எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸில் - டாய்ச்சஸ் கிளிங்கன் மியூசியம்.

கத்தி கபடாவெல்லாம் இந்தியாவில் ஜெய்ப்பூர் போன்ற சில அரண்மனை மியூசியங்களில் மட்டுமே பார்க்கமுடியும். அதேபோல்தான் ஜெர்மனியிலும் ஸோலிங்கன் அருங்காட்சியகத்திலும் கத்திகளின் அணிவகுப்பு.

தோழி கௌசியும் அவர் கணவரும் தங்கள் காரில் இந்த ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸிலுக்கு அழைத்துச் சென்றார்கள். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை அதன் பின் பல்வேறு மராமத்துப் பணிகளால் மீண்டு அழகாக இன்னும் காட்சி அளிக்குது. 1185 இல் இருந்து 1225 வரை ஆண்ட எங்கள்பர்ட் - 2 என்னும் ராஜா கம்பீரமா கோட்டையின் தலைவாயிலில் குதிரையில் ஆரோகணித்து வரவேற்கிறார்.

ராஜாவின் கோட்டை கொத்தளம் என்பதால் கேடயம்,வில்,அம்பு, தலைக்கவசம் எல்லாம் இருந்தாலும் அங்கே இருந்த மியூசியத்தில் கத்திதான் ப்ரதான அம்சம். ஏனெனில் இதை மட்டும் கண்ணாடிக் கூண்டுக்குள் பாதுகாப்பா காட்சிப்படுத்தி இருக்காங்க. :)


இது கோட்டையின்/அரண்மனையின் மினியேச்சர்.

எத்தனை விதமான கத்திகள். இங்கே வருபவர்கள் இந்தக் கத்திகளை நினைவுச் சின்னமாகவும் வாங்கிட்டுப் போவாங்களாம். வெட்டுக் கத்தி முதல் பட்டாக் கத்தி வரை இருக்கு. க்ளிங்கன் என்றால் கத்திகள் ( knives )


பாருங்க இங்கேயும் கத்திகளின் அணிவகுப்பு. கட்லரீஸ் எனப்படும் சில்வர் கத்திகள், சமையலறைக் கத்திகள், கசாப்புக்கடைக் கத்திகள் இன்னும் பலப்பல. வெள்ளியில் கூட கத்தி இருக்குதாம்.

சாதாக்கத்திகளின் விலை சுமார் நாலரை யூரோவில் இருந்து ஆரம்பிக்குது.

இங்கே கத்தி மட்டுமல்ல வாள், வெட்டுக் கருவிகள், வில் அம்பு போன்ற ஆயுதங்களும் இருக்கு.


டீ அல்லது தண்ணீர் ஜக். இதுக்கு ஒரு பைப் வேற கொள்ளை அழகு. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மன்னர்கள் பயன்படுத்தியதா இருக்கும் போல.


இவை கேக் & சாக்லேட் அச்சுகள்/மோல்டுகள். கிறிஸ்மஸில்  & ஹாலோவியனில் & ஈஸ்டரில் எல்லாம் உபயோகிக்கும் வண்ணம் மிருகங்கள், க்ரீடம், ராஜாக்கள், நட்சத்திரங்கள் என விதம்விதமான அச்சுகள் உண்டு.


இன்னும் கொஞ்சம் கட்லரீஸ்.  ஒவ்வொரு வருடமும் மே மாதம் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இங்கே கத்தி தயாரிப்பாளர்கள் தங்கள் கத்திகளைக் காட்சிக்கு வைப்பார்களாம்.


இங்கே என்ன விசேஷம்னா பொழுதுபோக்காக்கூடக் கத்தி தயாரிப்பாங்களாம். அப்புறம் முக்கிய விஷயம் கத்தி தயாரிக்க பயிற்சிப் பட்டறையும் நடத்துவாங்களாம். !

