கதை கேட்பது என்பது எந்த வயதிலும் நமக்குப் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சி வந்தபின்னும் கதை படிப்பது என்பதும் அவ்வாறே சுவாரசியத்தைக் கூட்டுவதாகவே உள்ளது. கதை சொல்லப்படும் நேர்த்தியின்பாற்பட்டு வாசிப்பனுபவத்தை மட்டுமல்ல. அதைச்சுற்றிப் பின்னப்படும் கற்பனைகள் கொண்ட அக உலகை தனக்கு மட்டுமேயானதாக ஆக்குவதால் கதைகள் வாசித்தலின் சாரமும் வசீகரமும் என்றும் குறைந்துவிடாமலே தொடர்கிறது என்னை.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 31 டிசம்பர், 2014
செவ்வாய், 30 டிசம்பர், 2014
ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.
குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் மென்மையை மேன்மையைப் பற்றியும் அதே சமயத்தில் வாழ்வின் ஆத்ம விசாரங்களையும் தான் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் அழகான கவிதைகளில் ரசனையோடு கொடுத்துள்ளார் ராமலெக்ஷ்மி. இரண்டு விருதுகள் இவரது முதல் கவிதைத் தொகுதிக்குக் கிடைத்துள்ளன. அதுவே இத்தொகுதியின் சிறப்பைக் கூறும்.
திங்கள், 29 டிசம்பர், 2014
அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை.
அகநாழிகை இதழ் -7
அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை.
ராஜ சுந்தரராஜனின் கேளாரும் வேட்ப மொழி இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்கிறது. எது ரியலிஸம், மார்டனிஸம், போஸ்ட் மார்டனிஸம், ரொமாண்டிசிஸம், நியோ ரொமாண்டிசிஸம், பற்றி விவரிக்கிறது.கவிதையின் கணங்களை பிரித்துக் காட்டுவது எனவும் சொல்லலாம்.
வியாழன், 25 டிசம்பர், 2014
சுசீலாம்மாவின் யாதுமாகி :-
குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகம் நினைவில் ஆடியது. யாதுமாகியில் சாரு என்ற மகளின் கதாபாத்திரம் வழியாக தேவி என்ற தாயின் இறந்தகால நிகழ்கால சரிதம் எடுத்தியம்பப்படுகிறது.
முழுக்க முழுக்க ஒரு மகளின் பார்வையில் தாயின் கடந்தகாலமும், அது சார்ந்த நிகழ்வுகளும் சுற்றிச் சுற்றிச் சுழன்றடிக்கிறது நம்மை. குழந்தைத் திருமணம் ஆகி பால்ய விதவையாகும் 1900களின் ஆரம்பக் கட்டத்தில் கல்வியின் இன்றியமையாமையும் பெண்களின் நிலமையையும் ஏன் ஆண்களின் கட்டுப்பெட்டித்தனமான நிலைமையையும் விவரிக்கும் இக்கதை அங்கங்கே நம்மை உறைய வைக்கிறது.
புதன், 24 டிசம்பர், 2014
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள். 2014.
நன்றி அகநாழிகை பதிப்பகம் & அகநாழிகை பொன் வாசுதேவன்.
இது குறித்து மத்திய அரிமா சங்கத்தின் மேலாளர் அனுப்பிய கடிதம்.
செவ்வாய், 23 டிசம்பர், 2014
ரோல் மாடல் என்னுடைய பார்வையில்:-
வாழ்க்கையில் சாதிக்கத்துடிக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் யாராவது ஒருத்தர் ரோல் மாடலாக இருந்திருப்பார்கள். சிலருக்கு அவர்கள் குடும்பங்களில் இருப்பவர்களே ரோல்மாடல்களாக இருப்பார்கள். சிலருக்கு சாதனை புரிந்தவர்கள். வெற்றிபெற்ற ஒவ்வொருவரின் பின்னும் ரோல்மாடல்களின் பங்கு கட்டாயம் இருக்கும்.
இந்நூலில் தம் உழைப்பால் உயர்ந்து முன்னுக்கு வந்த 21 பேரின் சாதனைக் கதைகள் ரோல்மாடல்களாக விரிகின்றன நம் கண்முன்னே. முன்மாதிரிகள் என்பவர்கள் எப்படியும் இருக்கலாம்தானே. அது போல் இந்நூல் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் வெற்றிக்கதைகளையும் கூறுகிறது.
