எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காரைக்குடி வீடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்குடி வீடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 டிசம்பர், 2017

கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.

வீடுகள் கட்டுமானத்தில் செட்டிநாட்டுக் கட்டுமானத்தை மிஞ்ச முடியாது. இங்கே செட்டிநாடு என்றால் கானாடுகாத்தான் மட்டுமல்ல. அதைச் சுற்றியுள்ள 72 ஊர்களும்தான்.கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வீடுகளும் சில இருக்கலாம். எல்லாம் 901* தேக்குமரம் வைத்து இழைத்துக் கட்டப்பட்டவை. 


அவரவர் ஐயாக்கள் கொண்டுவித்துக் கொண்டு வந்த பர்மா தேக்கினால் கடையப்பட்டவை. ரோட்டில் இருந்து கிட்டத்தட்ட பத்தடி உயரம் வரை 902* செம்புறாங்கற்களால் அடித்தளம் அமைக்கப்பட்டு அதன் மேல் வீடு எழுப்பப்பட்டிருக்கும்.


அந்தக் காலத்திலேயே இரண்டு மாடி உள்ளவை. மேல் மாடிகளை சாமான் போடும் அறையாக உபயோகப்படுத்துவார்கள்.  கல்யாணத்துக்குச் சாமான் பரப்பும் கூடமும் கூட அந்த மேல்மாடி ஹாலாகத்தான் இருக்கும். 


சில வீடுகளில் புது மணத் தம்பதிகளின் முதலிரவுக்கும், அவர்களின் தினசரிப் பயன்பாட்டுக்கான படுக்கை அறை, சாமான் அறைகளும் அமைக்கப்பட்டிருக்கும். 


இது ராஜா வீடு. கானாடுகாத்தான் சிதம்பர விநாயகர் கோவிலிலிருந்து புகைப்படம் எடுத்தேன். எத்தனை கோணத்தில் பார்த்தாலும் யானை, மழை, வானவில், கடல் , குழந்தை போல பரவசமூட்டக்கூடியது இந்த வீடு.

அதன் பக்கவாட்டு வீடுகளும் இடம்பெற்றுள்ளன. எங்கூராக்கும். 

புதன், 25 அக்டோபர், 2017

இன்னும் சில மரச்சிற்பங்கள்.

உறவினர் ஒருவர் வீட்டில் கதவின் கைப்பிடியை சுற்றி வித்யாசமாக அமைந்திருந்த மரவேலைப்பாடு. பூக்கள் இலைகள் வளைவுகளை  சிற்பம்போல் எப்படி இப்படி நுண்ணியமாக செதுக்க முடிந்தது எனத் தெரியவில்லை. அதன் பக்கமே சாவிக்கான துவாரமும் செதுக்கப்பட்டிருக்கிறது !

வார்ப்பிரும்பில் செய்யப்பட்டு சில்வர் வண்ணம் அடிக்கப்பட்டிருக்கும் கைப்பிடியின்  கொண்டியிலும் எத்தனை நெளிவு சுளிவுகள்.

சனி, 7 அக்டோபர், 2017

புராதன வீடுகளும் புதுப்பித்தலும்

புராதன வீடுகளும் புதுப்பித்தலும்.

*841இந்தப் புராதன வீடுகள் சுமார் 500 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவைதான். பெரும்பாலானவை 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக  இருக்கும். இவற்றைக் கட்டியவர் கொள்ளுப்பாட்டையா.  தன் ஒரே வருமானத்தில் அவர்கள் கட்டிய இவ்வீடு இன்று அவர்களது பிள்ளைகுட்டி பேரன்பேத்திகளால் நிரம்பி *842.பங்கு வீடாகி விட்டது. ஆனால் ஒருவரே ரிப்பேர் பார்க்க இன்றைய வருமானத்தில் இயலுவதில்லை. எனவே அனைவரும் பங்கேற்று பழுது பார்க்கின்றார்கள். ஓரளவு பழுது உள்ள வீடுகள் தப்பிப் பிழைக்கின்றன. ஆனால் நிறைய*843 அளவில் சேதமான வீடுகளை *844மேங்கோப்பைப் பிரித்துவிட்டு இடத்தைப் பிரித்துக்கொண்டு பிளாட் கட்டி விடுகிறார்கள்.


*845மீனாக்ஷி சொக்கர் திருமணம். விஷ்ணு தாரை வார்க்கிறார்.

கீழே பிரம்மா  அமர்ந்திருக்கிறார். நடுவில் ஹோமத்தீ. மிக அற்புதமான முன்கோப்பு அமைந்த இல்லத்தில் என் சகோதரனுக்கும் பங்கிருக்கிறது.
*846மேலே உச்சியில் மஹாலக்ஷ்மி அருள்பாலிக்க இருபுறமும் கவரிப் பெண்கள்.

