எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 31 டிசம்பர், 2018
ஸ்ரீ லெக்ஷ்மியின் மூன்று நாவல்கள். ஒரு அறிமுகம்.
சனி, 29 டிசம்பர், 2018
சாட்டர்டே போஸ்ட் :- விவிஎஸ் சார் கூறும் ஐந்தில் விளையாதது ஐம்பதில் ..?
ஐந்தில் விளையாதது அம்பதில் ……… ? மனோஜ்குமார் தன் இரண்டு மகன்களோடு அன்று என் வங்கிக்கு வந்தார். மூத்தவன் எட்டாம் வகுப்பு. இளையவன் ஐந்தாம் கிளாஸ். ஆளுக்கொரு உண்டியலைக் கையில் ஏந்தி இருந்தார்கள். குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறப்பு முகாம் ஒன்றை எங்கள் வங்கி நடத்தியது. ஒரு வருடம் முன்பு. அப்போது கணக்கு தொடங்கிய ஒவ்வொருவருக்கும் ஒரு உண்டியல் கொடுத்தோம். தகரத்தினால் ஆனதுதான். அடிப்பக்கத்தில் சாவி போட்டுத் திறக்கும் வசதி கொண்டது. அதைத்தான் ஒரு குழந்தை ஃபைவ் ஸ்டார் சாக்கலேட்டை இறுகப் பற்றியிருப்பது போல் கையில் வைத்திருந்தார்கள்.
வெள்ளி, 28 டிசம்பர், 2018
செவ்வாய், 25 டிசம்பர், 2018
ரூஃபியின் ஆணை.
Rufina Rajkumar இந்த விளையாட்டில் என்னைச் சேர்த்திருக்கிறார். நன்றி ரூஃபி.
1. தூக்குத் தூக்கி.
”தூக்குத் தூக்கி” இந்தப் படத்தின் பாடல்கள் எனக்குப் பிடித்தன. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், சுந்தரி சௌந்தரி நிரந்தரியே,படம் முழுசா ஞாபகம் இல்லை ஆனால் இதில் முக்கியமா சிவாஜி சொன்னதையே திருப்பிச் சொல்லுவார். சின்னப் பிள்ளையில் அப்படி அம்மாவிடமும் தோழிகளிடமும் பேசிவாங்கிக் கட்டி இருக்கிறோம்ல. அதான் ரொம்பப் பிடிச்சிது :) ( கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கேட்பாள் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் நண்பன் இந்த ஐந்தையும் படத்தில் மெய்ப்பிக்க சிவாஜி முயற்சிப்பார். அதை சொல்லி என்னை யாரும் அடிக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொல்’கிறேன் :)
விளையாட்டின் விதிகள் எளிதானவை. தொடர்ந்து 10 நாட்களுக்கு, உங்களை மிகவும் பாதித்த, உங்கள் ரசனை/ சிந்தனையின் மீது ஓரளவேனும் ஆதிக்கம் செலுத்திய ஒரு திரைப்படத்தின் பிம்பம் ஒன்றை இங்கே பதிவிடவேண்டும். ஏதும் விளக்கவுரைகள் எழுதத் தேவையில்லை; படம் மட்டுமே போதுமானது; விருப்பமிருந்தால் படத்தின் பெயரைச் சொல்லலாம், மேலும் பலர் அதைப் பார்த்து ரசிக்க வாய்ப்பாக அமைய). தினம் உங்கள் நண்பர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும், விளையாட்டைத் தொடர்ந்து மேற்செலுத்திச் செல்ல.
நான் அழைப்பு விடுப்பது Revathi Narasimhan வல்லிம்மா அவர்களுக்கு
2.சபாபதி.
