எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 டிசம்பர், 2015

ஸ்வயம்:- (சொல்வனத்தில்)ஸ்வயம்:-

குளக்கரை
ஓ.
உன்னுள் ஏன்
இத்தனை மிதக்கும் குழப்பம்.
மேலோட்டத்தில்
அலைமோதும்
அழுக்குச் சில்லுகள்
எருமைகளின் கால்படாத
ஆழ்குளம்.
கரையோரங்களில்
மனித எச்சில்
மரங்களின் எச்சங்கள்
ஸ்லாகைகளாய் உறுத்த
அலைகள் தவழ்வது
மனிதம் துவையும் கரைகளிலும்
அழுக்குகளின் வடிசல்களிலும்.
கற்களால் உறுத்தப்படாத
எச்சங்கள் படாத
இன்னும் இளகாத ஆழ்குளம்.
நடுவில்
சுயம் விரிந்தும்
சுயம் அடங்கியும் ஆழ்குளம்.

-- 84 ஆம் வருட டைரி.

டிஸ்கி :- இந்தக் கவிதை 15 - 2 - 2015 சொல்வனத்தில் வெளியானது.  

7 கருத்துகள்:

 1. 31 ஆண்டுகளுக்கு முன்பே ’ஸ்வயம்’ ஆக எழுதி அசத்தியுள்ளீர்கள். :) பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. குளக்கரை பற்றி ஆழ்நது யோசித்தருக்கீங்க!!

  பதிலளிநீக்கு
 3. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பெ குளத்தின் ஸ்வயம்! அருமை சகோ!

  பதிலளிநீக்கு
 4. நன்றி கோபால் சார்

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி பாஸ்கர் சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...