*846அதன் கீழ் பக்கவாட்டில் இருபுறமும் காவலர்கள்.

*847இடி விழாமலிருக்க உச்சியில் வைத்த வரகு சாமை பொதித்த கலசங்கள் முறிந்துள்ளன.

*848வேதியர் வேள்வியில் நெய் வார்க்கிறார். இரு பக்கமும் தும்புருவும் நாரதரும் இசைக்கிறார்கள். அவர்கள் இருபுறமும் இரு குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள்.

வெள்ளி, 21 ஜூலை, 2017

காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

இது காரைக்குடியில் உள்ள ஒரு அழகான இல்லத்தின் முகப்பு.
சில வீடுகளில் முன்னோர்களைக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட இல்லம் ஒன்றில் அவர்கள் அப்பத்தாவின் புகைப்படத்தை எடுத்தேன். 

திங்கள், 3 ஜூலை, 2017

காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

முகப்பு, வளவு , பட்டாலை ஆகிய இடங்களில் சுவர் விட்டத்தோடு சேரும் இடத்தில் இவ்வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பார்டர் கட்டியது போன்ற நீள் கோட்டுக்குள் அரைவட்டமாக விட்டம் வரையப்பட்டு அதனுள் பூக்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் ஒவியமாக்கப்பட்டுள்ளனர்.

இவை இயற்கைச் சாயத்தால் வரையப்பட்டவை. ஆனால் தற்போது வீட்டைப் புதுப்பிக்கும்போது அவற்றின் மேல் பெயிண்ட் அடித்து விடுகிறார்கள். வேறு கிடைப்பதில்லையே என்ன செய்வது. அதன் பழைய நளினம் போய்விட்டாலும் இருப்பதைப் பாதுகாத்தோம் என்று திருப்திப்படவேண்டியதுதான். 

மனிதர்கள் யோகாசனம் செய்யும் ஓவியங்களும் விளையாடுதல் போன்ற ஓவியங்களும் அமர்தல் இருத்தல் ஆகிய ஓவியங்களும் கலந்து கட்டி வருது. 

மேலே விதம் விதமான பூக்களும் இலைகள் கீழே தொங்கும் இரட்டைக் குஞ்சலங்களும் ஸ்பெஷல். 

இது முகப்பில் வரையப்பட்ட ஓவிய ஊர்வலம்.


மீன், பூக்கள், அன்னபட்சி, நரி, அப்பம் பங்குவைத்த குரங்கு, 


ஒலுகில் சாய்ந்து ஓய்வெடுக்கும் பெண், பஞ்சவர்ணக்கிளி, அலகில் மீனுடன் கொக்கு, மண்டிக்கால்போடும் குழந்தை/மனிதன், நாய்,


அதன்கீழ் முகப்பறை ( தான்ய அறை ) தான்யலெக்ஷ்மி ஓவியம். 

திங்கள், 12 ஜூன், 2017

காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும்.

மயில்மேல் வள்ளி தெய்வானையுடன் ஷண்முகநாதன்.

செந்தாமரைப்பூவில் மஹாலெக்ஷ்மி 

காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும்.

அதென்னவோ தெரியலை. விநாயகரை ( பிள்ளையார்பட்டி விநாயகர் படம் தவிர ) இங்கே உள்ள வீடுகளில் ஓவியமா பார்ப்பது அரிதாயிருக்கிறது.

கிட்டத்தட்ட நூறாண்டுகள் நூற்று நாற்பதாண்டுகள், இருநூறு ஆண்டுகள் தாண்டிய வீடுகள் இங்கே இருக்கின்றன. இவற்றில் தேக்குமர வேலைப்பாட்டுக்கே ஒருவர் ஆயுள் முழுதும் சம்பாதிக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் ரங்கோன்/மியான்மரிலிருந்து தேக்குக் கட்டைகளைக் கப்பலில் அனுப்பி அவற்றை வெட்டித் தொண்டி துறைமுகத்துக்கு படகில் எடுத்து வந்து அதன் பின் மாட்டு வண்டியில் வீடு வந்தடைந்து செதுக்கி தூண்கள் கடைந்திருக்கிறார்கள்.

மேல்தளம், ரீப்பர்கள், தூண்கள், சப்போர்ட் அலங்காரங்கள், இன்னபிற செய்த தச்சர்கள் என்ன ஆனார்களென்றே தெரியவில்லை.. இதேபோன்ற ஒன்றே ஒன்றைக்கூட இன்றிருக்கும் தச்சர்களால் உருவாக்க முடியாது.

மர வேலைப்பாடுகளின் வரலாறாவது கொஞ்சம் புரிபடலாம்.