”சபாபதி” இந்தப் படம் என்னை பெரிசா பாதிச்சிச்சுன்னு, ஆதிக்கம் செலுத்துச்சுன்னுல்லாம் சொல்ல முடியாது. ஆனா சோவோட கண்ணு மாதிரி தெறிச்சு விழுறாப்புல முட்டைக் கண்ணோட டி ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது சிரிப்பு வரும். எங்க ஆயா வீட்டு ஐயா அடிக்கடி டெக்கில ( வி சி ஆர் ) போட்டுப் பார்ப்பாங்க. அப்போ பார்த்தது. ஏவிஎம் தயாரிப்பு. பர்ஃபெக்ட்.
நான் அழைப்பு விடுப்பது Kalyani Shankar நானானிம்மா அவர்களுக்கு.
திங்கள், 24 டிசம்பர், 2018
செலாக்குத்து ஆட்டமும் சலங்கை மனதும்.
அழகாய்த்தானிருக்கிறது
ஒளிந்தோடும் நதி.
2002. ஆடியில் நாம் ரசிக்கும் பிம்பங்கள் தன்னைத் தானே ரசித்துக் கொள்கின்றன
2003. நம்ம நடிப்புக்கும் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுற எழுத்துக்கும் அர்த்தம் இருக்கான்னு இங்க நிறையப் பெண்கள் நினைக்கலாம். இன்று எனக்கு இருவர் அதன் தாக்கம் நிச்சயமாய் இருக்குன்னு மெய்ப்பிச்சு இருக்காங்க.காலையில் ராஜ்குமார் பார்த்திபன் கௌதமியின் நடிப்பைப் புகழ்ந்து அவர் நட்பைக் கோரியது. இப்போது சாய் இந்துவின் கவிதைகளால் கவரப்பட்டு சேலம் செந்தில் அவர் கவிதைகள் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து எல்லாம் சொல்லித் தேடிட்டு இருக்காரு. பார்க்கவே சந்தோஷமா இருக்கு.
ஆமாம் சாய் இந்து டீ ஆக்டிவேட் பண்ணிருக்காங்களா.
#உலகம்_உங்களைத்_தேடுகிறது_தொடர்ந்து_செயல்படுங்கள்_பெண்மணிகளே.
2004. வீழ்ச்சிதான் பயணமென்றாலும்
தரையிறங்காமல் இருப்பதில்லை
பொங்கித் ததும்பும் அருவி.
ஞாயிறு, 23 டிசம்பர், 2018
கடமை தவறியதால் அழகை இழந்த தர்மராஜன். தினமலர். சிறுவர்மலர் - 49.
வெள்ளி, 21 டிசம்பர், 2018
புதன், 19 டிசம்பர், 2018
காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.
1142. பசுமடம் – கோசாலை, தினப்படி பூஜைக்கு கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பால் வழங்கும் பசுக்களைப் போஷித்துப் பராமரிக்கும் இடம். நகரத்தார் பரிபாலனம் செய்யும் ஒவ்வொரு கோவிலுக்கும் அநேகமாக பசுமடம் இருக்கும். இப்பசுமடத்தில் முதிர்ந்த மாடுகளையும் பராமரிப்பார்கள்.
1143. சம்போ (பூஜை) – காசியில் சிவனுக்கு செய்யப்படும் பூஜை சம்போ பூஜை. காசி விஸ்வநாதர் கோயிலில் ஆறுகாலமும் நடக்கும் பூஜை நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திலிருந்து கூடைகூடையாய்ப் பூக்கள், அபிஷேகதிரவியங்கள் ஆகியன கொண்டு செல்லப்பட்டு நடத்தப்படும். சத்திரத்திலிருந்து ஆறு காலமும் மேள தாளத்துடன் தலைமேல் பித்தளைப் பூக்குடலைகளையும் அபிஷேகப் பொருட்களையும் சுமந்து பணியாளர்கள் முன்னே செல்ல அவர்களுடன் சத்திரத்தில் தங்கி இருக்கும் நகரத்தார் மக்கள் கோவிலுக்குச் சென்று அபிஷேகத்தையும் அலங்காரத்தையும் தீபாராதனையையும் கருவறையின் படியில் அமர்ந்து தரிசிக்கலாம். இந்தப் பூஜை ஊர்வலத்த்தும் பூஜைக்கும் சம்போ பூஜை என்று பெயர்.
