட் புக் செய்பவர்  மிகக் குறைவு.  வங்கிக் கணக்கைக் கொடுக்கவும் பயம்டெக்னாலஜியைப் பார்த்து மிரட்சி.

இவர்கள் இன்சூரன்ஸ் டெப்பாசிட் போடுவார்கள்அதைப்பற்றி ஏதேனும் டிவியிலோ செய்தித்தாளிலோ வந்தால் வங்கி மூழ்கிப் போனால் தன் பணம் என்னாவது என்ற ரேஞ்சில் அதன் அலுவலகர்களிடம் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்பார்கள்.

உடல் நலத்தில் அக்கறை கொண்டு குறித்த நேரத்தில் தூங்கி குறித்த நேரத்தில் விழித்துகுறித்த நேரத்தில் உணவுண்ணுவார்கள்அதனால் முதுமையினால் ஏற்படும் உடல்வலி போன்ற நோய்கள் தவிர ஆரோக்கியமான பார்வைசெவித்திறன்பற்கள் நடை உடை கொண்டு விளங்குவார்கள்எனவே அவர்களின் வாழ்நாள் அதிகரிக்கிறது.

இன்றைய மருத்துவ டெக்னாலஜியின் உபயத்தால்  மனிதர்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்து வருகிது. முதியோர்களும் அதிகரித்து வருகிறார்கள்முதியோர் இல்லங்களில் வாழும் பெரியவர்களுக்கு சுடச் சுட மூன்று வேளையும் இதமான உணவும் பராமரிப்பும் கிடைத்தாலே அவர்கள் நோய் நொடி எல்லாம்போயே போச்சுஆயுளும் கூடுது.

இவர்கள் முன்னோர்களுக்குக் கட்டுப்பட்டே வளர்ந்தவர்கள்யுத்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்பதால்  யுத்த நெருக்கடி யுத்த பயம் உறைந்தவர்கள்சிலர் மத ஜாதி மறுப்பு செய்தாலும் அது அங்கொன்று இங்கொன்றுதான்ஆனால் அநேகர் ஜாதியையும் மதத்தையும் இனத்தையும் இறுக்கப் பற்றியவர்தேசம் குறித்த, முன்னோர் குறித்த பெருமிதம் உண்டுகருக்கலைப்புஓரினச் சேர்க்கை பற்றிப் பேசுவதே பாவம் என நினைத்தவர்கள்.

பணம் சேர்ப்பதில் ஆர்வம் அதிகம்ஆனால் அதையும் செலவுக் கணக்குப் போல சொல்லுவர்கள்தனக்குச் செலவழிப்பதே பூமிக்குப் பாரமாக இருப்பதாக நினைப்பார்கள்உயில் எழுதி கட்டு செட்டாக சொத்துக்களைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள்ஒரே பெட்டர் ஹாபுடன் பல்லாண்டுகளாக வாழ்பவர்கள்.

இவர்களுக்கும் உடல் உபாதைகள் உண்டு.  சாதனைக் குறைபாட்டால் ஏற்படும் உடலியல் மற்றும் மனவியல் நெருக்கடிமனச் சோர்வுவருத்தம் பதட்டம்அதீதக் கோபம்இளமையை அடையும் ஆவேசத்தில் செயல்படுதல் , தங்களை மையப்படுத்தி முக்கியமானவர்களாகச் செயல்படுவதுகுடும்பத் தலைவர்கள்நிறுவன மற்றும் நிகழ்ச்சித் தலைமைகள்தலைமைப் பொறுப்பில் இருந்தால் கொம்பு முளைத்தது போல் அலட்டுவது இதெல்லாம் இவர்களது குறைபாடுகள்.

உடம்பைப் பற்றியும் உடல் நோவுகளைப் பற்றியும் அதிகம் பேசிக் கொண்டிருப்பதுவீட்டில் இருப்பவர் அனைவரும் தன்னைக் கேட்டுச் செயல்படவேண்டுமென நினைப்பதுதன்னையே குடும்ப மையமாகக் கருதுவதுதன்னிடம் கேட்டுச் செய்யாவிட்டால், சொல்லிவிட்டுச் செய்யாவிட்டால் தனக்குக் கௌரவுக் குறைவு ஏற்பட்டதுபோல் கருதுவது இதெல்லாம் இவர்கள்து மைனஸ் பாயிண்ட்.

