எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 31 மார்ச், 2015
மது.. பாலா..
திங்கள், 30 மார்ச், 2015
சனி, 28 மார்ச், 2015
சாட்டர்டே போஸ்ட். யாழகிலன் சனா அபிமன்யு இன்று வாழும் ஈழம்.
”என்பிள்ளை யாழகிலன்.”
சென்ற வருடம் அழகுப்பெண் சனாவுடன் திருமணம் நடந்து அபிமன்யு என்ற அழகான வீரனுக்குத் தந்தையாகி உள்ளார் அகிலன்.
வெள்ளி, 27 மார்ச், 2015
தேன் பாடல்கள் . கண்ணழகும் கண்ணனும்.
ஆனந்த ஜோதியில் தேவிகா பாடும் பாடல். சோகத்தைப் பிழிந்து உருக வைக்கும் பாடல். எம்ஜியார் தேவிகா புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். இதில் ஜப்லா என்ற கழுத்து டிசைன் வைத்த ரவிக்கையை அணிந்திருப்பார் தேவிகா. ” பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா. இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா.. “ என்ற பதில் கிடைக்காத கேள்விகளோடு முடியும் பாடல்.
122. வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணனவன்.
மெல்லிய இசையோடு இருக்கும் பாடல். மனதை வருடும் காட்சிகள். கண்ணழகு பார்த்திருந்து .. காலமெல்லாம் காத்திருந்து .. என்று மயங்கிப் பாடுவார் எஸ் எஸ் ஆர் .. விஜயகுமாரியைப் பார்த்து.
புதன், 25 மார்ச், 2015
என் வீடு என் சொர்க்கம்.
துடுப்பில்லாமல்.
கன்னத்தில் கைவைத்து
எட்டிப் பார்க்கிறது நிலவு
எப்போது தரையிறங்குவோமென.
162. சில வருடங்களுக்கு முற்பட்ட
நாம் இல்லை இப்போது
நம் கிறுக்கல்களில்
தூசு படிந்திருக்கிறது.
முதுமைச் செதில் உதிர
அதன் மேலேயே ஒப்பனை செய்து கொள்கிறோம்
பேசத் தெரியாத உனக்கு
இன்று வார்த்தைகள் மிச்சமில்லை
மரத்தைப் போல உலுக்கிக்கொண்டே இருக்கிறாய்
எல்லாவற்றிலும் விட்டு விடுதலையாகி
நீ வேராய் எஞ்சும் தருணத்துக்காய்க் காத்திருக்கிறேன்
கிளையா அதில் கிளியா எனப் பகுக்கமுடியாமல்.
நம்மைச் சுற்றி வேடிக்கை பார்த்தபடி
வலம் வந்துகொண்டிருக்கின்றன
சூரியனும் சந்திரனும்.
செவ்வாய், 24 மார்ச், 2015
அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்:-
அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்
MISSION IMPOSSIBLE ,FACE OFF போன்ற படங்களில் அதன் நாயகர்கள் ஜான் ட்ரவால்டோ & நிக்கலஸ் கேஜ், டாம் க்ரூஸ் ஆகியோர் முகமூடி போல முகத்தை மாற்றிக்கொள்வதைப் பார்த்து அசந்திருக்கிறேன். மூக்குச் சீரமைப்புச் செய்துகொண்ட பிறகு நடிகை ஸ்ரீதேவி ஹிந்திப்பட உலகையே ஒரு கலக்கு கலக்கினார். ஆனால் யதார்த்தத்தில் அவ்வளவு சுளுவானதல்ல முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை என்பது. மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு நடனப் பயிற்சியில் மூக்கு உடைந்துவிட அதனால் அவர் ஒரு முகச்சீரமைப்பு சிகிச்சை செய்துகொண்டார். அதில் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்பட மீண்டும் ஒரு மறுசீரமைப்பு சிகிச்சை என அடுத்தடுத்த சிகிச்சைகள் செய்து கொண்டார். ஆனால் இயல்பாய் அவர் ஆடிய பழைய பாடல்களில் இருக்கும் ஒரு வெகுளித்தனமான அழகு புதுமுகத்தில் காணாமல் போய் இருந்தது. அதே நடனத்திறமைதான் என்றாலும் ப்ளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் அழகான பூரணமான முகத்தைப் பெறலாம். ஆனால் அதே போன்ற எளிமையான கொள்ளை கொள்ளும் அழகும் தோல் மென்மையும் மாறக்கூடும்.
