எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 அக்டோபர், 2022

14,000 ஃபாலோயர்ஸும் புத்தகப் பூதமும்.

 3081.Writing is my hobby and blogging is my passion. In every meeting with ladies I insist this that they should rejuvenate their passion after retirement. 😊

3082.ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த மெல்லினம் இதழில் 'அது ஒரு நிலாக்காலம்' என்றொரு தொடரை திரு. டெல்லி கணேஷ் அவர்களும், ' பெண்மொழி' என்ற தொடரை நானும் எழுதி வந்தோம். 

3083.முகநூலில் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முகமாக நான் எனது வாசிப்பையும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அவர் பின்னூட்டத்தில் "இவ்வளவு  எழுத்தாளர்களையும் பற்றிக் கூறிய நீங்கள் கரிச்சான் குஞ்சுவை விட்டு விட்டீர்களே" எனக் கூறியிருந்தார். 

#பிறந்தநாள் வாழ்த்துகள் டெல்லி கணேஷ் சார். வாழ்க வளமுடன்.

3084.காளான் பிரியாணியா கால்கள் நான்கு கொண்ட கொழுத்த பிரியாணி என நினைத்தேன்

காலிஃப்ளவர் சாப்ஸை கால்கள் இரண்டு கொண்ட எலும்பில்லா 65 என நினைத்தேன்

ஆஹா இன்று முற்றோதல் முடிந்ததால் முடித்தீர் விரதத்தை என நினைத்தேன்

பின்னால் தானே பிரதோஷம் வருகிறது இருக்கட்டும் இருக்கட்டும் 

வந்த விருந்தோடு வயிறார உண்ணுங்கள் வளமோடு வாழுங்கள்

எனக்கு மட்டும் புத்தகங்கள் காட்டுகிறீர் காரணம் தான் என்னவோ🙄🤔🤪

-- எங்கள் வீட்டின் உணவுபற்றி ஒரு தோழியின் குறிப்புகள். :) 


3085. தேனம்மை (ஆச்சி) வீட்டிற்கு மெய்யம்மை வந்ததைக் கண்டேன்

அவளுக்குப் பின்னே

அடுத்து நிற்பது யாருடைய தங்கை...

சொல்வாயா நங்கை

-- ஹாஹா நானேதான் அந்நங்கை :) 


3086. வாவ்!!  இந்தப் புத்தகங்கள் உங்கள் சொத்து. 

மெய்யம்மையின் பின்னே அலமாரிக்கருகில் காவல் காத்து நிற்பது உங்கள் புத்தகப் பூதமாகிய நான் 🤣😂3087. #Book avail at erode book fairஉங்கள் அனைவரின் அன்போடும் ஆசியோடும் எனது 21 ஆவது நூல் வெளியாவது பற்றிப் பகிர்வதில் மகிழ்கிறேன். ஆகஸ்ட் 5 இல் ஈரோடு புக் ஃபேரில் கிடைக்கும்.

#Aug5-16th

#Stall27


3088. Bharathi pathippagam

To order the book kindly contact 9383982930

Book rate 200rs 

No postal charges 👍🏼


3089. ஈரோடு புத்தகத் திருவிழாவில் பாரதி பதிப்பகத்தின் அரங்கு எண் 27 இல்  "ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள் " என்ற எனது 21 வது நூலை எனது கணவர் திரு. லெக்ஷ்மணன் அவர்கள் வெளியிட தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் சீனியர் மேனேஜர் திரு. சுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நன்றி அனைவருக்கும் ❤️

3090. பெரியாரைப் பெற்றெடுத்த 

ஈரோட்டில் திருவிழா 

பாரதி பதிப்பகம் பார்வையாளர்கள் அதிகம் கொண்ட அகம்

அவன் கண்ட புதுமைப்பெண் தேனம்மை லட்சுமணன் அவர்கள் 

அரங்கு எண் 27 மேடை 

அரங்கேற்றம் 

 *ஒப்பற்ற இந்திய பேரரசிகள்*

இல்லத்தரசியின் இனிய நல் புத்தகத்தை 

புன்முறுவல் பூக்க புத்தொளி வீசி 

மனம் லயிக்க லக்ஷ்மன் அண்ணன்  வழங்க

மெர்க்கண்டைல் வங்கியின் மூத்த 

மேலதிகாரி சுந்தரமாய் முன் நின்று வாங்க 

நம் கண்களோ விரிய 

அவளும் எனக்காக காத்துக் கொண்டிருக்க 

என்ன தவம் செய்தனையோ  நீ🤣😆🤣


3091.சிலசமயம் மொத்த ஃபோட்டோக்களில் தனி ஃபோட்டோவைக் க்ளிக் செய்து வாழ்த்து தெரிவிக்க முடியாது. எனவே முகநூல் போல் வாட்ஸப்பிலும் லைக் செய்யும் வசதி வந்துள்ளது. நம்முடைய போஸ்டையே நாம் க்ளியர் சாட் செய்து விட்டால் யார் வாழ்த்தி உள்ளார்கள் என்பதும் தெரியாமல் போகும். நிறைய செய்திகள் இருந்தால் படிப்பது சிரமம் என்று அவ்வப்போது க்ளியர் சாட் செய்து விடுவேன். இதுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் அனுப்பலாம் வாட்ஸப் முகநூல் போல. 

