எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

வாழ்க்கை:- 212. 3. 86.

வாழ்க்கை:-

விராட்டிகள் கொடுத்து
சாம்பல் வாங்கும் வியாபாரம்.

உப்பு நீருறுஞ்சி
இளநீர் கொடுக்கும் தென்னை.


காலமென்னும் மையுறுஞ்சிக்
காய்ந்துபோகும் பேனா.

வெளிச்சமும் குளிரும்
விளையாடும் ஜன்னல்.

அரைபட்டுத்
தேய்ந்துபோன குழவி.

பூத்துப் பட்டுப் போன
போகன்வில்லா. ( பூச்செடி )

வீடாய்க் கட்டப்பட்டு
இடிபடும் செங்கல்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...