1144. மகேஸ்வர பூஜை – சிவனுக்கு செய்யும் பூஜை. திருமண சமயங்களில் வேண்டிக்கொண்டவர்கள் இப்பூஜையைச் செய்வார்கள். ஏழு பானைகளில் பொங்கலிட்டுப் படைப்பார்கள். மிக விமரிசையான பூஜை இது.
1145. கார்த்திகை வேல் பூஜை:- கார்த்திகை மாதத்துக்காரர்கள் ( விரதமிருப்பவர்கள் ) கார்த்திகை மாதம் ஒவ்வொரு சோமவாரமும் முருகனின் தெண்டாயுதம் வேலுக்கு அபிஷேகம் செய்து மாவிளக்கு வைத்து அர்ச்சனை செய்து ஏழுவகைக்காய்கறிகளுடன் சர்க்கரைப் பொங்கல் அன்னம் படைத்து பூஜித்து ஊரோடு உணவிட்டு உண்பார்கள். சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம், அறுபடைக் கவசம், ஸ்கந்த குரு கவசம், காவடிப் பாடல்கள், வேல் மாறல், வேல் வகுப்பு, பாமாலைப் பாடல்கள் படிப்பார்கள். இதற்கு கார்த்திகை வேல் பூஜை என்று பெயர்.
திங்கள், 17 டிசம்பர், 2018
வையாசி 19 – ஒரு பார்வை.
வையாசி 19
கரிசல் மண்ணின் கதைகளைப் போல வண்டல் மண்ணின் கதைகளைப்போல சரளையும் கரளையும் நிரம்பிய செம்மண் பூமியான செட்டிநாட்டுப் பகுதியின் கதை இது. ஒரு நூற்றாண்டுக்கான செட்டிநாட்டு வாழ்வியல் ஆவணம் என்றும் சொல்லலாம். ஏ கே செட்டியார் பயணக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள். அரு ராமனாதன் வீரபாண்டியன் மனைவி என்ற சரித்திரப் புதினம் எழுதி இருக்கிறார்கள். தமிழண்ணல் போன்றோர் சில கதைகள் எழுதி இருக்கிறார்கள். ஆனால் இப்பகுதி பற்றிய முழுமையான வாழ்வியல் நாவல் ஒன்றை இன்பாவைத் தவிர யாரும் எழுதி இருக்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை. இருந்தால் குறிப்பிடுங்கள்.
வெள்ளி, 14 டிசம்பர், 2018
யக்ஞவல்கியரை ஞானத்தால் வென்ற கார்கி வாசக்னவி. தினமலர். சிறுவர்மலர் - 48.
இவர் கார்கி முனிவரின் மகள். அந்தக் காலத்திலேயே ஆண் குழந்தைகளைப் போல் ஏழு வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டு குருகுலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் பயின்றவர். தத்துவங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் கரை தேர்ந்தவர். மிதிலாபுரி அரசர் ஜனகரின் சபையில் இருந்த ஒன்பது இரத்தினங்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர்.
புதன், 12 டிசம்பர், 2018
சிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றி அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரை ஒளி, ஒலி வடிவில்.
மேலும் பேச ஆரம்பிக்கும்போது நான் ரெக்கார்ட் செய்து கொண்டேன். அதை சின்னவன் சவுண்ட் க்ளவுடில் போட்டு அனுப்பி உள்ளான்.
செவ்வாய், 11 டிசம்பர், 2018
வான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.
1982. சுயத்தை திருப்திபடுத்தவே எழுதுகிறோம். பசி தீர்வதாயில்லை. ஆன்ம அமைதிக்குள் ஒடுங்கும் நேரம் சாத்யமாகலாம். அப்போதும் அது நீராயும் காற்றாயும் நிரம்பி இருக்கும்.
