யாழகிலன் அகிலன் முகநூலில் நட்பாக அறிமுகமாகி என் பிள்ளையானவன். என்னைத் தாயாக வரித்தவன், என் தோழிகளை சித்திகளாகவும் விளித்தவன் . சென்னையில் கயல்விழி இல்லத்துக்குத் திருமணமானவுடன் மருமகள் சனாவுடன் சென்று சந்தித்து வந்திருக்கிறான். சென்னையில் விழி வானலை எஃப் எம் நடத்தி வந்தான். முன்பு ஒரு முறை முகநூலில் சுயவிவரம் பார்த்தபோது பெயர் மாற்றமும் பால் மாற்றமும் செய்திருந்ததால் நீக்கினேன். அதைப் பார்த்து அம்மா என்னை ஏன் நீக்கினீர்கள் நான் இருக்கும் இடம் அப்படி, அதனால் சுயவிவரங்களை மாற்றினேன் என்றான். கேட்டவுடன் பரிதவித்தது மனது. அப்போது எழுதியது இக்கவிதை.
”என்பிள்ளை யாழகிலன்.”
சென்ற வருடம் அழகுப்பெண் சனாவுடன் திருமணம் நடந்து அபிமன்யு என்ற அழகான வீரனுக்குத் தந்தையாகி உள்ளார் அகிலன்.
”என்பிள்ளை யாழகிலன்.”
சில வருடங்களுக்கு முன் இருப்பை மறைத்தும் மறைந்தும் வாழவேண்டிய
கட்டாயத்தில் இருந்திருக்கிறார் அவர். புலம் பெயர்தல் பற்றிய அவலங்கள் தெரிந்தபின்
குருதி கசிந்தது மனதில்.
சென்ற வருடம் அழகுப்பெண் சனாவுடன் திருமணம் நடந்து அபிமன்யு என்ற அழகான வீரனுக்குத் தந்தையாகி உள்ளார் அகிலன்.