செவ்வாய், 17 மார்ச், 2015
தமிழ்க்குஷியில் மகளிர் தினச்செய்தி (உரை ) ( 2015 ).
திங்கள், 16 மார்ச், 2015
’விழுதல் என்பது எழுகையே.’ ( உலகத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் தொடரில் என் பங்களிப்பு ) - பண்ணாகம்.
ஞாயிறு, 15 மார்ச், 2015
ஹைதராபாத்தில் ”அரிமா சக்தி” விருதும் ”அன்ன பட்சி”யும்.
இதை ஒருங்கிணைத்த சாந்தா தத் மேடம் கலந்து கொள்ளச் சொல்லி கைபேசியில் அழைத்து இருந்தார்கள். இடம் பற்றி விலாவாரியாக கேட்டுத் தெரிந்து கொண்ட நான் அன்று செல்ல இயலாமல் கால் ஸ்லிப்பாகி விட்டது. எனவே என் அன்பிற்குரிய பெரிய மகன் திருவேங்கடநாதன் சென்று என் சார்பாக வாங்கி வந்து கொடுத்தான். அந்த விருது இதோ.
நன்றி சாந்தாதத் மேடம் & கனவு சுப்ரபாரதிமணியன் சார். & நன்றி வெங்கட் :)
பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.
“ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள். ”
இதுக்கு அடுத்த காலகட்டம் வாரமலர், தொலைக்காட்சி போன்றவற்றில் பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பார்த்தது.
நமக்கெல்லாம் வீட்ல இருக்கவங்க நினைப்பு வந்தா பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பாங்க. ஆனால் முகநூல் வந்ததில் இருந்து கிட்டத்தட்ட 5 வருடமா பிறந்தநாள் வாழ்த்துகள் அதிகரிச்சுக்கிட்டே வருது.
அதில் சிலவற்றை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வடைகிறேன்.
சனி, 14 மார்ச், 2015
சாட்டர்டே ஜாலி கார்னர். ப்ரகாஷ் ராமஸ்வாமி- மகனுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்.
’என்னடா இந்த ஊரு ஒரே பாலைவனம் , ஏசியிலேயே இருக்க வேண்டி இருக்கு. வெளியே போனா வெய்யில் கொளுத்துது . ’ இப்பிடின்னு சிலர் வேறு வெளிநாட்டுக்கும் அதோட ’இந்தூரு ட்ரெஸ்ஸான பர்தாவை அணியாம பெண்கள் போக முடியாது கட்டுப்பாடுகள் ஜாஸ்தி ’ இப்படியேதான் சில உறவினர்களும் நண்பர்களும் அதை விட்டுட்டு துபாய், ஷார்ஜா என்று மாறி இருக்காங்க. ஆனா ப்ரகாஷோட முகநூல் பகிர்வுகளைப் பார்த்தீங்கன்னா இது எதுவுமே வராது. செம ஜாலியும் கேலியும் சுவாரசியமும் மிளிரும். அதிலும் அங்கே இருக்கும் ஷாப்புகள், உணவுகள் நடைமுறைகள் அதோடு அதாக சர்வதேச கிரிக்கெட், உலக சினிமா, உள்ளூர் சினிமா நம்மூரு சினிமா, பிடித்த நண்பர்களோட கவிதை, ஸ்டேடஸ் பகிர்வுகள் நச்சென்ற கமெண்டுகள் என்று கலக்கி இருப்பார்.
எந்த நேரத்தில் போய்ப் படித்தாலும் சந்தோஷம் துள்ளும் இடம் என்று அவரது முகநூல் பக்கத்தைச் சொல்லலாம். சிலருக்கு மட்டுமே அந்தத் திறமை வாய்த்திருக்கிறது. அவர் நிறைய எழுதுவார் நிறையப் பகிர்வார். சுயகேலி கிண்டல் கூட உண்டு. ஒர் முறை தன் மகன் நைச்சியமாகச் சிரிப்பது போன்ற புகைப்படத்தை தன்னுடைய ப்ரொஃபைல் பிக்சரா வைத்திருந்தார். கேட்டா தன்னைப் பார்த்துத் தன் மகன் சிரிப்பதாகவும் அதை எடுத்து தன் ப்ரொஃபைல் பிக்சராகப் போட்டுக்கொண்டதாகவும் கூறினார். இதவிட வேறென்ன சாட்சியம் வேணும் அவரது ஹாஸ்யத்தை நிரூபிக்க.