இவர்களில் பெரும்பாலோர் வசதியான பென்ஷனர்ஸ். பணத்தில் கிடுக்கிப்பிடி உள்ளவர்கள். பழமைவாதம்பண சேமிப்பு மற்றும் பணத்தைப் பற்றிய கெடுபிடி கொண்டவர்கள். செலவழிக்க மனசு வருவதில்லைவயதானவர்கள் என்பதால்  ஃபேமிலி வால்யூஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்பேப்பர் படிப்பதுநியூஸ் கேட்பதுஅரசியல் நிலவரங்களைத் தெரிந்து கொள்வதுடிவி சீரியல்களையும் விடாமல் பார்ப்பதுபெருகிவரும் இவர்கள்தான் மேஜர் ஜெனரேஷன்ஸ் ஆஃப் வெஸ்டர்ன் வேர்ல்ட்.

சைலண்ட் ஜெனரேஷன் என்பவர்கள்1920 களில் பிறந்தவர்கள்க்ரேட்டஸ்ட் ஜெனரேஷன்காரர்கள் 1900 களில் பிறந்தவர்கள்லாஸ்ட் ஜெனரேஷன் என்பவர்கள் 1900 க்கு முன்னால் பிறந்தவர்கள்.

அடுத்து ஜெனரேஷன் எக்ஸ்இவர்கள் 1960 களில் பிறந்தவர்கள்ஆசைப்பட்டதை அனுபவிக்காமல் அடுத்தவர்கள் சொல்படி கேட்டு மணந்து வாழ்ந்து பேபி பூமர்ஸுக்கும் மில்லென்னியல்ஸுக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னமாகி அப்படியே வாழ்ந்து மடிபவர்கள்இவர்களின் அதிகாரமோ ஆசையோ எங்குமே செல்லுபடி ஆவதில்லைஆமாம் சாமி போட்டே வளர்ந்தவர்கள்கருத்து சுதந்திரம் கூட அற்றவர்கள்இவர்கள் எடுப்பார் கைப்பிள்ளை.

தங்கள் அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள்.  தன்னம்பிக்கைக் குறைவுமிட்லைஃப் க்ரைஸிஸால் அவதிப்படுபவர்கள்மைக்கேல் ஜாக்சன்கமல் , ஸ்ரீதேவி, ப்ரூஸ் வில்லீஸ்லியம் நீஸன் , பாப் , ராப்,  டிவிடெக்விசிடிமிக்கி மவுஸ் காலத்தவர். பெண்களை மதித்தவர்விவாகரத்து உண்டுஎன்றாலும் கம்மி.

முன்னோர்களின் விமர்சனங்களாலும் அடக்குமுறையினாலும்  வளந்தவர்பேச்சுரிமை அற்றவர்பெரியோர் சொல்வதைக் கேட்கவேண்டும்சம்பளத்தை அப்படியே குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டுச் சரணாகதி அடைந்தவர்.தனக்கென ஒரு குறிக்கோளோ கருத்தோ இல்லாதவர்தற்போது வெளிநாடு வாழ் பிள்ளைகளுக்காகப் பிள்ளை வளர்த்துக்கொண்டு வாழ்ந்து வருபவர்.

மில்லென்னியல்ஸ்  1980 களில் பிறந்தவர்கள்இவர்கள் ஸ்ட்ராபெர்ரி ஜெனரேஷன்ஜெனரேஷன் ஸ்நோ ஃப்ளேக்., ஜெனரேஷன் Y,  9 X ஜெனரேஷன்., ஆல்ஃபா ஜெனரேஷன்ஜெனரேஷன் மீ என அழைக்கப்படுகின்றார்கள்.

ஸ்மார்ட்ஃபோன்ஃபேஸ்புக்ட்விட்டர்இன்ஃபர்மேஷன் ஏஜ்சோஷியல் மீடியாசிடி ப்ளேயர்யூ ட்யூப், இன்ஸ்டாகிராம்எமினம், லிங்க்டன்பார்க், ரிக்கி மார்ட்டின் ஃபிஃப்டி செண்ட்விஜய், அஜீத்,  ஐஸ்வர்யா ராய், டாம் க்ரூஸ் காலத்தவர்

நினைத்தால் சேர்ந்தோ திருமணம் முடித்தோ வாழ்வார் இல்லாவிட்டால் விவாகரத்து செய்து கொள்வார்ஒரே குழந்தையாய் வளர்க்கப்பட்டதால் லிட்டில் எம்பரர் சிண்ட்ரோமால் தாக்கப்பட்டவர்.

