வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

வாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.


வாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.

22 ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பிரபல பத்ரிக்கையாளர் ப திருமலை அவர்களின் எட்டுக் கட்டுரைகளும், மற்ற கல்வியளாளர்களின் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

மனிதகுலத்துக்குச் சேவைசெய்த பலரை நாம் அறிந்திருப்போம் ஆனால் முழுமையான தகவல்கள் தெரிந்திராது. அக்குறையைப் போக்குகிறது இந்நூல். அது போக பெருஞ்சாதனை செய்த சிலரை நாம் அறிந்திருக்க மாட்டோம். அவர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது இந்நூல். 

தில்லையாடி வள்ளியம்மை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அரசஞ்சண்முகனார், சாவித்ரிபாய் பூலே, நாமக்கல் கவிஞர், வீரமாமுனிவர், ஜெகதீஷ் சந்திரபோஸ், தியாகி விஸ்வநாததாஸ், உஷா மேத்தா, மொரார்ஜி தேசாய், பகத் சிங், மாவீரர் திப்பு சுல்தான், ராமாமிர்தம் அம்மையார், கேப்டன் லெக்ஷ்மி, தோழர் ப ஜீவா, அன்னை தெரசா, வல்லபாய் படேல், பரிதிமாற் கலைஞர், ஆறுமுக நாவலர், லாலா லஜபதி ராய், வைத்தியநாதய்யர், ரமாபாய் ரானடே ஆகியோர் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா இது. 

விடுதலைப் போராட்ட வீரர்கள், கவிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், தியாகிகள், சாகச வீராங்கனை, தேசியத் தலைவர்கள், சமூக சேவகர்கள், மனித நேயர்கள் ஆகிய பல்வேறு தரப்பட்ட மாமனிதர்களின் உழைப்பும் சேவையும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

ப திருமலை அவர்கள் தவிரக் கட்டுரை நல்கிய பண்பாளர்கள் முனைவர் கு. ஞான சம்பந்தன், ஆசிரியை ஹெலனா எட்வின், ஆசிரியை புவனேஷ்வரி, புலவர் சங்கரலிங்கம், எழுத்தாளர் சவித்ரா, பேராசிரியர் த ரவிச்சந்திரன், முனைவர் ம பா குருசாமி, திரு. இரா. ஜோதிராம், திருமிகு எப்.எம்.ரூபிணி, முனைவர் எஸ். ஜெயராஜ், பேராசிரியர் வி. சி. கோவிந்தன், பேராசிரியர் முத்துவேல், கவிஞர் முருகேசன், பொறியாளர் வி.டி. நாதன் ஆகியோர்.  

மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்நூலில் ஒரே ஒரு குறை. ஷ் வரும் இடங்களில் ஜ் ம் ஜ் வரும் இடங்களில் ஷ் ம் பிரிண்ட் ஆகி இருப்பது ப்ரூஃப் ரீடிங்கில் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.  

நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத தமிழ்ப் பற்றாளர் அரசஞ் சண்முகனார், தலித் பெண் கல்வி வழங்கிய சாவித்ரிபாய் பூலே, வார்த்தைக்காக வாழ்ந்த தியாகி விஸ்வநாத தாஸ், சுதந்திரப் போராட்டக் களத்தில் ரகசிய வானொலி நடத்திய உஷா மேத்தா, பரிதிமாற்கலைஞர், ஆறுமுகநாவலர், மனித நேயர் வைத்தியநாதய்யர், பெண்களின் வாக்குரிமைக்கும் கல்விக்கும் பாடுபட்ட ரமாபாய் ரானடே மெய்சிலிர்க்கச் செய்கிறார்கள். மற்ற பேராளர்களும் நம்மை நெகிழ வைக்கிறார்கள். 

படிக்கும்போதே நம் மனதில் இவர்கள் பற்றிய எண்ணங்கள் விதையாக விழுகின்றன. நம் செயலில் நல் விருட்சங்களாக அவை நிச்சயம் வெளிப்பாடு அடையும். எனவே சிறார்ப் பருவத்திலேயே படிக்கப்படவேண்டிய நூல் இது. சிறார்க்குப் பரிசளிக்கலாம். ஒவ்வொரு பள்ளி கல்லூரி நூலகத்திலும் வைக்கப்படவேண்டிய அரிய தகவல்கள் கொண்ட நூல் இது.   

நூல்:- வாழ்வியல் விதைகள்.
தொகுப்பாசிரியர் :- ப. திருமலை.
பதிப்பகம் :- பட்டறிவு பதிப்பகம்
விலை :- ரூ.50/-

2 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு அறிமுகம். நன்றி.

த.ம. முதலாம் வாக்கு.

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Venkat sago. enakku tamilmanam eeno varuvathillaiyee een. ??


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...