அவர்கிட்ட என்ன கேள்வி கேக்குறதுன்னு ஒரே குழப்பம். இதுவரை முகநூலில் வந்தாகவும் இருக்கக்கூடாது. வித்யாசமாகவும் இருக்கணும் எனவே இந்தக் கேள்வியைக் கேட்டேன்.
என் வலைத்தளத்தில் சாட்டர்டே ஜாலிகார்னர்னு ஒரு போஸ்ட் போடுறேன். ஒரு கேள்வி கேப்பேன் அதுக்கு நீங்க 4 பாராலேருந்து 10 பாராவரைக்கும் ( எழுத முடிஞ்சவரைக்கும் ) கொடுக்கலாம். சோ இந்தக் கேள்விக்கு டைம் கிடைக்கும்போது பதில் அனுப்புங்கன்னு கேட்டேன். அவர் உடனே அனுப்பிட்டார். இத ஃபிப் 14 ஆம் தேதி போஸ்ட் பண்ணி இருக்கணும். ஆனா லேட் ஆயிந்தி. சோ மார்ச் 14 க்கு போஸ்ட் பண்றேன். ஏன்னா மார்ச் 14 வரை காதலர் தின மறு பரிசளிப்புகள் தொடருதுன்னு விக்கிபீடியா மீடியான்னு ஏதோ ஒன்னுல பார்த்தேன். :) லேட்டா வந்தாலும் அவரோட லேட்டஸ்டான தாட்ஸோட வந்திருக்கேன் மக்காஸ் படிச்சுப் பாருங்க. :)
/// உங்க மகனுக்கு நீங்க ஒரு கடிதம் எழுதினா எதைப் பத்தி எழுதுவீங்க. ////
வெள்ளி, 13 மார்ச், 2015
உதாசீனம் - பாகீரதியில்.
அலங்காரங்களை வெறுக்கிறான்.
தன் சுயமுகம் சுயரூபம்
இன்னதென்று தேடத் தேட
இன்னும் அழகாகிறான்.
தனக்கென்று வாழ்த்துவங்க
அந்த ஆன்மா மேன்மையடைகிறது.
வியாழன், 12 மார்ச், 2015
குழந்தைப் பாட்டும் விளையாட்டும் -- பகுதி - 2. கொட்டப் ப்ராந்து.
”கொட்டப் ப்ராந்து பறந்து பறந்து கொட்டுது பார் கொட்டுது பார்.”
புதன், 11 மார்ச், 2015
பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 4.
(இன் அண்ட் அவுட் சென்னையில் கிட்டத்தட்ட 20 படைப்புகள் வெளியாகி உள்ளன.)
மிகப் பரவலாகக் கவனம் பெற்ற எனது கட்டுரை. மின்சார சிக்கனம் பற்றி . ( எக்ஸிட் இண்டர்வியூ, இனிய இல்லறம் அது நல்லறம், மனமாச்சர்யங்களை உடைப்போம் அணைகளை அல்ல, புத்தகங்களை வாசிப்போம் வாழ்வை நேசிப்போம், நேர்மறை சிந்தனையின் சக்தி ஆகியனவும் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஆகும். )
அளவோடு நட்பு, மின்சார சிக்கனம் தேவை இக்கணம், ஆண்களும், பெண்களும், வார்த்தைகளும், ( கவிதை ), தனியே இருக்கும் ஒருவன் ( கவிதை), குழந்தைமையும் தாய்மையின் தூய்மையும், மனித வளமும் மனித நேயமும், TEACHERS OR CENTUM MAKING MACHINES ?, ஆட்டோ கொள்ளையா கொடையா ? ஆகிய கட்டுரைகள் வந்துள்ளன.)
செவ்வாய், 10 மார்ச், 2015
திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை.:-
திங்கள், 9 மார்ச், 2015
உடை அரசியலும் உடல் அரசியலும்.
