எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 அக்டோபர், 2022

சமகால இலக்கியத்தில் அன்னபட்சி பற்றி அகிலா.

அன்புத்தோழி அகிலா புகழ் அவர்கள் என் அன்னபட்சி கவிதைத் தொகுதி பற்றி அழகான விமர்சனம் ஒன்றைப் புதிய பார்வை இதழில் 2015ஆம் ஆண்டு  எழுதி இருந்தார்.

அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.

அது இப்போது நூலாக்கம் பெற்றுள்ளது. பல்வேறு ஆளுமைகளின் நூல்களுடன் எனது நூல் விமர்சனமும் நூலாக்கம் பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சியும் அன்பும் அகிலா. 

நூல் பற்றி அகிலா முகநூலில் கொடுத்துள்ளதைப் பகிர்ந்துள்ளேன். நூலின் பெயர் சமகால இலக்கியத்தின் திறனாய்வு முகம். எமரால்டு பஇரு பாகங்களாக வெளிவந்துள்ளது. 


 ////சமகால இலக்கியத்தின் திறனாய்வு முகம்..

எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தஞ்சை பிரகாஷ், சுந்தர ராமசாமி, கி ரா, தஸ்தயேவ்ஸ்கி, வானம்பாடி கவிஞர்கள் என்று பலரின் படைப்புலகம் குறித்த திறனாய்வு கட்டுரைகள்..
எழுத்தாளர் எம் ஏ சுசீலா M.A. Susila, எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் Kanavu Subrabharathimanian Tirupur, கவிஞர் கலை விமர்சகர் இந்திரன் Indran Rajendran, கவிஞர் மஞ்சுளாதேவி Manjula Devi, எழுத்தாளர் ஆட்டனத்தி Writeraattanathi Dhandapani, செஞ்சி கவிஞர் செந்தில்பாலா, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி Andal Priyadarshini, கவிஞர் தனசக்தி, கவிஞர் முத்தமிழ் விரும்பி Muthamizh Virumbi, கவிஞர் தேனம்மை லக்ஷ்மணன் Thenammai Lakshmanan, முனைவர் ஆனந்த பார்த்தீபன், கவிஞர் பா கிருஷ்ணன் Krishnan Paa, எழுத்தாளர் சந்திரகுமார் (லாக்கப்), கவிஞர் பூ அ இரவீந்திரன் பூ. அ. இரவீந்திரன், எழுத்தாளர் அண்டனூர் சுரா Andanoor Sura, எழுத்தாளர் முகம்மது யூசுப் முஹம்மது யூசுப் ஆகியோரின் புத்தகங்கள் குறித்த திறனாய்வுகள்..
மற்றும் படைப்பியலில் பெண் உளவியல், சிறுகதைகள் வெளிப்படுத்தும் நடப்பியல் சமூகம், பெண்ணெழுத்தின் விழுமியங்கள், மானுட அறம் பேசும் புனைவுகள், சமகால பெண்ணியக் கவிதைகள் போன்ற பன்னாட்டு தமிழ் கருத்தரங்கங்களில் பேசிய சில ஆய்வு கட்டுரைகள்..

ஆய்வு கட்டுரைகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு அவசியமான ஒன்று என்பது தெரிந்ததே. நவீன இலக்கியத்தின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நவீன படைப்புலகம் குறித்து அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமையும். கல்லூரிகளுக்குத் தேவைபடுவோர் கீழே கொடுத்திருக்கும் எமரால்ட் பதிப்பகத்தின் தொடர்பு எண்ணை அணுகலாம்.
'சமகால இலக்கியம்' - தொகுதி 1, தொகுதி 2 புத்தகங்கள் வரும் 24ஆம் தேதி, ஞாயிறு, காலை 10 மணியளவில், கோவை விஜயா பதிப்பக அரங்கில் வெளியீடும் உள்ளது. அங்கும் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
புத்தகங்கள் வேண்டுவோர், என்னையோ அல்லது எமரால்ட் பதிப்பகத்தையோ அணுகலாம்.
விலை :
தொகுதி 1 : ரூ 250
தொகுதி 2 : ரூ 250
எமரால்ட் பதிப்பகம் 9840696574
~ அகிலா..
#சமகால_இலக்கியம்
##நவீன_இலக்கியம்
அ. ராமசாமி Tk Kalapria Ramachandran Ulaganathan Vannadasan Sivasankaran S Kannan Sundaram Bavachelladurai Bava Shylaja Vamsi Pothi பொன். குமார்///

டிஸ்கி:-

நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அகிலா.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...