செவ்வாய், 1 டிசம்பர், 2015

தொட்டிப் ப்ரபஞ்சம்.

இருவருக்கே
இடநெருக்கடியான வீட்டில்
ஒரு மீன் தொட்டி வளர்த்தார்கள்
பலராய்ப் பல்கிப் பெருகினார்கள்.
வண்ணங்களை இறைத்து
அவர்கள் கோபத்தை உறிஞ்சின மீன்கள்
அதீதப் பராமரிப்பால்
அவை மூச்சுத் திணறிய காலங்களும் உண்டு.
இன்ன நேரம் என்றில்லாமல்
அவர்களுக்கு இதழ்குவித்து
முத்தங்களை வழங்கிச் செல்லும் அவை.

நீர் சூழ் தனதுலகில்
குழல்விளக்கே சூரியனாகவும் சந்திரனாகவும் ஜொலிக்க
கண்ணாடிக்குப் பின்னே பிரபஞ்சம்
வேண்டியிருக்கவில்லை அவற்றுக்கு.
பக்கத்துவீட்டு பொம்முவும்
மீன்களுடன் சிநேகமானபோது
தொட்டி ரோஜாக்களும் பூக்கத் துவங்கி இருந்தன
அவர்கள் குடிலில்.


5 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட சகோ அருமை.....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி துளசி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...