எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பட்டறிவு பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டறிவு பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 பிப்ரவரி, 2018

பெண்மை போற்றுதும் தொகுப்பில் எனது கட்டுரை.

நமது மண்வாசம் வெளியிட்டுள்ள நூல் ”பெண்மை போற்றுதும்”. இது பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடு. இதன் தொகுப்பாசிரியர்கள் பிரபல பத்ரிக்கையாளர். திரு. ப. திருமலை & திரு. இரா. சிவக்குமார். இந்நூலின் விலை ரூ. 50/-

மருத்துவம், சட்டம், தொழில், சுற்றுச்சூழல்,அதிகாரமளித்தல், ஆளுமை ஆகிய பல்வேறு தலைப்புகளில் உள்ள 22 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் ஒரு கட்டுரையாக எனது “பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும் “ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

வாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.


வாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.

22 ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பிரபல பத்ரிக்கையாளர் ப திருமலை அவர்களின் எட்டுக் கட்டுரைகளும், மற்ற கல்வியளாளர்களின் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

மனிதகுலத்துக்குச் சேவைசெய்த பலரை நாம் அறிந்திருப்போம் ஆனால் முழுமையான தகவல்கள் தெரிந்திராது. அக்குறையைப் போக்குகிறது இந்நூல். அது போக பெருஞ்சாதனை செய்த சிலரை நாம் அறிந்திருக்க மாட்டோம். அவர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது இந்நூல். 

வியாழன், 4 மே, 2017

”நுரையை உண்டு உயிர்வாழ முடியாது.” முனைவர் திரு.ஞானசம்பந்தன்.

நமது மண்வாசம் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவில் 25 ஆவது இதழ் வெளியீடு மற்றும் வாழ்வியல் விதைகள், நாமும் நலமும் ஆகிய இரு நூல்கள் வெளியீடு. முப்பெரும் நூல்களும் நேற்று தானம் அறக்கட்டளையின் பட்டறிவு பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டன.

நமது மண்வாசம் இதழ் , சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விதழில் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பை அதன் ஆசிரியர் திருமலை அவர்கள் எனக்கும் அளித்திருந்தார்கள். இவர் மாபெரும் பத்ரிக்கையாளர் & பிரபல எழுத்தாளர் ஆவார்.   நிறைய விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவரது அழைப்பின் பேரில் இந்த விழாவுக்குச் சென்றேன்.

அங்கே "நாமும் நலமும்" என்ற நூலை முனைவர் திரு ஞானசம்பந்தன் அவர்கள் வெளியிடப் பெற்றுக் கொள்ளும் ஐவரில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்தேன்.

கிட்டத்தட்ட 250 பேரை அறிமுகம் செய்திருக்கும் ( முதல் தலைமுறை எழுத்தாளரில் இருந்து முனைவர்கள், கல்வியாளர்கள், துறை சார்ந்த சிறப்புக் கட்டுரைகள் வரை ) திருமலை அவர்கள் இந்நூலைப் பெற்றுக்  கொள்ள வலைப்பதிவரான என்னையும் அவர்களில் இருந்து தேர்ந்தெடுத்து அழைத்தமைக்கு சிறப்பு நன்றிகள்.

வாசிப்பு குறைந்து வரும் இந்நாளில் கிட்டத்தட்ட 13,000 சுய உதவிக் குழுக்களை இந்நூல் சென்றடைகிறது. ( ஒவ்வொரு குழுவிலும் சுமார் 30 - 40 அங்கத்தினர் இருப்பதால் ) கிட்டத்தட்ட நாலரை லட்சம் பேர் இதைப் படித்துப் பயன் பெறுவதாகக் கூறினார்கள். ) மேலும் ஒவ்வொரு குழுவிலும் இருந்து இந்த நூலைப்பற்றிய ஃபீட்பேக் கொடுக்க அதன் தலைவிகள் தயாராயிருந்தும் நேரமின்மையால் (  இதைப் படித்த குழந்தைகள் அதன் உத்வேகத்தில் பள்ளியிலும் போட்டிகளில் பங்கேற்று வென்றதாகக் குறிப்பிட்டார். ) பேச இயலாது போயிற்று என்றார் களஞ்சியம்/கடல்சார் தொழில் செய்யும் பெண்கள் சார்பாகப் பேசிய அதன் தலைவி திருமதி சாந்தி அவர்கள்.

மதுரை கென்னட் தெருவில் இருக்கும் தானம் அறக்கட்டளையின் அலுவலகத்துக்குச் சென்றபோது குத்து விளக்கேற்றி ஆரம்பித்துவைக்கும் வைபவம் மூன்றாவது மாடியில் நிகழ்ந்துகொண்டிருந்தது. பதிப்பாசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி கீழே இறங்கி வந்து வரவேற்று நிகழ்வரங்குக்கு அழைத்துச் சென்று அமரவைத்தார்.

எடிட்டர் திருமலை சார், பதிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சார், வாசிமலை சார், ( பிரதமர் வாஜ்பாய் வணங்கிப் பாராட்டிய ) சின்னப்பொண்ணு அவர்கள், முனைவர் திரு மாடசாமி,  முனைவர் கு. ஞான சம்பந்தன் ஆகியோர் தலைமை ஏற்க விழா ஆரம்பித்தது.

வரவேற்புரை நிகழ்த்துகிறார் பதிப்பாளர் திரு கிருஷ்ணமூர்த்தி.

வந்திருந்த கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், முனைவர்கள், சுய உதவிக் குழுக்களின் தலைவிகள்.