திங்கள், 22 டிசம்பர், 2014
யானை டாக்டர்.
டாக்டர் கே என்று அறியப்படும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்நாள் முழுவதையும் வனவிலங்குகளான யானைகளின் நலனிலும் அவற்றுக்கான மருத்துவத்திலுமே அர்ப்பணித்துள்ளார். இதை ஜெயமோகனின் கதையாகப் படிக்கும்போது மலைகளுள்ளும், காட்டிலும், யானைகளின் அருகிலும் வனாந்தரத்தின் எழிலிலும் இருப்பதை உணர முடிகிறது. அதே போல அங்கே இருக்கக்கூடிய எளிய அரிய விஷயங்களையும் மக்கள் வாழ்வியலையும் பகிர்ந்து போகிறார்.
ஞாயிறு, 21 டிசம்பர், 2014
குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்.:-
சனி, 20 டிசம்பர், 2014
சாட்டர்டே ஜாலி கார்னர், மூன்றுதாய்க்கு ஒரு மகன் முத்துராமலிங்கம் சுப்ரமணியன்
மாலைகள்
எமக்குச் சூட்டினாய்.
சிறகடிக்கும்
பறவைக்கெல்லாம்
வானத்தைப் போல மாறினாய். !.
விழியோடு நீ
குடையாவதால்
விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமாலை. !
Love You Amma. !
என் முகநூல் சகோதரர் & நண்பர் முத்துராமலிங்கம் சுப்ரமணியத்தின் முகநூல் பகிர்வு இது. குழந்தையைப் போன்ற அழகான புன்னகைக்குச் சொந்தக்காரர். அமெரிக்க மண்ணில் கோலோச்சி வரும் அவருக்குத் தற்போதுதான் திருமணமாகி இருக்கிறது.தலை தீபாவளிக்கு மனைவி கையால் சாப்பிட்ட உணவுகளைப் பட்டியலிட்டிருந்தார். காதெல்லாம் புகை வந்தது நமக்கு. :) அப்புறம் இன்னொரு நாள் சமைத்த உணவுகள் புகைப்படம் ( அவரே செய்தாரா தெரியல >> :) ) போட்டிருந்தார். பார்த்துப் பலர் மிரட்சியடைந்ததாகக் கேள்வி. ! :) அப்போது அதை எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லி நாங்க தேற்றினோம். :) ( ஹிஹி சிண்டு முடிய பலமா முஸ்தீபு செய்றேன் >:) அங்கே அவரது அம்மா டாலி பாலாவும் கமெண்ட் போட்டு தேற்றி இருந்தார்கள். ! :)
இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா. டாலி பாலா முகநூல் மூலம் அறிமுகமாகியவர். அடக் கடவுளே நான் உண்மையிலேயே அவரோட அம்மான்னுல்ல நினைச்சிருந்தேன். !. எல்லா ஃபோட்டோவிலும் கமெண்டுகளிலும் பார்த்தால் இவர்தான் அவங்க பிள்ளைன்னு சத்தியம் அடிச்சி சொல்லலாம். அப்பிடி ஒரு முக ஒற்றுமை. !!!!!!!!
வியாழன், 18 டிசம்பர், 2014
40 ஆவது ராங்க். !!!
அதை விமர்சகர் வட்டம் வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்கள். ஒரு நாயகன் என்னும் கதை முதலிடம் பெற்றிருக்கிறது. சிறப்பான கதை. ! வாழ்த்துகள். ! தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்பெண்களும் ராங்கும் , கதை பற்றிய கருத்துக்களையும் வேர்டு ஃபைலாக அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நன்றி விமர்சகர் வட்டம். !
//// விமர்சகர் வட்ட சிறுகதைப் போட்டிக்கு கதைகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. நடுவர்களின் இறுதி மதிப்பெண் இன்னும் ஒரிருநாட்களில் தெரிந்துவிடும். ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் இறுதி சுற்றிற்கு தேர்தெடுக்கப்படுகின்ற பதினைந்து கதைகள் சாரு விமர்சகர் வட்டத்தில் பகிரப்படும்.
காண்டாமணியும் பிச்சைத் தட்டும். :-
சுகம் உனக்காய்
காத்திருப்பதை விட.