தோள்சீலைப்போராட்டம் எனக் கேள்வியுற்றிருக்கலாம்.போன நூற்றாண்டுகளில் தென்னிந்திய கேரள ஊர்களில் சாதியால் தாழ்ந்ததாக முத்திரை குத்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி இல்லை. உயர்சாதிப் பெண்டிர் மட்டுமே. மூன்று முண்டுகள் அணியலாம். மற்ற பெண்கள் இரண்டு முண்டு மட்டுமே. அதுவும் மேல் முண்டு எனப்படும் தோள்சீலையையும் பெரும்போராட்டத்துக்குப் பின்னே சட்டத்தின் உதவி பெற்று அணியத் துவங்கினார்கள். பெருங்கொடுமையாக இருக்கிறதல்லவா.
ஞாயிறு, 8 மார்ச், 2015
சர்வதேச மகளிர் தினத்தில் தமிழ்க் குஷியில் பெண்கள் தினச் செய்தி.
நான் நமது அன்பான நண்பர்களுடன்
பங்குபெறும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
தமிழ்க்குஷி இணைய வானொலியில்..
கேட்டு மகிழுங்கள்..., நன்றி !!!!!!
Sumathi Srri Naan Raajamagal Madhuram Prabhakar Uma Bharathi Vidhya Gurumoorthy Latha Arunachalam Sahana Dhas Thenammai Lakshmanan தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் விழுதுகள் Anitha N Jayaram Mohana Opesh TamilKushi FM Sumitha Ramesh
சனி, 7 மார்ச், 2015
சாட்டர்டே ஜாலி கார்னர், சிறுகதை ராணி சரஸ்வதி ராசேந்திரன்.
ப்ளஸ்டூவில் அவங்க ( தேன்மொழி ) மாத்ஸ் க்ரூப் நான். நான் ப்யூர் சயின்ஸ் குரூப். ( டாக்டராகணும்னு ஆசை அதுனால நீங்க ஒரு கணக்கு மேதையை இழந்துட்டீங்க. அவசரப்படாதீங்க. நான் கெமிஸ்ட்ரிதான் படிச்சேன். அதுனால ஒரு நல்ல மருத்துவரையும் (!) இழந்துட்டீங்க. ஹிஹி - அப்போ அப்போ நம்மளப் பத்தியும் சொல்லிக்கணும். :)
வியாழன், 5 மார்ச், 2015
அவள் விகடனில் ஆராதனாவும் ”ங்கா”வும்.
” ஒரு ஊர்ல ஒரு தாத்தா.. ஒரு பேத்தி “ என்ற தலைப்பில் அவள் விகடனில் என் ”ங்கா” கவிதைத் தொகுதியின் நாயகி ஆராதனா பற்றியும் அவளது தாத்தா தாமோதர் சந்துரு அண்ணன் பற்றியும் வெளியாகி உள்ளது. அதில் அண்ணன் ”ங்கா” பற்றியும் ஆராதனா பற்றியும் அழகாகப் பகிர்ந்துள்ளார்கள் படித்துப் பாருங்கள்.
புதன், 4 மார்ச், 2015
பணிமனை.
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்
ஓடிய வண்டிகள்
ஓவராயிலிங்குக்காகக்
காத்திருந்தன..
புதிதாயும்.,
தூசிபடிந்தும்.,
இளமையாயும்.,
முதுமையாயும்..
எதையோ காயப்படுத்தும்வரை
தான் உடைந்து வீழும்வரை.
பாகங்கள் உராய்ந்து தேயும்வரை.
பற்சக்கரங்கள் தவழும்வரை..
செவ்வாய், 3 மார்ச், 2015
இனமான போராளி திரு சுபவீயின் பேருரை – செய்க பொருளை.
திங்கள், 2 மார்ச், 2015
க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
142. ஒரு முறை ருசித்துவிட்டால் பணத்தின் ருசியைப் போல எந்த உணவும் ருசிப்பதில்லை.
143. நெருங்கி வருபவர்களுக்கெல்லாம் ஒன்றென்றால் துடிக்கும் மனது. அவ்வப்போது அனைத்திலிருந்தும் விலக்கி வைக்கிறது.
144. வேலை செய்பவர் விம்பாரைக் கரைப்பதும் பிள்ளைகளைக் காய் வாங்க அனுப்பினால் விலையும் பெரிதாகத் தெரிவதில்லை. -- கடமையைத் தட்டிக்கழிச்சிட்டோம்னு சந்தோஷமோ.. :)
#நாமே இவற்றைச் செய்யும்போது எல்லாத்திலும் கஞ்சூஸாகி விடுகிறோமே..:)













