எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 மார்ச், 2015

சாட்டர்டே போஸ்ட். யாழகிலன் சனா அபிமன்யு இன்று வாழும் ஈழம்.

யாழகிலன் அகிலன் முகநூலில் நட்பாக அறிமுகமாகி என் பிள்ளையானவன். என்னைத் தாயாக வரித்தவன், என் தோழிகளை சித்திகளாகவும் விளித்தவன் . சென்னையில் கயல்விழி இல்லத்துக்குத் திருமணமானவுடன் மருமகள் சனாவுடன் சென்று சந்தித்து வந்திருக்கிறான். சென்னையில் விழி வானலை எஃப் எம் நடத்தி வந்தான். முன்பு ஒரு முறை முகநூலில் சுயவிவரம் பார்த்தபோது  பெயர் மாற்றமும் பால் மாற்றமும் செய்திருந்ததால் நீக்கினேன். அதைப் பார்த்து அம்மா என்னை ஏன் நீக்கினீர்கள் நான் இருக்கும் இடம் அப்படி, அதனால் சுயவிவரங்களை மாற்றினேன் என்றான். கேட்டவுடன் பரிதவித்தது மனது. அப்போது எழுதியது இக்கவிதை.

”என்பிள்ளை யாழகிலன்.”

சில வருடங்களுக்கு முன் இருப்பை மறைத்தும் மறைந்தும் வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார் அவர். புலம் பெயர்தல் பற்றிய அவலங்கள் தெரிந்தபின் குருதி கசிந்தது மனதில்.
 

சென்ற வருடம் அழகுப்பெண் சனாவுடன் திருமணம் நடந்து அபிமன்யு என்ற அழகான வீரனுக்குத் தந்தையாகி உள்ளார் அகிலன்.திருமணம் ,

சனாவின் வளைகாப்பு,

அபிமன்யு பிறந்தது, அவனுக்குப் பெயர் சூட்டல் அவன் காலில் தண்டை அணிவித்தது,

அவன் குப்புத்துக் கொண்டது, முகம் பார்த்ததும் முடி இறக்கியது என தினமும் ஃபோட்டோ பகிர்வுகள் பார்த்து கூடவே இருப்பது போன்ற பிரமை ஏற்பட்டதுண்டு.

 பிறந்தவுடன் முகநூல் பக்கம் திறக்கப்பட்டது அபிமன்யுவுக்காகத்தான் இருக்கக் கூடும்.அகிலன் மகன் என்பதால் சனா என்னை மாமி என்று விளித்து எழுதுவார். மெல்லிய பூ மகள் . :) 

அகிலனிடம் ஈழத்து வாழ்வியல் பற்றிக் கேட்டபோது தாள்களில் எழுதிய இந்தக் கருத்துகளை அனுப்பி இருந்தார். அதையே ஆடியோ ரெகார்ட் செய்தும் அனுப்பி இருந்தார். அதை ப்லாகில் எப்படிப் பதிவது என்று தெரியவில்லை. எனவே அவர் பேசி அனுப்பியதை  அப்படியே டைப் செய்துள்ளேன்.

எனது கேள்வி

 ///அன்பின் அகிலா சனா தற்போதைய ஈழத்து வாழ்வு பற்றி ( அல்லது உங்கள் திருமணம் & அபிமன்யு பற்றி )  எழுதி அனுப்புங்கள். ////

அகிலனின் பதில் :-


ஈழம்..

எழுத முடியாத வரலாற்றுக் குருதிக் கை எழுத்துக்களால் புலரும் காத்திருப்பு விடிவானம். 


கண்ணீர்களாலும் குருதிகளாலும்  இதயத்தை இறுகாக்கி போலிப் புன்னகை கடன் வாங்கி புகைப்படத்திற்காக புன்னகை பூக்கும் செண்டுகளாய்த் துளிர்விடுகின்றோம். அத்தனை பேரும் நலம். நீங்கள் நலமா ? என்று பொய்யாகவேனும் கேட்பதைத் தவிர்க்க முடியவில்லை உங்களிடம். மன்னிக்கவும் அம்மா.

உறவிழந்து போன துயரம் இந்த நூற்றாண்டு போதுமா என்ன ? மீண்டும் எம் தெருக்கள் புதிதாக மாறுகின்றது. எனினும் நினைவில் நின்றதை விட்டு எப்படி எம்மாலும் மீட்சி கண்ட முகங்களாய்ப் பேசுவது ? 

புதையுண்ட முகங்களின் தடயங்களில் இருந்து சிதையுண்ட எழுத்துக்களால் விவரிக்க முடியவில்லை அம்மா. 