ஆசனவாய் வழி அது
கபாலம் பாய்ந்தாலும்
இருப்பின் வலி குறைவு,
ஞாபகம் புரட்டிய வெளியில்
கோயில் வாசலில்
பிச்சைக்காரனாய்,
உன் கருணைக்காய்த்
தட்டேந்திக் காத்து,
போவோர் வருவோரின்
காசுகளால்
நிரம்பிக் கிடக்கிறது தட்டு.
பல்லாக்கில்
பவனிவரும் நீ..
பக்கம்கூடத் திரும்பாமல்
பதுமையாய்..
புதன், 17 டிசம்பர், 2014
காந்தி தேசம் எனது பார்வையில்:-
காந்தி தேசம்
காந்திஜியின் அகிம்சைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ, காந்தி அடிகளின் சிலை இல்லாத தமிழக நகரங்களைப் பார்ப்பது அரிது. காந்தி கனவுகண்ட தேசத்தை அமைக்கிறோம் என்பதில் முதலில் தீண்டாமை இல்லாத தேசத்தை அமைத்தல் முக்கியம் எனக் குறிப்பிடுகிறார் திருமலை தன்னுடைய காந்தி தேசம் என்ற நூலில்.
புதிய தரிசனத்தில் வந்த பதினான்கு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு காந்தி தேசம் என்ற நூலாக 2013 இல் வெளிவந்திருக்கிறது. பரபரப்புத் தகவல்களையும் சினிமா நிகழ்வுகளையும் எளியமக்களின் அந்தரங்க வாழ்வையும் பலர் காணக் கேலிக்கூத்தாகப் படைக்கும் ஊடகங்கள் காணத் தவறிய தகவல்கள் பல இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
செவ்வாய், 16 டிசம்பர், 2014
அத்தைமடி மெத்தையடி:-
திங்கள், 15 டிசம்பர், 2014
திரு ஞானக்கூத்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
நான் ரசித்த அவருடைய கவிதை ஒன்று.
//// உயர்திரு பாரதியார்
July 30, 2006சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்.
சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்,
அன்பெனும் பேராயுதம்.
102. Due to continuous travel and net problem im not able to respond for your wishes my dear friends.. Thank God and facebook for giving me such beautiful and awesome people as my friends :)
103. feeling annoyed·
104. எதனாலும் உன்னால்
வீழ்த்த முடியாது என்னை.
நான் தாங்கி இருப்பது
அன்பெனும் பேராயுதம்..
105. வாழ்வின் பக்கங்களில்
அர்த்தம் தேடிச் சலிக்கிறது
மனம்
சனி, 13 டிசம்பர், 2014
சனிக்கிழமைப் பதிவு. முரளிகிருட்டிணன் சின்னதுரையின் அகரமுதல எழுத்தெல்லாம்..
முரளிகிருட்டிணன் சின்னதுரை. முகநூல் நண்பர், சகோதரர், வயசுப்படிப் பார்த்தால் என் பிள்ளைகள் வயசுன்னும் சொல்லலாம்.
ஆங்கிலத்தில் couplets என்று சொல்வார்கள்///
///திருவள்ளுவரும், திருக்குறளும் வாஜ்பாய் காலத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள் போலும் ....///
என்றெல்லாம் அவரின் முகநூல் சுவற்றில் நிலைத்தகவல்களைப் பார்த்ததும் உடனே ஒரு கேள்வி கேட்டேன் . ஆனால் அரசியல் காரசாரம் எதுவும் வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டதற்கிணங்க. , நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இதோ.
///திருக்குறளும் திருவள்ளுவரும்.. ////
வியாழன், 11 டிசம்பர், 2014
மலைகள் எத்தனை வகைகள்.. ( MOUNTAIN DAY )
குவாலியரிலிருந்து போபாலுக்கு வரும் வழியில் விந்தியா சத்புரா மலைகள்.
ஆந்திராவில் ஹைதைக்கு அருகே உள்ள மலைகளை ஒரு ரயில் ப்ரயாணத்தின்போதே எடுத்தேன்.
செவ்வாய், 9 டிசம்பர், 2014
நிலவுத் தேனீயும் சூரியப் பட்டாம்பூச்சியும்.
