வெள்ளி, 13 மார்ச், 2015

உதாசீனம் - பாகீரதியில்.

உதாசீனப்படுத்தப்படும் ஒருவன்
அலங்காரங்களை வெறுக்கிறான்.
தன் சுயமுகம் சுயரூபம்
இன்னதென்று தேடத் தேட
இன்னும் அழகாகிறான்.
தனக்கென்று வாழ்த்துவங்க
அந்த ஆன்மா மேன்மையடைகிறது.


ஒற்றைப்புள்ளியிலிருந்து
பலவாய்ப் பெருகி எல்லாம் நிறைக்கிறது.
நிறையும் ஒவ்வொருதுளியிலும்
பலவாய்ப் பரிணமிக்கத்துவங்குமவன்
யாரென்று அறியப்படாமலே
நேசிப்புக்கு உரியவனாகிறான்.
ஒருவனைக் கருவாக்கி
உருக்கொடுத்த பெருமையின்
ஆன்மஒளியில் கரைந்துபோகிறது
உதாசீனம்.


டிஸ்கி :- இந்தக் கவிதை ஃபிப், 2015,பாகீரதியில் வெளியானது.

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்...

ஸ்ரீராம். சொன்னது…

பாஸிட்டிவ்! சுய பச்சாத்தாபம் இல்லாமல்!!

Thenammai Lakshmanan சொன்னது…

தனபாலன் சகோ கருத்துக்கு நன்றி

நன்றி ஸ்ரீராம் ஆம் பாஸிட்டிவ் திங்கிங்க்தான் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...