1983. Senthil ஒரே நாள்ல சாட்டர்டே போஸ்ட்/ஜாலிகார்னர் ஆல்பத்துல நூத்திப்பதினோரு போஸ்ட்லயும் லைக்ஸா. கிறுகிறுன்னு வருது. விறுவிறுன்னு எழுதி அனுப்பவும்
1984. கார்த்திக் உங்க ஃபோட்டோ போலவே வரையப்பட்ட கோலம்.
1985. ஹாஹா ட்ரெண்டிங்ல ஒரு சுவாரஸியமான விஷயம் . ( ஃபேமஸ் ) எழுத்தாளரால் ப்ளாக் செய்யப்பட்டோர் குழுன்னு ஒரு பேஜ் இருக்கு.
என்னவெல்லாம் ஆரம்பிக்கிறாங்க. . மிடில.
விளையாட்டு வினையான கதை . தினமலர் சிறுவர்மலர் - 47.
திங்கள், 10 டிசம்பர், 2018
சாக்குப் போக்குச் சொல்லாதீங்க.
சாக்குப் போக்குச் சொல்லாதீங்க
ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்ய தாமதப்படுத்திக் காரணம் சொல்பவர்களைப் பார்த்து “ சாக்குப் போக்குச் சொல்லாதீங்க “ என்று கடிவது நடைமுறை. சுறுசுறுப்பில்லாமல் வேலை செய்து கெடுப்பவர்களைப் பார்த்து “நொண்டிக்குதிரைக்குச் சறுக்கினதே சாக்கு “ என்று கிண்டலடிப்பதும் உண்டு. சாக்கு என்பது இங்கே தட்டிக் கழிப்பது என்ற பொருளில் வருகிறது. ’பை’ என்ற ஓரெழுத்துச் சொல்லுக்குத் தமிழில் சாக்கு என்றொரு அர்த்தமும் உண்டு.
!
சணல் செடியின் தண்டுகளில் இருந்து இருந்து சணல் பிரித்தெடுக்கப்பட்டுச் சாக்கு தயாரிக்கப்படுகிறது. இது வங்காளத்தில் அதிகம் விளைவதால் வங்காளத்தின் தங்க இழை என்று அழைக்கப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டில் ஸ்காட்லாண்டின் டண்டி என்ற இடத்தில் உள்ள ஆலைகளில் இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுத்துப் பயன்பாட்டுக்கு வந்தது. சணல் ஒரு பணப்பயிரும் கூட
சனி, 8 டிசம்பர், 2018
அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.
20 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் 6. 12.2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் மூன்று சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க அழைப்பு வந்தது.
பேராசிரியர் திரு. அய்க்கண் அவர்கள், பேராசிரியர் திரு. இராகுலதாசன் அவர்கள் ஆகியோரோடு வலைப்பதிவர் & எழுத்தாளரான என்னையும் தமிழ் உயராய்வு மையத்தின் இயக்குநர் திருமதி செந்தமிழ்ப்பாவை அழைத்திருந்தார்கள்.
இந்தக் கருத்தரங்கம் லெ.சித.லெ. பழனியப்ப செட்டியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.
சாட்டர்டே போஸ்ட். ஜாயிண்ட் அக்கவுண்ட் வகைகள் பற்றி விவிஎஸ் சார்.
தொடர்ந்து விவிஎஸ் சார் அவர்கள் இன்சூரன்ஸ், முதலீடு, வங்கிப் பரிவர்த்தனைகள் பற்றி என் ப்லாகுக்கு விவரங்கள் தந்துதவுமாறு கேட்டிருக்கிறேன். அதனால் இன்று அவர் ஜாயிண்ட் அக்கவுண்டில் ஃபார்மர் பற்றிச் சொல்லியிருப்பதைப் பகிர்ந்திருக்கிறேன். எனவே போனஸா சார் கொடுக்கும் விவரங்களை அறிந்து மற்றவர்க்கும் அனுப்ப வேண்டுகிறேன்.
நீங்கள் ஒரு ஃபார்மர் ஆவது சேஃப் !
