எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 டிசம்பர், 2015

உதிரும் வசந்தம் :-12. 3. 86.

வசந்தம் :-

சிலந்தி வலைகளைப் பின்னி
உணவை உறிஞ்சும்.

கட்டிடங்கள் அழகாய்
உயரமாய்
நெருப்புக் கொழுந்துகளுடன்.


வீட்டின் சுவர்களில்
வேர்விட்ட ஆலவிதை.

கைகளில் மருதாணிகளின்
இரத்த உமிழ்தல்.

சூரிய அடுப்பால்
முற்றத்தில் கருகும் தான்யங்கள்.

போராடிப் போராடிக்
குருதிச் சகதியில்
ஈழத்தமிழர்கள்.

வஸந்தம் இலைகளாய்
உதிரும்.

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...