நல்லா கத்தி செய்றவங்களுக்கு பணப்பரிசு, சர்டிஃபிகேட், அவார்டு கூட கொடுப்பாங்களாம்.

இந்த மியூசியம் போக இந்தூர்ல கத்தி வாங்குறதுக்குன்னு சந்தையே இருக்குதாம் ! கத்தி, கத்திரிக்கோல் எல்லாம் விக்குதாம். 5 யூரோ மினிமம். 15 யூரோ, 100 யூரோ ஏன் அதுக்கும் மேலே பல விலைகளில் கத்திகள் இருக்குதாம் !

அழகான வேலைப்பாடுகள் கொண்ட விதம் விதமான கத்திகளைக் கலைப்பொருட்கள் மாதிரி வாங்கிப் போய் ஷோகேஸில் அடுக்கி வைக்கிறவங்களும் இருக்காங்களாம்.

ஏன் இங்கேயே தகுந்த விளக்கத்தோடு நூற்றாண்டுக் கிரமமா கத்தியின் பயன்பாட்டைக் குறிப்பிட்டு அடுக்கி வைச்சிருக்காங்களாம்.

குழந்தைகளுக்கான தனி மியூசியம் கூட இருக்குதாம். அங்கே அவங்க இந்த ஆயுதங்களை/ப்ளேடுகளை/கத்திகளைப் புழங்கக்கூட ( பாதுகாப்போட ) முடியுமாம்.வாட்களோடு ராஜா ராணிகள் போர்க்கோலம். குதிரைகளுக்குக் கூட என்ன ஆடம்பர உடைகள். !


இவை முகக் கவசங்கள் மற்றும் கேடயங்கள். நடுவில் கைப்பிடி பதித்த ப்ராண்டட் மரவாட்கள். பின்னாலேயே ஆர்மர்ஸ் எனப்படும் ஆயுதங்கள்.

இது சோவினீர் ஷாப்பும் கூட. எனவே நினைவுச் சின்னங்கள் அதிகம் விற்கப்படுகின்றன. புத்தகங்கள், பொம்மைகள், குடிபானம், தந்தந்தால் ஆன கோப்பைகள், ஷூக்கள், உடைகளும் உண்டு.விற்களும் அம்புகளும் ஏந்திய சிறுவன்.

ஸ்கார்ஃபுகள்.

இந்தக் குதிரைக் கைப்பிடிகள்தான் என்னைக் கவர்ந்த அம்சம். இது சிறுவர்களுக்கா இல்லை பெரியவர்களுக்கா எனத் தெரியவில்லை.

கீழே ரோலர் போட்ட இரு கையாலும் பற்றக் கூடிய கைப்பிடிக் காதுகள் கொண்ட குதிரைகள் வெகு அழகு.


பென்குவின் பொம்மைகள், ஓவியங்கள் . ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார் ஷாப் கீப்பர். மரத் தரையும் க்ரிப்பாக இருக்கிறது. வித்யாசம்.  கோட்டை, போர்க்கோல ராஜா, ராணிகளின் மினியேச்சர்களும் விற்கின்றன.

மொத்தத்தில் நல்ல பயணம். அருமையான இடம். குளிரும்  மழையுமாய் சாம்பல் பூத்த மேகங்களிளூடாக கோட்டைப் பக்கம் உலவியது வித்யாசமான அனுபவம்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். திங்கட்கிழமை இந்த மியூசியம் மூடி இருக்கும். மற்ற நாட்களில்தான் திறந்திருக்கும்கிறதை ஞாபகம் வைச்சிக்கிட்டுப் பார்க்கப் போங்க. 

5 கருத்துகள்:

 1. பார்ப்பது மட்டுமல்லாமல் பதிவிடட்டுப் பாதுகாக்கின்றீர்களே. அது மிகச் சிறப்பு

  பதிலளிநீக்கு
 2. நன்றி கௌசி. எல்லாம் உங்க தயவுல பார்த்ததுதான் :)

  நன்றிஜெயக்குமார் சகோ :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...