எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 10 டிசம்பர், 2015

மாலை நேரப் பறவை.16.9.86.

நேரமோ
வெள்ளமாய்ப் பொங்கும்.


மாட்டின் வாய்
உணவாய் மனசு.

குகையுள்
நடுங்கும் தீபமாய்
ப்ரஸன்னமாகும்
உன் நினைவு.

கொட்டிலுக்குள்
மழைநீராய்
கலங்கும் இருப்பு.

மனமோ
மாலைநேரப் பறவைகளாய்க்
கூட்டுக்குள் வரவிருக்கும்
உனை
எதிர்பார்த்து. 


5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...