3092. குறிப்பிட்ட பிரிவினரை மானசீகப் பெருமிதத்தில் ஆழ்த்தலாம் அல்லவா. நீங்கள் மேலே குறிப்பிட்ட கார்ட்டூன்படி ஒவ்வொருவரின் டர்னும் வரும் 😊

3093.மாதொரு பாகன் போன்றவற்றை ப்ரமோட் செய்தது குறித்து எனக்கு அவர் மேல் வருத்தமுண்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக இண்டர்நேஷனல் புக்ஃபேர்களில் காலச்சுவடு கோலோச்சி வருவது குறித்து மகிழ்ச்சி. காலச்சுவடு என்றால் எனக்கெல்லாம் சுராவும் ஜே ஜே சில குறிப்புகளும் உருவாக்கிய பிம்பங்கள்தான்.

ஒரு பெண்ணின் மனநிலையில் இன்னொரு பெண்ணை அப்பட்டமான சுயநலம் கொண்ட, துரோகம் செய்யும் பெண்ணாகச் சித்தரித்து இருப்பது இழிவரல் ஊட்டுகிறது. நான் சாதிய எல்லைகள் பற்றிப் பேசவில்லை. கதையின் நடையும் ஆங்காங்கே அப்படிப் பிறந்தவர்களை நையாண்டி செய்யும்.

குழந்தை பெறத் தகுதியில்லாத நாயகனின் குமுறல்கள் நம்மை அசைக்கும். அதுதான் அந்நாவலின் வெற்றி. ஆனால் அதற்காகப் பெண்ணின் குடும்பத்தார், ஏன் அவனின் அம்மாவுமே அவனை வாழத் தகுதியில்லாதவனாகப் புறக்கணிப்பது அவனுக்கு இழைக்கப்பட்ட அநியாயம். மனசொப்பி வாழும் பெண் இப்படியான செயலுக்குத் துணியமாட்டாள். அவளை ஆசிரியர் சித்தரித்த விதம் பெண்களுக்கே இழுக்கு.

கதையில் முக்காலே மூணுவீசம் விதம் விதமான இடங்களில் இருந்து குடிப்பதுதான். மரத்தின் கிளைகளில் ஏன் கிணற்றின் பொந்துகளில் கூட ஒளிந்து அமர்ந்து குடிப்பார்கள். தொட்டுக்கொள்ள சுட்ட அணிலும் எலியும் ஓணாணும் பச்சைமிளகாயுடன் 🤮

குறிப்பிட்ட ஊரில் குறிப்பிட்ட இடத்தில் வாழும் பெண்களைப் பற்றி அவதூறாக எழுதியதே இந்நூலை எரிக்கக் காரணம். இந்த ஆய்வைச் செய்ய மட்டுமல்ல. இன்னும் சர்வதேச மொழிகளிலும் மொழிபெயர்க்கவும் நிதி வழங்கப்பட்டுள்ளது. முருகன் கொண்டாடப்படுகிறார். திருநங்கை பற்றி எழுதிய முருகேசனை ஊரை விட்டே ஒதுக்கி வைத்தார்கள் புலியூர் மக்கள்.

3094. https://youtu.be/LvmIkh-dTVg

ஆச்சி ஒரு நிமிடம் பேசினாலும் அர்த்தம் செறிந்த பேச்சு. 21 வருடங்கள் தொடர்ந்து ரத்த தானம் அளித்து வரும் வெங்கடேஷ் தம்பியைப் பார்த்து ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தாய். இலட்சியவாதியின் மனைவி என்பதோடு பொதுநல சேவை செய்யும் மகனும் வாய்த்தது தவச்சிறப்பு. வாழ்க லலிதா ஆச்சி & குடும்பத்தார். ❤️💐

3095.ஏகன் அனேகன் தவக்குழுவில் மூன்றாவது ஒன்று கூடல் , காரைக்குடியில் இருந்து நேர் அலையில்

https://www.youtube.com/watch?v=Hu9Z51IOvQA

52 ஆவது நிமிஷத்தில் இருந்து 20 நிமிடங்கள் பேசுகிறேன். :) 


3096.சொ பிச்சப்ப ஐயா நூற்றாண்டுநினைவு அஞ்சலி

https://youtu.be/oM8qt2qi2d0


3097. வெட்ட வெட்டக் குறையாத மலை போல் இட்லி வளர்ந்துகொண்டே இருந்தது

3098. குடிக்கக் குடிக்கக் குடம் குடமாய்க் காப்பி தீரவேயில்லை

3099. அவமானத்தின்போதுதான் இன்பம் உச்சக்கட்டத்தை அடைகிறது.

3100. ஜூலை 14 ஆம் தேதி பிறந்த நாளைக்கு வாழ்த்துத் தெரிவிச்சவங்களுக்கு ஜூலை 15, 16 இல்தான் நன்றி சொல்ல முடிந்தது.  

வேலைகளுக்கு நடுவில் சுவாசிக்கிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் இன்னுமொரு நூலுடன் சந்திக்கணும்னு ஆசை. 

இந்த வருடமும் முகநூலிலும், மெசஞ்சரிலும், வாட்ஸப்பிலும் என்னை நினைவில்கொண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள். 

ஃபாலோயர்ஸ் 14,000 க்கு மேல் வந்தது மிரட்சி அளிக்குது. நிறைய நல்ல & நேர்மறை விஷயங்களையே பகிர விழைகிறேன்.

இன்றுவரை நான் இங்கிருப்பது என்பது உங்களின் அன்பின் ஒளியாலும்  ஊக்கத்தின் சக்தியாலும்தான் . நன்றி மக்காஸ். வாழ்க வளமுடன்.

என் பிறந்தநாளில் வாழ்த்துக் கூறிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளும் அன்பும் :) 
4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.


139. 

140. 

141. 

142.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...