இதை இந்த இணைப்பிலும் படிக்கலாம்.
HAPPY TO SHARE MY ARTICLE IN AVAL VIKATAN. !
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு ஆகியவற்றின் ரசிகை நான். அதே போல் முன்பே அலை ஓசை, தியாகபூமி, கள்வனின் காதலி, பொய்மான் கரடு, மோகினித் தீவு படித்திருந்தாலும் திரும்ப ஒரு முறை இப்போதும் ரசித்துப் படித்தேன். படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.
எஸ்ராவின் முன்னுரையில் கதைக்கரு, சொல்லும் முறை, மொழி,வடிவம், தனித்துவம் இத்தோடு பன்முகத்தன்மை பொறுத்துத் தேர்ந்தெடுத்ததாகக் கூறி இருக்கிறார். பிரைமா லெவி கூறிய ஒன்பது காரணங்கள் சிறப்பு.
அதோடு இதையும் சேர்த்துக்கலாம். ஏதேனும் மெசேஜ் சொல்லணும்னு நினைக்கிற, தனது வட்டார வழக்கில், பேச்சு மொழியில் கதை சொல்ல நினைக்கிற சாமான்யர்களும் சமீபமா வலைத்தளம்,முகநூலில் எழுத ஆரம்பித்து இருக்கிறவர்களும் கூட நல்ல கதைசொல்லிகளாக மாறிவருகிறார்கள்.
தியடோர் பாஸ்கரன் அவர்கள் 1997 இல் ஆங்கிலத்தில் எழுதிய திரைப்படத்துறை பற்றிய நூல் THE EYE OF THE SERPANT. இது 97 ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் தங்கத்தாமரை (SWARNA KAMAL) தேசிய விருது பெற்றது. இது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் கிழக்குப் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்பு நூல் என்றே தெரியாத அளவு சரளமாக மொழி பெயர்த்திருப்பவர் திரு லதானந்த் அவர்கள்.
எனப்படுவது என்றொரு தலைப்பை இதற்கு முன் கேட்டதில்லை. எனவே இதை டிஸ்கவரியில் வாங்கினேன். கிட்டத்தட்ட ஒரு வருடமாக குங்குமத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே எனப்படுவது.
அது என்ன எனப்படுவது..? கண்ணாடி எனப்படுவது, தற்கொலை எனப்படுவது, சபதம் எனப்படுவது, தண்டனை எனப்படுவது, சிறை எனப்படுவது, கடிதம் எனப்படுவது, கடத்தல் எனப்படுவது, வளர்ப்புப் பிராணி எனப்படுவது, தூது எனப்படுவது என்று சற்றேறக்குறைய 38 தலைப்புக்களில் உள்ள கட்டுரைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. பொருட்கள் உணர்வுகள் செயல்கள் என எல்லையற்று விரிந்த என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம் என இதைப் பதிப்பாசிரியர் கூறி இருக்கிறார்.