எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஐயா.7.3.86.

சிப்பியதுள்ளே
முத்தாய் என் எண்ணம்.
சிப்பியது திறக்கும்
எண்ணமுத்தின்
ப்ரவேசமாய்
இக்கவிதை.

ஐயா
ஒரு அற்புதமான தலைவராய்.


இது
உங்களின்
புதுப்பரிமாணம்.

போர்க்களத்தில்
கீதோபதேசம்
செய்த கிருஷ்ணனாய்
இந்தக்
கலியுகக் குருஷேத்திரத்தில்
நீங்கள்.  ( வழிகாட்டி )

பாண்டவர்கள் சார்பாய்
தர்மத்தின் சார்பாய்,
அம்பு எய்ய
மட்டுமே பழகிய
இந்திய அர்ஜுனர்களுக்குக்
குறி பார்க்கக்
குறிப்புணர்த்தும்
துரோணாச்சாரியாராய்
உங்களின்
வெளிப்பாடு
ப்ரகாசமடையட்டும்.

கீதாஞ்சலியின்
பிரதி’நிதி’யாய் நீங்கள்.

விருக்ஷத்தின் நிழலில்
பயணிகளின்
இளைப்பாறல் நடப்பதுபோல்
உங்கள் அறிவெனும்
ஜீவ நதியில்
அனைவரும்
நனையட்டும்.

இந்தத் தாவரங்கள்
கிளை விட்டு
வேர்பரப்பித் தழைக்க
ஐப்பசி அடைமழையாய்
நீங்கள் தேவை.

வர்ஷித்துப் பொழியும்
உங்கள்
அன்பெனும் மழையில்
கற்களும்
கதிர்களாகட்டும்.

புற்களும்
பாசம் வெளிப்படுத்தட்டும்.

மரங்களும்
மனிதம் பெறட்டும்.

மானுட வீணைகள்
மனிதாபிமானம் பெற்று
பூபாளம் பாடட்டும்.

இந்த
மானுட மந்தைகளுக்கு
மேய்ப்பனாய்,
வழி நடத்தி
வழி கொடுங்கள்,
விவேகானந்தராய்.


உங்கள் ஆட்சியிலே
மானுட நேயங்கள்
பொலியட்டும்.

குரோதங்கள் நீங்கி
குணங்கள் தழைக்கட்டும்.

பரம்பொருளே !
எம் ஐயாவின்
நல்முயற்சிக்கு
அருள் செய்.

இங்ஙனம் வாழ்த்தும்
ப்ரிய பேத்தி,
ச. தேனம்மை.


7 கருத்துகள்:

 1. தொடர்ந்து பார்க்கிறேன் பதிவுகளை. ஒவ்வொன்றிலும் ஒரு செய்தி.

  பதிலளிநீக்கு
 2. மிகவும் இரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 4. ஐயா ஐயா,

  உங்கள் பேத்தியின் வரிகளை ரசித்தோம் ஐயா...அப்போதே இப்படி எழுதி வேண்டிய ஆசிகளால் இப்போது ஒளிர்வதற்குக் காரணமே உங்கள் ஆசிகள்தானோ!!!

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஜம்பு சார்

  நன்றி ரமணி சகோ

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி ஜீவலிங்கம் சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ் .

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...