பட்டாம் பூச்சிகள் சுற்றுகின்றன..
சேகரிக்கும் பூவாகிறேன்.
******************************
2. உன்னைத் தேடித்தேடிக்
களைக்கும் இமைகள்
உன் வருகைப் பூ மலர்ந்ததும்
படபடத்து பட்டாம்பூச்சியாகின்றன..
******************************
3. தங்கப் பட்டாம்பூச்சியாய் சூரியனும்
வெள்ளிப் பட்டாம்பூச்சியாய் நிலவும்
பூமிப்பூவை மாறி மாறி மொய்த்தபடி..
******************************
திங்கள், 8 டிசம்பர், 2014
காணாமல் போனவர்களும் கடத்தப்பட்டவர்களும்:-
காணாமல் போனவர்களும் கடத்தப்பட்டவர்களும்
தினமும் செய்திகளில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புப்
பார்த்திருப்பீர்கள். திருவிழாக்களுக்குச் செல்லும்போது,
எதிர்பாராத பயண விபத்துக்கள், வெள்ளம், சுனாமி ஆகியவற்றைத்
தவிர தானாகக் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போவது.
சினிமாவில் நடிக்கும் ஆசையில்,காதல் வேட்கையில்
, வீட்டில் படிக்க முடியாமல்,
அல்லது பால் வேறுபாடு உணர்வு ஏற்படுவதன்
காரணமாகவும் இது நடப்பதுண்டு..
சனி, 6 டிசம்பர், 2014
சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.
என்னுடைய வலைத்தளத்தில் சாட்டர்டே ஜாலி கார்னர், சாட்டர்டே போஸ்ட் என்ற இரு இடுகைகள் வெளியிடுகிறேன்.
வெள்ளி, 5 டிசம்பர், 2014
எழுத மறந்த கதைகள். பாகம் 1
வியாழன், 4 டிசம்பர், 2014
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் மனிதரின் காவியம்.
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் மனிதரின் காவியம்
”மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் , நீ சொன்னால் காவியம்.” என்ற திரையிசைப் பாடலைக் கேட்டிருக்கலாம். புள்ளிகள் கோடுகள் கோலங்கள் என்ற தலைப்பைப் பார்த்ததும் அந்தப் ஒரு பாடல் மனதில் ஓடியது. நிச்சயம் இந்தப் புத்தகம் ஒரு காலகட்டத்தின் காவியம்தான்.
நாடகத்துறையிலும் திரைப்படத்துறையிலும் சாதனை நாட்டிய பாரதி மணி சாரின் ”பல நேரங்களில் பல மனிதர்கள்” இவரது இலக்கியப் பயணத்தில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். புள்ளிகள் கோடுகள் கோலங்களை அதன் அடுத்த ரீச்சிங் பாயிண்ட் என்று சொல்லலாம்.
தளவாடங்கள்.
படைக்கப்பட்ட நிலம் அனைத்திலும்
புதன், 3 டிசம்பர், 2014
சாகசக்காரி ஒரு பார்வை..
சாகசக்காரி பற்றியவை
கவிஞர் தான்யாவின் இக்கவிதைகள் சாகசக்காரி பற்றியவை மட்டுமல்ல. மதம் இனம் மொழி கலாச்சாரம், காதல், பிரிவு தனிமை தேசம், குடும்பம் சார்ந்து சாகசக்காரியைப் ”பற்றியவை பற்றி” அவரின் மொழியில் ஒரு சரளமான வெளிப்பாடு.
புலம்பெயர் பெண்களின் கவிதைகளில் தான்யாவின் கவிதைகள் குடும்ப உறவில் உள்ள முரண்களைப் பதிவு செய்கின்றன. குடும்பம் ஒரு அதிகார மையமாகத் தன்னைக் கட்டுப்படுத்துவதையும் அதையும் மீறி அந்த சாகசக்காரி சாதிக்க முயல்வதையும் தன்னுடைய கவிதை மொழியில் சொல்லிச் செல்கிறார் தான்யா. புலம் பெயர் வாழ்வின் வலியையும் தனிமையையும் இரு வேறு மாறுபாடான சூழல்களை எதிர்கொள்வதையும் வாழ்வியல் அழுத்தத்தோடு சொல்கின்றன கவிதைகள்.


.jpg)