திருமணம்அதன் பொறுப்புகள் , குழந்தைகள் பெற்றுக் கொள்வதைத் தள்ளிப்போடுவது.  அல்லது ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்வது , சமூக அழுத்தம்வாழ்க்கைசெலவுகள்பொருளாதார சிக்கல்கல்வி , மருத்துவம்வேலைப்பளுபற்றாக்குறை கொண்டவர்கள். தங்கள் சமூக நிலைப்பாடுகளைத் தன்னிச்சையாக எடுப்பார்கள்இவர்களுக்கும் முந்தைய தலைமுறையினருக்கும் ஜெனரேஷன் கேப் அதிகம் உண்டு.

இவர்கள்தான் கடற்கரையைக் காக்கவும் , அபாயமான இடங்களுக்குச் சென்று புயல் நேர உதவிகள் செய்தவர்களாகவும்ஜல்லிக்கட்டுக்காகவும் உரக்கக் குரல் கொடுத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.  ஃபிட்னெஸ்ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்மத நம்பிக்கை , கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்அல் கடவுள் தத்துவம்மத மறுப்பு,  கடவுள் மறுப்புசெய்பவர்கள்பாரம்பர்யம் குடும்ப பெருமை பழக்க வழக்கம் ஆகியவற்றை மறுப்பவர்கள் இவர்களேதிருமண முடிவுகள்சேர்ந்து வாழ்தல் பற்றிப் பெரியோர்களிடம் கேட்காமல் தாங்களே முடிவெடுப்பார்கள்.

தன்னைத்தானே கடவுளாகக் கருதிக்கொண்டு க்ரீடம் சூட்டிக் கொள்பவர்களும் . மற்றவர் தம்மைப் போற்றித் துதிக்க வேண்டுமென நினைப்பவர்களும்நாயக நாயகி ( சினிமாஸ்போர்ட்ஸ் ) வழிபாடுதனிமனிதத் துதி செய்பவர்களும் இவர்களுள் சிலர் உண்டுகல்வி,வேலைவாய்ப்பு கருதி இவர்களின் எண்ணப்போக்குக்கு இவர்களில் அநேகர் வசிக்க விரும்பும் இடம் அமெரிக்காவாக இருக்கிறது.

இந்தத் தலைமுறையில் வோட்டுப் போடுதல் அதிகரித்துள்ளதுஅதேபோல் தம்மை யார் அரசாள வேண்டும் என்ற தீர்மானமான கருத்தும் கொண்டிருக்கிறார்கள்அரசியலில் ஆர்வம் இருக்கிறதுஆனால் அதிகம் ஈடுபடுவதில்லை.பராக் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தவர்களும்ஹிலாரியை அதிகமும்ட்ரம்பை ஓரளவும் அங்கீகரித்தவர்களும் இவர்களே.
ஆனால் ஹோலோகாஸ்ட்நாஸிகளின் ஆஸ்விட்ஸ் கான்சண்ட்ரேஷன்   கேம்புகள்யூத இன அழிப்புமாசேதுங்சேகுவாரா பற்றியெல்லாம் அறியாதவர்கள்.

தென்கொரியாவின் சம்போ ஜெனரேஷன் கல்விவேலைவாழ்வியல் செலவுகள், பொறுப்புக்களைக் காரணம் காட்டி பெண்பார்த்தல்திருமணம் மற்றும் பிள்ளைப்பேறை ஒத்திபோடுகிறதுஅல்லது தட்டிக் கழிக்கிறது.

தென்கொரியாவின் சம்போ ஜெனரேஷன் ஜப்பானின் சடோரி தலைமுறையைப் போன்றதுஏன் மேற்கத்திய நாடுகளில் வாழும் மில்லென்னிய இளையர் அனைவரின் வாழ்வும் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறதுநாம் ஏதாவது அதிகம் பேசினால், அட்வைஸ் சொன்னால் கருத்து சொல்றத விடுங்ககருத்து சொல்லாம இருக்க மாட்டீங்க போலிருக்கே”  என்பார்கள்.

