எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 மே, 2017

”நுரையை உண்டு உயிர்வாழ முடியாது.” முனைவர் திரு.ஞானசம்பந்தன்.

நமது மண்வாசம் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவில் 25 ஆவது இதழ் வெளியீடு மற்றும் வாழ்வியல் விதைகள், நாமும் நலமும் ஆகிய இரு நூல்கள் வெளியீடு. முப்பெரும் நூல்களும் நேற்று தானம் அறக்கட்டளையின் பட்டறிவு பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டன.

நமது மண்வாசம் இதழ் , சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விதழில் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பை அதன் ஆசிரியர் திருமலை அவர்கள் எனக்கும் அளித்திருந்தார்கள். இவர் மாபெரும் பத்ரிக்கையாளர் & பிரபல எழுத்தாளர் ஆவார்.   நிறைய விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவரது அழைப்பின் பேரில் இந்த விழாவுக்குச் சென்றேன்.

அங்கே "நாமும் நலமும்" என்ற நூலை முனைவர் திரு ஞானசம்பந்தன் அவர்கள் வெளியிடப் பெற்றுக் கொள்ளும் ஐவரில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தேன்.

கிட்டத்தட்ட 250 பேரை அறிமுகம் செய்திருக்கும் ( முதல் தலைமுறை எழுத்தாளரில் இருந்து முனைவர்கள், கல்வியாளர்கள், துறை சார்ந்த சிறப்புக் கட்டுரைகள் வரை ) திருமலை அவர்கள் இந்நூலைப் பெற்றுக்  கொள்ள வலைப்பதிவரான என்னையும் அவர்களில் இருந்து தேர்ந்தெடுத்து அழைத்தமைக்கு சிறப்பு நன்றிகள்.

வாசிப்பு குறைந்து வரும் இந்நாளில் கிட்டத்தட்ட 13,000 சுய உதவிக் குழுக்களை இந்நூல் சென்றடைகிறது. ( ஒவ்வொரு குழுவிலும் சுமார் 30 - 40 அங்கத்தினர் இருப்பதால் ) கிட்டத்தட்ட நாலரை லட்சம் பேர் இதைப் படித்துப் பயன் பெறுவதாகக் கூறினார்கள். ) மேலும் ஒவ்வொரு குழுவிலும் இருந்து இந்த நூலைப்பற்றிய ஃபீட்பேக் கொடுக்க அதன் தலைவிகள் தயாராயிருந்தும் நேரமின்மையால் (  இதைப் படித்த குழந்தைகள் அதன் உத்வேகத்தில் பள்ளியிலும் போட்டிகளில் பங்கேற்று வென்றதாகக் குறிப்பிட்டார். ) பேச இயலாது போயிற்று என்றார் களஞ்சியம்/கடல்சார் தொழில் செய்யும் பெண்கள் சார்பாகப் பேசிய அதன் தலைவி திருமதி சாந்தி அவர்கள்.

மதுரை கென்னட் தெருவில் இருக்கும் தானம் அறக்கட்டளையின் அலுவலகத்துக்குச் சென்றபோது குத்து விளக்கேற்றி ஆரம்பித்துவைக்கும் வைபவம் மூன்றாவது மாடியில் நிகழ்ந்துகொண்டிருந்தது. பதிப்பாசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி கீழே இறங்கி வந்து வரவேற்று நிகழ்வரங்குக்கு அழைத்துச் சென்று அமரவைத்தார்.

எடிட்டர் திருமலை சார், பதிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சார், வாசிமலை சார், ( பிரதமர் வாஜ்பாய் வணங்கிப் பாராட்டிய ) சின்னப்பொண்ணு அவர்கள், முனைவர் திரு மாடசாமி,  முனைவர் கு. ஞான சம்பந்தன் ஆகியோர் தலைமை ஏற்க விழா ஆரம்பித்தது.

வரவேற்புரை நிகழ்த்துகிறார் பதிப்பாளர் திரு கிருஷ்ணமூர்த்தி.

வந்திருந்த கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், முனைவர்கள், சுய உதவிக் குழுக்களின் தலைவிகள்.



"வாழ்வியல் விதைகள்" நூலை முனைவர் வெளியிடப் பெற்றுக் கொள்கிறார்கள்.

முதல் பிரதியை களஞ்சியத்தின் தலைவி திருமதி சின்னப்பொண்ணு அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.  வெகு பொருத்தம்தானே.:)

அடுத்து "நாமும் நலமும்" நூல் வெளியிடப்பட ஐவர் பெற்றுக் கொண்டோம். :)
முனைவர் திரு மாடசாமியிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன்.

இவரும் சிறுவயதில் தானும் சிறுவர் பத்ரிக்கை ஒன்று வெளியிட்டதாகவும் அதன்பின் அதைத் தொடர்ந்து வெளியிட முடியவில்லை எனவும் மலரும் நினைவுகூர்ந்தார்.
புத்தக டிஸ்ப்ளே. :)
நமது மண்வாசத்தின் 25 ஆவது இதழ் வெளியிடப்பட அதைப் பெற்றுக் கொண்டார் சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் மேலாளர் திருமதி பானுமதி.இன்னும் இருவரும் பெற்றுக் கொண்டார்கள்.

