எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

உனக்கென்ன.அந்த நந்தவனங்கள்
யாருக்காகவோ
பூத்தூவினால்
நீயேன்
சுருள வேண்டும்.


அந்த நட்சத்திரங்கள்
யாருக்காகவோ
சாம்பலாகிக் கொண்டிருக்க
ஏன் வருந்துகிறாய்
நீ ?

அந்தத் தாவரங்கள்
மலையுள்ளே
வேர்விரித்துக் கொண்டால்
உனக்கென்ன நஷ்டம். ?

குளம்
அலைகளை உருவாக்கமாட்டேன்
என்றால்
என்ன செய்யமுடியும்
உன்னால் ?


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...