எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2015

வண்டி மாடு7.5.86.

33. *வண்டிக்காரனை
ஏய்க்கும் மாடு.


*கழுத்துமணித் தாலாட்டில்
தூங்கவைத்து
அவனைக்
கடவெல்லாம் இழுத்துச்
செல்லும் வண்டிமாடு.

*கடிவாளக் கைகளைத்
தளரவைத்து
கால் போக்கில்
கடந்துபோகும் ஒற்றைமாடு.

*நுகத்தடியைக்
கழற்றிவிட்டு
ஜோடி தேடிக்
கொட்டில் தோறும்
சுற்றிவரும் காளை மாடு.

*சாட்டையசைப்பில்
கனவுகளை உதறித்தள்ளி
சுதி பார்த்துக்
கதி எண்ணி ஓடும் மாடு.

*வண்டிக்காரனை
மேய்க்கும் மாடு.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...