ஜெனரேஷன் இஸட். 2000 க்கும் மேல் பிறந்தவர்கள்டெக்னாலஜியை அளவுக்கு அதிகமாகக்  கண் கெட்டுப் போகும் அளவுக்குப் பிறந்ததில் இருந்து உபயோகிப்பவர்கள் இவர்கள்தான்.

இவர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா எனவும் சொல்கிறார்கள்பழமையை மறுத்தல் அல்லது ஒதுக்குதல்ஆனால் மில்லென்னியல்களுடன் ஒப்பிடும்போது தன் கொள்கைகளில் அதிகப் பழமை வாதம் மிகுந்தவர்கள்பணம்தான் முக்கியம்அதைச் சேமிக்கக் கடுமையாக முயற்சிப்பார்கள்பணப்பற்று அதிகம் இருப்பதால் உறவுகளின் மேல் பற்று வைப்பதில்லைபணம் அனைத்தையும் சாதிக்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

தோன்றியதைச் செய்வார்கள் தோன்றும்போது செய்வார்கள்அடிக்கடி வேலை மாறுதல்அநேக வேலைகளில்கம்பெனிகளில் பணிபுரிந்தவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழவே யோசிப்பார்கள்இந்த “நாம் இருவர் நமக்கிருவர் , ஜெனரேஷன் எக்ஸ்”, நாம் இருவர் நமக்கொருவர் - ஜெனரேஷன் ஒய்”, நாமே இருவர் நமக்கேன் ஒருவர்  - ஜெனரேஷன் இஸட்” அல்லது ”நாமே ஏன் இருவராக பிடிக்காமல் கஷ்டப்பட்டுச் சேர்ந்து இருக்கவேண்டும் தனித்தனி இண்டிவிஜுவலாக இஷ்டப்பட்டுப் பிரிந்து சந்தோஷமாக இருக்கலாம்” இதுதான் ஜெனரேஷன் இஸட்லிவிங் டுகெதர் ஜெனரேஷன்.

இந்தத் தலைமுறையினரிடம் போதைப் பொருள் உபயோகிப்புசெக்ஸுவல் ஃப்ரீடம் அதிகமிருப்பதுபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்புபெண்களுக்கான ரைட்ஸ் ஆமோதிப்பும் அதிகமிருக்கிறது.

புத்திசாலித்தனம் , ஐ க்யூ அதிகமிருப்பது போலவே தனிமை, பதற்றம்வெறுமை, விரக்திநினைத்தது கிட்டாவிட்டால் சோர்ந்து போதல்பின் தன்னம்பிக்கை ஊட்டிக் கொண்டு செயல்படல்கல்விச்சாலைகளில் இனம் மதம் ஜாதி கொண்டு தனித்துவப் படுத்தப்பட்டால் உணர்வின் வாய்ப்பட்டுத் தற்கொலை செய்துகொள்ளுதல் இதெல்லாமும் ஜெனரேஷன் இஸட்டிடம் அதிகம்.

கல்விக்காக அதிகம் செலவழிப்பவர்கள்கால் நூற்றாண்டைப் படிப்பதிலேயே கழிப்பார்கள்வெளிநாடுகளில் வெவ்வேறு பாடங்களைப் பயில ஆர்வமுடையவர்கள்ஆனால் அனைத்தும் பணம் பண்ணும் வழியில் மட்டுமே  செல்வதாக இருக்கும்ஸ்டூடண்ட்ஸ் லோன், ஸ்டைஃபண்ட் அல்லது ஸ்காலர்ஷிப்புகளின் உதவியுடன்  படிப்பவர்கள் இவர்களில் பெருவாரியானவர்கள்அப்படியே அங்கேயே வேலை வாங்கி செட்டிலாகிவிடலாம் என நினைப்பார்கள்.

