எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

அனுபவம்.12.3.86.

அனுபவம்.

இரயில் வரும்
இரயில் வரும்
பயணிகளைச் சந்திக்கலாம்.
என்னிடம் இருக்கும்
ஞானம் விற்று
கூட்டியோ குறைத்தோ
ஞானம் வாங்கலாம்
பிஞ்சும் பூவும்
கனியும் காயும்
பூத்துக் குலுங்கும்
இரயில் வரும்.
மூளையெனும் கூடையில் ஏந்தி
பெட்டிகள் தோறும்
பிச்சைக்காரனாய் அலைந்து
இசையை இசைத்து
வசையை வாங்கி
வாங்கலாம்
விற்கலாம்.
மணியடித்தாயிற்று
கைகாட்டி இறங்கியாயிற்று.
இரயில் வரும்
இரயில் வரும்
நிச்சயமாய்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...