மிகப் பெரும் வடிகட்டலுக்குப் பின்னே ஒவ்வொரு கட்டுரையும் வெளியிடப்படுவதாகக் கூறினார் திருமலை சார். இதற்கென இருக்கும் சிறப்பு முனைவர் டீமின் அனுமதிக்குப் பிறகே எல்லாம் பதிப்புக்குச் செல்கிறது என்பதையும் கூறினார்.

அடுத்த வருடத்துக்குள் இந்த இருபத்தி ஐயாயிரம் பிரதி வெளியீடு ஐம்பதினாயிரமாக உயரவேண்டும்.. இன்னும் நிறையப் பேரை இந்நூல் சென்றடைய வேண்டும் என்ற திருமலைசாரின்  கனவு பற்றி வாசிமலை சிலாகித்துச் சொன்னார்.

இந்நூலில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் பின்னர் எக்காலத்திலும் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதாலும் அதனால் மக்கள் பத்திரப்படுத்தி வைக்க ஏதுவாய் விலை உயர்ந்த தாளில் ( விலை கட்டுப்படி ஆகாவிட்டாலும் ) வெளியிடப்படுவதாகக் கூறினார் திருமலை சார்.
இதில் பங்களிப்பு செய்தவர்களுக்கு கௌரவம் செய்தார்கள். ( நான் என் காமிராவைக் கொடுத்து எடுக்கச் சொல்ல அதன் பின் புகைப்படம் எடுப்பவர் ( நமது மண்வாசம் இதழின் ஓவியர் ) திரும்ப நிற்கச் சொல்லி எடுக்க இயல்பான நகைச்சுவைக்குச் சொந்தக்காரரான முனைவர் “ இது ஆக்‌ஷன் ரீப்ளே “ எனக் கமெண்ட் அடித்தார்.

சிலர் பொன்னாடை என்று போர்த்துவார்கள். ஆனால் முனைவர் அவர்களோ உண்மையான பொன்னால் செய்த ஆடையையே போர்த்தினாற்போல தகதகவென மின்னிய ஒரு பட்டாடையைப் போர்த்தினார். சிறப்பு விருந்தினர் விழா எடுப்பவர்களின் சேவையைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திய அற்புத கணத்தையும் ரசித்தோம். பாராட்டுகள் முனைவர் சார்.


சுய உதவிப் பெண்களின் குழுத்தலைவி திருமதி சாந்தி அவர்கள் நமது மண்வாசத்தின் சேவையைப் பாராட்டியதோடு எழுத்தாளர்களையும் பாராட்டினார். ஒரு விழிப்புணர்வுக் கவிதையும் வாசித்தார். அருமை.

விவசாயிகள் சங்கத்தலைவர் பேசும்போது நமது மண் வாசம் இதழின் சேவையை பாராட்டியதோடு அது நீடித்து வெளிவருவதற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தானும் ”பச்சைத்துண்டு”, ” இயற்கை விவசாயம்”, “சாட்டை” ”உழவன் நண்பன் “ ஆகிய பெயர்களில் சில ஆண்டுகள் பத்ரிக்கை வெளியிட்டுத் தொடரமுடியாததன் வருத்தத்தைப் பகிர்ந்தார்.

பத்ரிக்கைகளைத் தொடர்ந்து வெளியிடுவதன் சிரமங்களைக் கூறி எப்படியாகிலும் நமது மண்வாசம் இதே போல் தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்யவேண்டும்என்பதை வலியுறுத்தினார்.

திரு வாசிமலை அவர்கள் பேசும்போது நமது மண்வாசத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரைகளும் பல வடிகட்டல்களுக்குப் பின்பே வெளியிடப்படுகின்றன என்று கூறினார். வடிகட்டி சிறப்பானதைத் தரும் முயற்சியில் இவரின் பணி அரும்பணி என திருமலை அவர்களும் பாராட்டினார்.

கு ஞானசம்பந்தன் அவர்களின் உரை வெகு சிறப்பு.

தான் எழுதிய 16 நூல்கள் பற்றி அறியாதவர்கள் கூட டிவி புகழ், சினிமா புகழ் என்றால் ( ரஜனி முருகனில் நடித்தவர், கனவு வாரியத்தில் நடித்தவர், சரவணன் மீனாட்சியில் மீனாட்சியின் தந்தை ) என்று கூறும்போது அடையாளம் கண்டு புகழ்வதாகக் கூறினார். ! ( நமக்கெல்லாம் புரியிறா மாதிரி சொன்னா பத்மஸ்ரீ கமலஹாசனின் நண்பர் ஹாஹா :)

பத்ரிக்கைகளுக்கு நாம் எழுதி அனுப்பும்போது எடிட்டிங்கில் விட்டுப் போய்விடுவது பற்றி “ போதாத காலம் “ ( COLUMN)  என்பதால் வெளியிடப்படுவதில்லை என்று நகைச்சுவையாகக் கூறினார். 

