எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2015

சூரிய இரை.7.5.86.

32. *சில பறவைகள்
சிறகை இழந்தபின்னும்
பறந்துகொண்டிருக்கும் பிரம்மையில்


*சில கிளைகள்
தாம் வெட்டி எறியப்பட்டது
‘வேறொரு இடத்தில்
நடப்படுவதற்கென்ற’ நினைப்பில்.

*நிஜமென்னும் கொசுக்கள்
நுகத்தடி மாட்டும்,
மனசுப் பெண்ணின்
சந்தோசத் துளைக்குள்.

*விடியல் வரும்
என்ற எதிர்பார்ப்பில்
காகங்களும்
சேவல்களும்.

*செடிகள் பசியடைக்க
சூரிய இரைக்காய்க்
காத்திருக்கும்.

*மனசு கனவுகளில்.
மாடுகளோ கொட்டில்களில்.1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...