எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 அக்டோபர், 2022

மதுரை புத்தகத் திருவிழாவில் எனது ஆத்திச்சூடிக் கதைகள்

 மதுரை புத்தகத் திருவிழாவில் ஆத்திச்சூடிக் கதைகள்
பிரபல பத்திரிக்கையாளரும் மதுரை தானம் அறக்கட்டளையில் இருந்து வெளிவரும் நமது மண்வாசம் இதழின் ஆசிரியருமான  திரு ப திருமலை சார் மதுரையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் எனது நூலான ஆத்திச்சூடிக் கதைகள் குறித்துப் பள்ளி மாணாக்கர்களுடன் ஒரு உரை ஆற்றியுள்ளார்..மிக மகிழ்ச்சியான அந்த நிகழ்வை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். 

நன்றியும் மகிழ்ச்சியும் திருமலை சார்.

///மதுரையில் பிரம்மாண்டமாக நடந்து வரும் புத்தக கண்காட்சியில், இந்தாண்டு  சிறப்பம்சமாக  குழந்தைகளுக்கான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வாசித்தலை மையப்படுத்தி குழந்தைகளை வாசிக்கத் தூண்டும் வகையில் பல எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இந்த குழந்தைகள் மத்தியில் பேசி வருகின்றனர். இந்த வரிசையில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ப. திருமலை, குழந்தைகள் மத்தியில்  பிரபல எழுத்தாளர் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் எழுதிய ஆத்திச்சூடி கதைகள் புத்தகத்தை வாசித்து  அதிலுள்ள கதைகளையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார். சுமார் 200 மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் திருமலை இடம் கேள்விகள் கேட்டனர். ஆத்திச்சூடி என்றால் என்ன ?அவ்வையார் யார்? ஆத்திசூடியில் உள்ள பாடல்கள் வரிகள்? நீதிநூல்கள் என்றால் என்ன? என்பன போன்ற பல கேள்விகளை மாணவர்கள் கேட்டார்கள். இதுபோல ப. திருமலை கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல சொன்ன மாணவ மாணவிகளுக்கு  ,அவர் ஆத்திச்சூடி மூதுரை நல்வழி புத்தகங்களை பரிசளித்தார் .புத்தகக் கண்காட்சியில் இந்த அமைப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது///


1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...