ஆனால் இந்த இயற்கை வண்ண ஓவியங்கள் யார் வரைந்தது என்றே தெரியவில்லை. இதன் பின் பெரும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

பெரும்பாலும் ஸ்ரீதேவி பூதேவியுடன் கருடனில் பறக்கும் பெருமாள், தான்ய லெக்ஷ்மி, தனலெக்ஷ்மி, தாமரைப் பூவிலமர்ந்த மஹாலெக்ஷ்மி, மயில்மேலமர்ந்த முருகன் வள்ளி தெய்வானை, வெண்ணெய்த்தாழிக் கிருஷ்ணன், பாமா ருக்மணியுடன் கிருஷ்ணன், ராதையுடன் கிருஷ்ணன், கோபியருடன், யசோதையிடம் பாலருந்தும் பாலகனாக, ஆவினங்கள் சூழ என அநேகம் கிருஷ்ணனைச் சுற்றியே அமைந்துள்ளன.

ஓரிரு ஓவியங்கள் மட்டுமே வட்ட டிசைன்கள், பூக்கள், இலைகள், யாழ் வாசிக்கும் இரு மகளிர், அதன் மேல் விளிம்பில் குதிரையும் சிங்கமும் கொடிபிடிக்கும் தோற்றம், என வித்யாசமாக உள்ளது.  


புதன், 17 மே, 2017

காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.



கிருஷ்ணலீலையைப் படமாக வரைந்து வைத்திருக்கிறார்கள். பல்வேறு ஆண்டுகள் பராமரிப்பு இன்மையால் பூட்டிய வீட்டின் அறைகளுக்குள் எல்லாம் காரை பிடித்துப் போய்க் கிடக்கின்றன. 
கிருஷ்ணனின் ராசலீலை ஓவியங்களில் நான்குதான் தேறியது.





செவ்வாய், 25 ஏப்ரல், 2017

முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.

காரைக்குடியில் வீடுகளுக்கு விலாசப் பெயர் உண்டு. அதே போல் மிக அழகான பெயர்களாக முத்து விலாசம், லெக்ஷ்மி விலாசம், ராம விலாசம் ( இந்தப் பெயரில் ஒரு தியேட்டரும் முத்துப் பட்டணத்தில் இருந்தது. இப்போது மூடிக்கிடக்கிறது ) இது போல் காரைக்குடியிலும் சுற்று வட்டாரங்களிலும் ( கொத்தமங்கலம், ஆத்தங்குடி ஸ்பெஷல் ) ஆயிரம் ஜன்னலார் வீடு, தகரக் கொட்டகை வீடு என்று பல்வேறு அடையாளங்களால் சுட்டப்படும்.

இது முத்து விலாஸ் வீடு.
கானாடு காத்தானில் உள்ள ஒரு வீட்டை ஹெரிடேஜ் ஹோமாக மாற்றி இருக்கிறார்கள். இதன் பெயர் நாராயணா இன்ன்.

வியாழன், 23 மார்ச், 2017

அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.

கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகள் பழமையான காரைக்குடி வீடுகள் சில சிதைந்து வருகின்றன. இடித்து ஃப்ளாட்ஸ் ஆகிவரும் அவற்றை ஆவணப்படுத்த இவற்றை எடுத்தேன்.
அதே வீடுதான்
லாங்க் ஷாட்டில்

வியாழன், 24 நவம்பர், 2016

காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.

526. *கோட்டை கொத்தளங்கள் போல இரண்டடுக்கு மூன்றடுக்குக் கொண்டவை. கீழே பத்துப்படி உயர 527 .* செம்புராங்கற்கள். அதன் மேல் முதல் தளம். முதல்தளத்திலிருந்து 528.* கற்படிகள் கொண்ட மாடி அதன் மேல் இரண்டாம் தளமும் 529 .* மரப்படிகள் கொண்ட மூன்றாம் தளமும். கோட்டை போல் உயரமான வீடு இது . இன்னொரு வீட்டின் மதில் கடைசியில் போட்டிருக்கேன். 
530.*வளவு நடை . கீழ்வாசல் வற்றல் வறளி காயப்போட ஏற்ற இடம். மழைத்தண்ணீர் பிடிக்க, துணி காயவைக்க, பொங்கலிட , விளையாட என்று ஏக உபயோகம். ஐம்பூதங்களும் உலாவும் இடம் :)
531. *கீழ்வாசல் இரும்புக் கம்பி அடைத்துக் கூண்டில் உள்பாயும் வெளிச்சம் :)
532.*பித்தளை அல்லது தாமிரத் தாழ்வாரங்களுக்கு முன்னால் சிற்பமாகச் செதுக்கப்பட்ட தேக்குச் சட்டங்கள் - உட்டன் ரீப்பர் - வழியாக டிசைன் டிசைனாக வெளிச்சம் பாய்வது அழகு !
தூண்கள் கூடப் ப்ரகாசமாய்
533. தூண்களின் தாமிரப்பட்டயங்களில் வார்னிஷ் அடிச்சிருக்கு