எனக்கு ஒரு மகன் மட்டுமே. மனைவி இறந்து விட்டாள். மகன் கொஞ்சம் செலவாளி. அவனை எப்படி நான் ஜாயிண்ட் அக்கவுண்டில் சேர்ப்பது ? பாதுகாப்பாக இருக்காதே ?
சாட்டர்டே ஜாலிகார்னர். செந்தில் நடேசனின் - வரிசை கொடுத்ததும் வங்கி அனுபவமும்.
இவரின் முகநூல் பக்கத்தில் நிறைய தன்னம்பிக்கை போஸ்டுகள் பார்த்திருக்கிறேன். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன் . அவர் எழுதியது உங்களுக்காக இங்கே.
சாட்டர்டேன்னா இரண்டு. ஏன் பத்ரிக்கை எல்லாம் சண்டேன்னா இரண்டு பதிவு போடுறத ஆதரிக்கிறீங்கள்ல. அதுனாலதான் இன்னிக்கு விவிஎஸ் சாரோட ஜாயிண்ட் அக்கவுண்ட் பதிவும், செந்திலோட இந்தப் பதிவும். போஸ்ட் மழையில் என்ஜாய் பண்ணுங்க. :)
///பெயர்:- செந்தில் கே நடேசன் தந்தை: நடேசன் தாய்: அலமேலு ஆச்சி ஊர் :- சிலம்பவேளாங்காடு - பட்டுக்கோட்டை தொழில்: விவசாயம் தற்போதைய வசிப்பிடம்: தோஹா - கத்தார் தற்போதைய வேலை:- கொள்முதல் அலுவலர் பொழுதுபோக்கு: வாசித்தல், யோசித்தல் மற்றும் எழுதுதல் அவ்ளோதான்/////
என்னதான் கன்டினியூ ரீடிங் வர அளவுக்கு பெரிசு பெரிசா எழுதி பேஸ்புக்ல போஸ்ட் பண்ணாலும்....சார்ட்டர்டே போஸ்ட் க்கு எழுதுங்கன்னு ஆச்சி சொன்னப்போ.... ஒன்னுமே தோணல... சார்ட்டர்டே போஸ்ட்ல ஏற்கெனவே போட்ட போஸ்ட்களை எல்லாம் பார்த்தப்போ , அங்கே ஏற்கெனவே பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் எழுத வச்சிருந்தாங்க ஆச்சி....
வியாழன், 6 டிசம்பர், 2018
அழகப்பா பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாழ்த்துரை.
சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசியான் கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு 36 கவிஞர்களுள் ஒருவராகக் கவிதை சொல்லும் வாய்ப்புக் கிட்டியது. அது மலாயில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகவும் வெளிவந்தது. அங்கேயே மலாயிலும் வாசிக்கப்பட்டது.
இந்த வருடம் சிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு கருத்தரங்க ஆய்வுக் கோவையைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கும் அரிய வாய்ப்பும் கிட்டியுள்ளது.
புதன், 5 டிசம்பர், 2018
தமிழ்க்கடல் இராயசொவின் பார்வையில் மகாகவி பாரதி.
தமிழ்க்கடல் இராயசொவின் பார்வையில் மகாகவி பாரதி
தமிழ்க்கடல் திரு இராய சொ அவர்கள் எழுதிய நாம் ஆர்க்கும் குடியல்லோம் நூலானது மகாகவி பாரதியைப் பற்றியும் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்கள் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
பாரதி பாசறை அறக்கட்டளை வெளியிட்டு இருக்கும் இந்நூலில் 14 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வறக்கட்டளை மாணாக்கருக்கு பாரதி நினைவுநாளில் பல்வேறு போட்டிகள் நடத்தி பாரதி பிறந்தநாளில் பரிசுகள் வழங்கி வருகிறது. பாரதி பற்றிய நூல் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதிலும் பெரும்பங்காற்றி வருகிறது.