அதற்குத்தான் அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் படிப்பவர்கள் மூலம் அந்நியச் செலாவணி அதிகரிப்பதால் படிக்கும் வாய்ப்பை மட்டும் , அந்தக் கால அளவிற்கான விசாவை மட்டுமே வழங்குகின்றனவேலை வாய்ப்புக்கு உறுதி இல்லை.  மியாமி ஃப்ளோரிடாவில்தான் அந்தமாதிரி படிக்கும் மக்கள் அதிகம் தங்குமிடச் செலவைக் கட்டுப்படுத்த புறநகரில் தங்குகிறார்கள்டார்ம் எனப்படும் டார்மிட்டரி அல்லது பிஜிக்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்இந்தியாவில் பெங்களூரு அப்படிப்பட்ட மக்களின் சொர்க்கம்.

இவர்களின் பள்ளிப்படிப்பு வரை வாழ்க்கை சொர்க்கம்அதன்பின் தானே தேடிய போராட்டம்வறுமை, வேலைவாய்ப்பின்மையில் புழங்கும் தலைமுறை இதுவாகத்தான் இருக்கும்.வேலை வாய்ப்பு &  வசதியான வாழ்வு பெற்றவர்கள் தங்கள் சொர்க்கமான
வான்கூவருக்குப் ( கனடா ) படையெடுக்கிறார்கள். டொனால்ட் ட்ரம்பை ஆதரிப்பார்கள்.

நான் இப்பிடித்தான் இருப்பேன்இதுதான் படிப்பேன்இந்த வயதில்தான் கல்யாணம் செய்துகொள்வேன்என்ற முரட்டுப் பிடிவாதம் உண்டு. எதிர்காலத் திட்டமிடல் இவர்களுடையது மட்டுமே. பெரியோர்களுக்குப் பங்கில்லை. சுதந்திரம் இவர்கள் பிறப்புரிமைமுரட்டுத்தனமான, யார் சொல்வதையும் கேட்காத தனிமனித வாதம்தங்கள் உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.

அதேசமயம் அடுத்தவர்களின் நுண்ணுணர்வைப் புரிந்து கொள்ளுதல்தலையிடாமல் இருத்தல்தனக்கு எது வேண்டுமெனத்  தீர்மானிக்கும் தெளிவு எல்லாமும் உண்டு.  அதேபோல் எல்ஜிபிடி ( லெஸ்பியன், கே, இருபாலுறவு, மூன்றாம் பாலினம் ) யாக இருப்பவர்களையும் அவர்களது தனி உரிமை அது என ஆதரிப்பார்கள்பாலின சமத்துவம்ஓரினத் திருமணம்கலப்புத் திருமணம் ஆகியவற்றையும் ஆதரிப்பார்கள்.

இவர்கள் தங்கள் மற்றும் அடுத்தவர்களின் ப்ரைவஸிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் படிப்பு, வேலை,  திருமணம் ஆகியன தள்ளிப்போகிறதுஇண்டர்நெட் அதிகம் உபயோகிப்பதால் இவர்களில் பெரும்பாலோருக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்கிட்டப்பார்வைக்குறைபாடு உண்டு.

சாதி மதத்தை மறுப்பார்கள்நிற மத இனப் பாகுபாடு பார்ப்பதில்லைபிடித்தால் சேர்ந்து வாழ்வதிலும் மணந்துகொண்டு வாழ்வதிலும் கூடத் தயக்கமேதுமில்லைசேர்வது போல் பிரிவதிலும் தயங்குவதில்லைஇவர்களுக்கு எல்லாமே எளிதுசமூகம் என்ன சொல்லுமோ என்று சமூகத்தைப் பற்றிய கவலை இல்லைஎதையுமே குடும்பத்தினர் யாரையும் கலந்து செய்வதில்லை. எனக்குப் பிடித்ததைத்தான் செய்வேன் என்று உரக்க அறிவிப்பதில் இவர்கள் முன்னணி வகிக்கிறார்கள்சமூக அழுத்தம் கூடாது. யாரும் அவர்களைக் கேள்வி கேட்கக் கூடாது.

ஓப்போ சேடே என்பது தற்காலத்தில் இளையர்கள் கல்வி, வேலை, திருமணம், குழந்தைப்பேறு, வீட்டு நிர்வாகம் ஆகிய ஐந்து விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்வதை நிராகரிக்கிறார்கள் எனப் புள்ளிவிவரம் தருகிறதுஇதனால்தான் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பிஜிக்கள் பெருகி வழிகின்றன.

