எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 டிசம்பர், 2015

இதமாய் நீந்தவா !ப்ரியச் சரிவுகளுக்குள்
இதமாய்க் கால்புதைத்து
மெல்ல நடக்கலாம்
வா..!
ஸ்நேகமலை மீது
நிலா இதழ்களுக்குள்
அன்புக் குளிருக்குள்
கைகோர்த்து ஓடலாம்
வா..!
நீலத் தார்ச்சாலைகளில்
வெய்யில் ஷவருக்குள்
விநோதக் குளியல் எடுக்கலாம்
வா.!
இரவு ரொட்டியை
நிலவுப் பாலுக்குள் நனைத்து
நட்சத்திரச் சீனி தூவி
உண்ணலாம் வா !
பாசப்புல்வெளிகளுக்குள்
அல்லிப் பசுமை போர்த்திய
கண்மாய்களுக்குள்
ப்ரியப் பயிர் வளர்த்த
அசதி நீங்க அயர்வோம் வா
அன்பெனும் இனிமை அருவிகளில்
இதமாய் நீந்த
இதமாய் நீந்த
வா !

-- 84 ஆம் வருட டைரி.

6 கருத்துகள்:

 1. அருமையான வரிகள் ரசித்தோம் சகோ..

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி குமார் சகோ

  நன்றி ஜம்பு சார்

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...