இன்று பலரும் வாட்ஸப் பேஸ்புக் போன்றவற்றில் எழுதியதே போதும் என நினைக்கிறார்கள் . உண்மையான இலக்கியம் படைப்பவர்கள் அருகி வருகிறார்கள்.  ஃபேஸ்புக்கில் எழுதுவதும் வாட்ஸப்பில் பார்வேர்ட் செய்யவதும் நுரையை உண்டு உயிர்வாழ்வது போன்றது. நுரையை மட்டுமே உண்டு ஒருவர் உயிர் வாழ முடியாது. !

உண்மையான உணவு  என்பது இலக்கியங்களைப் படைப்பதில்தான் இருக்கிறது. குறுகிய மற்றும் குறிப்பிட்ட நாள் மட்டும் வாழும் குறுஞ்செய்திகளை மட்டும் அனுப்புவது, யாரோ எழுதியதை அனுப்புவது எல்லாம் நுரையை உண்டு உயிர்வாழ்வது போன்றது என்றும் உண்மையான செழுமையான இலக்கியம் படைப்பதுதான் காலத்தால் நீடித்து நினைவில் நின்று இலக்கியம் மாந்துபவருக்கு உணவாகும் என்றும் கூறினார்.

நச்சென்று நினைவில் இந்த வாக்கியங்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன. நாமும் முயல்வோம் என்ற ஊக்கம் பிறக்க வைத்த வரிகள். நன்றி சார்.



நமது மண்வாசத்தின் தோற்றப் பொலிவுக்குக் காரணமான வடிவமைப்புக் குழு.  லே அவுட் ஆர்டிஸ்ட் தனபாலன், காமிராக்காரர் ( ஓவியரும் ) மற்ற ஆர்ட்டிஸ்டுகளும்.
திரு பால்பாண்டி அவர்களின் நன்றியுரை. இவர் ஒரு பாடல் பாடினார். ஆங்கிலக் கலப்போடு தமிழ் பேசுவதை எள்ளி தமிழா இது தமிழா என்று பாடிய பாடல் அருமை.


ஹாலிடே நியூஸின் இணையாசிரியரும் எனது நண்பருமான செந்தில் சகோ அங்கே வந்திருந்தார். ( ஹாலிடே நியூஸில் எனது கட்டுரைகள் வெளியாகி இருப்பதால் நூலைக் கொடுக்க வந்தார். . அட வெங்கட் சகோ, துளசி சகோ , செந்தில் சகோ, கரந்தை ஜெயக்குமார் சகோ,  துளசி  கோபால் ஆகியோரின் கட்டுரைகளும் இருக்கே ! அட்டகாசம் வாழ்த்துகள் :)

செந்தில் சகோவுடனும் திருமலை சாருடனும் .:)

இருவரும் வழக்கறிஞர்கள். ஒருவர் ஹ்யூமன் ரைட்ஸ், இன்னொருவர் குழந்தைகள் உரிமை பற்றி நமது மண்வாசத்தில் எழுதுபவர்கள்.

உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச சின்னப் பொண்ணுதான் இவர். சுய உதவிக் குழுக்களுக்கான இவரது சேவையைக் கௌரவிச்சுத்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இவரது காலைத் தொட்டு ஆசி வாங்கினார். !
அனைவரும் திருமலை சாரின் உழைப்பைப் பாராட்டினார்கள். நமது மண்வாசம் தொடர்ந்து சிறப்பாக வெளிவரவும் வாழ்த்தினார்கள்.

மிகச் சிறப்பான இவ்விழாவில் கலந்துகிட்டதுக்காக கிடைச்ச நினைவுப் பரிசில் காதி கிராமோதயக் பவனின் திருவள்ளுவர் ( தஞ்சாவூர்த்தட்டு மாடலில் கோவில் கோபுரம் போன்ற மர ஸ்டாண்டில் ) இருக்கிறார். ஹெல்தியான அவித்த கடலையும் எலுமிச்சை உப்பு இனிப்பு போட்ட பானமும், மதிய உணவில் சோயா தினை பிரியாணியும் தயிர்சாதமும், சப்பாத்தி குருமாவும் ஜவ்வரிசிப் பாயாசமும் வழங்கினார்கள். சிறிது வயிற்றுக்கும் ஈந்தபின் மதுரை மண்வாசத்தோடு காரைக்குடி கிளம்பினேன். :)

நன்றி திருமலை சார் & பட்டறிவு பதிப்பகம், & தானம் அறக்கட்டளை. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன். 


5 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் தேன்.

    உங்களுக்குக் கிடைத்த கௌவரம் எங்களுக்குக் கிடைத்தது போல்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான நிகழ்வு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. Thanks da Jaya

    Thanks Mohamed Althaf sir

    Thanks Venkat sago

    Thanks Jayakumar sago.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...