சில்போ சேடே என்பது இன்றைய தலைமுறையினரின் தனிமனித உறவுகள் மற்றும் நம்பிக்கை பற்றித் தெளிவுறுத்துகிறதுகுபோ சேடே உடல் ஆரோக்யம் மற்றும் தோற்றத்தில் இன்றைய இளம் தலைமுறையினர் கொண்டிருக்கும் அதீத ஆர்வத்தை இயம்புகிறதுசிப்போ சேடே அல்லது வான்போ சேடே என்பது முடிவாக சமூக குடும்ப வாழ்க்கையின் அனைத்துப் பங்களிப்புகளையும் விட்டு விட்டுத் தனிமைப்பட்டு வாழ்வதில் முடிகிறது.

குடும்பம் , குடும்பப் பெருமைகுலம் , குலப்பெருமைகுலபதிஇனம்மதம்ஜாதிபாலினம்பாலியல்குடும்பத் தலைமைகுடும்ப அங்கத்தினரின் கடமைகள்உரிமைகள் என்று எல்லாமே இன்று மறுவிளக்கம் செய்யப்படுகின்றனஇவர்களின் மாடர்ன் கொள்கைகளுக்கு லண்டன்தான் வாழ ஏற்ற இடமாக உள்ளது.

தனிநபரின் தனியுரிமை வாதம் பெருகி வருகிறதுமுன்பு எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தோமோ அதெல்லாம் வலிமை இழந்து வருகிறதுதாமதப்படும் கல்விதிருமணம்வேலை , பிள்ளைப்பேறு எல்லாமே தனிமனித உரிமையாகப் பார்க்கப்படுகிறதுசமூகத்தின் அழுத்தம் அல்லது குடும்பத்தின் தேவைகளோ ஆசைகளோவேண்டுகோள்களோ அதன் மேல் விழுந்து நசுக்குவதை  இந்தத் தலைமுறையினர் விரும்புவதில்லைஇளம்வயதினர் தங்கள் பாலியல்பாலியல் தேவைகள்தொழில்மதம்வேலை, வாழ்வு அனைத்திற்கும் தாங்களே தலைமை அதிகாரியாக இருக்க விரும்புகிறார்கள் என்பதுதான் நிஜம்.

MY ELDERSON'S  OPINION.

Baby boomers vs millenials and gen Z:

If you hear someone say "In our time we used to walk 400,000 kms to school.. Now u kids have it easy" you can identify a boomer.. They are sensitive, they get irritated easily and mostly they are bigoted.. Sorry to drop this truth bomb but it's not their fault.. It's the way they were raised.. And you know who's the victim? The woman of the family.. They have to agree to the patriarchichal male or else they will be branded as a woman who isn't "traditional".. Patriarchy has ruined lives, civilization and entire humanity.. And boomers still want to keep it up because it benefits them.. It benefits the men.. And if a millenial man raises a voice against it, he is branded as a "not man" if you know what I mean.. I don't want this article to be reported so I will use civil words.. A man can be sensitive and still be straight.. A man can respect woman and woman's right and still be straight.. Millenials are striving towards that.. A better future for men and woman.. And other genders as well.. You can call us "snowflakes" for being sensitive.. It's better than being a bigoted a**face..

4 கருத்துகள்:

 1. இதைத்தான் நாடி ஜோதிடம் என்று சொல்கிறார்களோ? வருபவர்  x y z மற்றும் ஆண்  அல்லது பெண் என்று நோட்டமிட்டு அதற்கேற்றவாறு மேலே எழுயுள்ளதில் எத்தையாவது சொல்லி விடலாம். Jayakumar

  பதிலளிநீக்கு
 2. இதைத்தான் நாடி ஜோதிடம் என்று சொல்கிறார்களோ? வருபவர்  x y z மற்றும் ஆண்  அல்லது பெண் என்று நோட்டமிட்டு அதற்கேற்றவாறு மேலே எழுயுள்ளதில் எத்தையாவது சொல்லி விடலாம். Jayakumar

  பதிலளிநீக்கு
 3. இந்தப்பதிவில் எழுதியவை முக்காலே மூன்று வீசம் உண்மைகளாக இருக்கிறதே

  பதிலளிநீக்கு
 4. இருக்கலாம் ஜெயக்குமார் சந்திரசேகர் சார் :)

  அட அப்படியா பாலா சார் !!!

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...