வழமைக்குத் திரும்பியது போன்று  இறப்புள் பூக்களாய் வாடையற்றுக் காட்சி தருகின்றோம். மீண்டும் நாங்கள் மட்டும் நலம். ?!!

மீண்டும் நாங்கள் மட்டும் நலமல்ல. எல்லோரும் நலம் என்று பொய்யாகச் சொல்கிறோம்.

ஒரு நாட்டைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அந்நாட்டில் உள்ள குடிமக்கள் சுதந்திரம் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாத நாட்டின் பெயர் ? வன்முறை என்று புகழப்பட்ட இனமதவெறி நாடு என்று இகழப்பட வேண்டும். இன்றும் அது இருக்கிறது. வன்முறையாளருக்கு ஒத்துப் போனவர்கள் மட்டும் வசதி படைத்தவர்களாக மீள முடியும். 

ஏழைகள் ஆங்கிலேயர்களால் துன்புறுத்தப்பட்ட மக்களை விட இரட்டிப்பான நிலையில் – வதைக்கப்படும் வறட்சி வாழ்வாதாரம் கொண்ட மக்களாக வாழ வேண்டியதுதான். அது வதைக்கப்பட்ட மக்கள் வடக்கியரால் மீளப்பட்ட மக்கள், வாழ்வாதாரம் இழந்தவர்களாய் வறுமையில் கொட்டித் தீர்த்தவர்களாய் வாழ்கிறோம்.

எனினும் வெளியில் உயரும் கட்டிடங்களும் எம்மை மகிழ்வின் நினைவுடன். நாளுக்கு நாள் ஆட்சி மாற்றத் தலைவர்களை நம்பியபடியே பயணிக்கிறோம்.  

மீண்டும் எமக்கான காலம் வரும்
எமக்கான
 பாதைகள்  விரியும்  என்று .
எதிர்பார்க்க முடியவில்லை
எல்லாம் இழந்துவிட்டோம்
இழந்ததில் ஏதாவது ஒன்று இருக்கும்
நாம் வாழும் வாழ்க்கையில் அது கூட மிஞ்சுமா என்று.

ஒரு நாள் சந்திப்போம் அம்மா. 

இதைத் தவிர வேறெதுவும் இல்லை.

எம் நாட்டில் எழுதுவதற்கு எதுவாய் இருந்தாலும் எம்மைப் போன்றோருக்கு இதைத் தவிர வேறெதுவும் இல்லை.

இவண்

யாழகிலன் - சனா
ஈழம். 

டிஸ்கி :- அருண் கருப்பையாவின் பகிர்வுக்குப் பின் கண்ணீர் வழிய வழியப் பதைக்கப் பதைக்கப் பகிர்ந்த இடுகை இதுவாகத்தான் இருக்கும். 


அன்பின் அகிலன் & சனா இழந்ததை மீட்க யாராலும் இயலாது. அது கொடுத்த தழும்புகளையும் நீக்க முடியாது. அபிமன்யு காலத்தில் இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்து மனிதநேயம் செழிக்க வேண்டும் நீங்கள் அனைவரும் நிம்மதியாய் வாழவேண்டும் என்று ப்ரார்த்திப்பதைத் தவிர வேறெதும் தோணவில்லை. என்றும் உங்களுடன் நாங்கள்.


8 கருத்துகள்:

 1. எல்லாவிதத்திலும் விலங்குடன் சுதந்திரம் என்று சொல்லக்கொண்டிருப்பதாய்ப்படுகிறது என்ன செய்தாலும் இழப்பின் நினைவிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் சிரமமே காலம் கனிய வேண்டும்

  பதிலளிநீக்கு
 2. அன்பின் அம்மா....
  (மாமி) க்கு எனது மிகுந்த நன்றிகள் .

  பதிலளிநீக்கு
 3. யாழகிலனை அறியத் தந்தீர்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 4. நன்றி தனபாலன் சகோ

  உண்மைதான். நன்றி எழில்.

  நன்றி சனா யாழகிலன்

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 6. யாழகிலன்!! பேரே இனிக்கின்றது! ஆனால், அவர்களது வாழ்வோ?!! ம்ம்ம் அம்மக்கள் எல்லோருமே பிரிந்து ஒவ்வொரு நாட்டிலும் அகதிகளாய் வாழ்ந்து கொண்டு தங்கள் எழுத்துக்களின் தங்களின் உணர்வுகளை வெளியிட்டு மனதைத் தேற்றிக் கொண்டு என்றேனும் ஒரு நாள் விடிந்திடாதோ என்று காத்திருக்கின்றனர். பிரார்த்திப்போம் இம் மகனிற்கும், அம்மக்கள் எல்லோருக்கும்!

  பதிலளிநீக்கு
 7. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...