எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 டிசம்பர், 2015

வாழ்க்கை.அடிப்பிடித்துக் கொள்ளும்
அடுப்படி நெருப்பாய்,
வாழ்க்கையும்.


முதுகு சொறிந்து
கொள்ளும் விசிறிக்காம்பாய்
கீறல்பிடித்துக் கிடக்கும்
வாழ்க்கையும்.

பட்டுப் பூச்சிகளின்
அழகுச் சிறகுகளாய்
அப்பும் வண்ணமாய்
வாழ்க்கையும்.

உரிப்பவனை அழவைத்துவிட்டு
சூன்யத்தில் முடியும்
வெங்காயமாய்
வாழ்க்கையும்.

அழுத்தி எழுத்தப்பட்டு
எழுதப்பட்டு
சாய்ந்துபோன மேஜையாய்
வாழ்க்கையும்.

காலம் தாழ்த்தி
முகவரி தவறிவந்த
கடிதமாய்,
வாழ்க்கையும்.


5 கருத்துகள்:

 1. காலம் தாழ்த்தி
  முகவரி தவறிவந்த
  கடிதமாய்,
  வாழ்க்கையும்.//

  பலரது வாழ்க்கையும் இப்படித்தான்...அருமை..

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி நாகேந்திர பாரதி சகோ

  நன்றி துளசி சகோ உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...