எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 டிசம்பர், 2015

தஞ் சாவூரிலிருந்து திருச்சிக்கு.


ஒரு ரயில் விபத்தைப் பார்ப்பது
துரதிர்ஷ்டவசமானது
தூரத்து ரயிலின் வேகமறியாமல்
மடுவில் கழுவச்சென்ற கால்கள்
தவ்வியோட விட்டுப் போன நொடி
உயிர் நடுக்க ஒரு கல்லுடையும் சத்தம்.

அமர்ந்திருக்கும் அனைவரும் யமனாய் அழுத்த
இன்னும் இன்றும் விடுபட்டுச் சுற்றும் ஒற்றை உயிரும்
அதைத் தொடர்ந்த ஓலங்களும்
கொலைப்பாவிகளா என்று
அர்த்தசாம ரயிலின் கூவலில்
கழுத்தை நெரிக்கிறது.
தடமற்ற கழுத்தைத் தடவி
கடந்து செல்கிறோம் அந்த ரயில் பாதையை
ஒவ்வொரு முறையும் ரயிலின் ஓட்டத்துடன்.

ஒரே ஒரு முறை அந்த ரயிலும்
குப்புறக் கிடந்தது ஆந்திராவில் வேறெங்கோ
நம்மைத் தள்ளத் தவறி.

6 கருத்துகள்:

 1. ரயில் விபத்து - எத்தனை சோகம்.....

  சில ரயில் விபத்துகளை நேரில் பார்த்து தவித்ததுண்டு.....

  பதிலளிநீக்கு
 2. மிக மிகப் பரிதாபம் சகோ. ஒரு சில விபத்துகள் கண்டதுண்டு. அப்போது எழும் கூக்குரல்கள் நம்மைச் சில்லிட வைத்துவிடும்..

  பதிலளிநீக்கு
 3. ஆம் ஜெயக்குமார் சகோ

  ஆம் வெங்கட் சகோ

  ஆம் ஜம்பு சார்

  ஆம் துலசி சகோ & கீத்ஸ்

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...