எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2015

சாணக்கியர்கள்.7.5.86.

29. *நான்
கண்டனக்காரர்களை
இழந்துவிட்டேனே.


*என்னின்
வேர்கள் அவர்கள்.
ஆனால் கிளைகளாய்ப்
பிரிந்து போனார்கள்.

*என் மாட்டுக் கொட்டிலைக்
கூரை மாற்றுவதற்குள்,
என் கவிதைத் தோட்டத்தின்
களை பிடுங்குவதற்குள்,
என்னை அரைகுறைக் கட்டிடமாய்
விட்டுவிட்டுக் காணாமல் போய்விட்டார்களே.

*எங்கே என்னைச் சாணைதீட்டும்
அந்தச் சாணக்கியர்கள் ?

*விமர்சகர்களே,
கட்டிடங்கள் என்ன சுயம்புலிங்கங்களா?
அஸ்திவாரங்களின்மேல் எழுந்துகொள்ள ?

*தடுக்கும் ஏணிகளாய்
நீங்கள் இல்லாமல்
என் முன்னேற்றம்
தடைபட்டுக் கிடக்கிறது.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...