செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

எள்ளலில் துள்ளலில் வள்ளல் யாரு. ?சிலரது கண்கள் பேசும் சிலரது கண்கள் புன்னகைக்கும். ஆனால் சில நடிகைகளின் கண்கள் எள்ளலும் துள்ளலுமாய் இருக்கும். 

என்னால் மறக்கமுடியாத அந்த விழிகளின் மொழிகள் பத்தி கொஞ்சமே கொஞ்சம் சொல்லிக்கிறேன். 

எத்தனையோ பேரிரிந்தும் ஏன் இந்த மூவர்னு கேக்கலாம். ரெண்டு மூணு நாளா ஏனோ இவங்க கண்களைப் பத்தியே நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி வேற கண்கள் எல்லாம் சிறப்பானதா படல.

ரோஜாவோட கண்கள்ல எள்ளலோட ஒரு போதையும் இருக்கும். ராதாவோட கண்கள்ல ஒரு கண்டிஷனல் எள்ளல் இருக்கும். கொஞ்சம் பயமா கூட இருக்கும். டயானா, சில்க், ஜோதிமீனாவின் பார்வைகள் எல்லாமே கொஞ்சம் மயக்கும் ரகம். 

பல கண்கள் பசுவோடதுமாதிரி மென்மையானவை. சில காதல் பார்வைக்கும் குறும்புக்கும் மட்டுமே சாத்தியம் கொண்டவை. ரொம்பப் பாவமான பார்வைன்னா அது கமலா காமேஷின் கண்கள் மிகவும் பயந்தவை .  

ஆனா ஒரு சீன் நடிக்கும்போதே அந்த மொத்தக் காட்சியையும் இந்தக் கண்கள் மாத்திவிடும் வலிமை வாய்ந்தவை. அதுல முதல்ல எள்ளல்னா என்னன்னு என் இளவயதிலேயே பாடம் போதித்தவர் பானுமதிம்மாதான்.

அப்பா என்னா பவர்ஃபுல் பார்வை. மனுஷன் யாராயிருந்தாலும் அந்த எள்ளல் முன்னாடி ஒண்ணுமில்ல. ஆனா முகம் மட்டும் க்ளாஸ்கோ பேபி மாதிரியே இருக்கும். எப்பிடிம்மா இப்பிடி J

குதிரையில் செல்லும்போதும் அலட்சியப் பார்வை. சண்டையாகட்டும், காதலாகட்டும் எல்லாத்துக்குமே எள்ளலும் துள்ளலும்தான்.

 
நாடோடி மன்னன், அலிபாபாவும் நாற்பது திருடர்களிலும் நான் கண்டு களித்த பார்வை அது. அதுக்கு ஈடு இணை இல்லை. எம்ஜியாரையே என்ன சேதி என்று கேட்பது போன்ற பார்வை இவங்க எள்ளலில், துள்ளலில் வள்ளல் நம்பர் -1ரெண்டாவதா நான் ரசிக்கும் கண்களும் எள்ளலும் கோவை சரளாவினுடையது. இவர் பல படங்களில் வடிவேலுவுடன் நடித்திருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட படம் பெயர் ஞாபகம் வரல.
ஒரு சாராயக் கடையில் வடிவேலு அலப்பறை செய்வார். குடிசை போன்ற இடத்தில் ஒரு கடை. அங்கே ஊறுகாய், தின்பண்டங்கள் விற்க கூடை வைத்து இரண்டு மூன்று பெண்கள் அமர்ந்திருப்பார்கள். 


”குடிக்கவே இல்லை இப்பவே ஆரம்பிச்சிருச்சு பாரு” என்று நொடிப்பார்கள்.

அவர்களிடம் போய் ”இவ எனக்கு அக்கா மக வேணும் அவள தொட்டிருப்பனா. இவ எனக்கு மாமன் மக வேணும் இவள பார்த்திருப்பனா ”என்ற ரீதியில் சொல்லிக்கொண்டே அவர்களைத் தாறுமாறாக அணைத்துக் கொள்வார். 

அப்போது ஒருத்தி அவரிடம் விடுபட்டுக் கோபமாக ”என் அக்கா ஒருத்தி வரா.. அவகிட்ட கேளு” என்பார். ”உனக்கு வேற அக்காவா.. யாரவ” என்றபடி திரும்ப அங்கே அவர் மனைவியாக கோவை சரளா நிற்பார். 


உடனே கோவை சரளா.. “ஏன்னா.. “ என்று தலையையும் கண்ணையும் அசைத்து தெனாவெட்டாகக் கணவனின் அட்டூழியங்களைப் பார்த்துக் கேட்பார் பாருங்கள் அந்த இடம் ரொம்ப சூப்பர். அப்போது அவர் முகமும் உடல் மொழியும் ஒரு அதாரிடேடிவான எள்ளலோடு இருக்கும். அந்த இடம் அட்டகாசம். அதன்பின் ”வீட்டுக்கு வந்து சேரு” என்று சொல்லிவிட்டு அவர் திரும்புவார். ”அப்பாடா போயிட்டா” என்று வடிவேலு பெருமூச்சு விட்டதும் அவர் புடவையைச் செருக்கிக்கொண்டு வடிவேலுவைப் புரட்டிப் புரட்டி அடிப்பதெல்லாம் அசுவாரசியம். ஏனெனில் கண்களால் மிரட்டியபிறகு அடியெல்லாம் எதுக்கு J

அதுக்கேற்ற அவங்க படத்தைத் தேடினேன் தேடினேன் கிடைக்கவேயில்லை ஹ்ம்ம். 

 
சோ இவங்கதான் எள்ளல் துள்ளலில் வள்ளல் நம்பர் 2. பிதாமகன் படம் மட்டும்தான் பார்த்திருக்கேன். இவங்க கண்கள் ஒரு மாதிரி மயக்கம் தருவதா இருந்தாலும் அதில் எள்ளல், சோகம், ரசனை அப்பிடின்னு எல்லா பாவமும் தென்படும். 

பிதாமகன்ல வெற்றிலை போட்டுக்கொண்டு மரத்தடியில் கஞ்சா விற்பவராக இவர் அமர்ந்திருக்கும்போது ஒரு மாதிரி வெற்றிலையைத் துப்பிவிட்டு (மூக்கில் வளையம், முகத்தில் பறக்கும் முடிகளோடு ) முகவாயில் கையை வைத்து அசால்டாக ஒரு பார்வை பார்ப்பார் பாருங்க. அதுக்கு ஈடு இணை இல்லவே இல்லை. 

ஆயிரத்தெட்டுப் படங்கள் இருக்கு பிதாமகன், சங்கீதா, ரசிகா அப்பிடின்னு கூகுள்ல தேடினா. ஆனா அந்த எமோஷனை சரியா கேப்சர் பண்ணாம விட்டுட்டாங்க. 

அதே ரசிகா தன் ஃபோட்டோவை விக்ரம் பாக்கும்போது ஒரு மாதிரி வெட்கப்பட்டு நிற்பதும், சூர்யாவின் இறப்பின் பின் அதிர்ச்சியோடு பார்ப்பதும்னு சகலகலா நடிகை அவங்க.

அந்த கஞ்சா வியாபாரியா வந்து உக்கார்ந்து புளிச் புளிச்னு வெத்திலைச் சாறைத் துப்பிட்டு எள்ளலா இந்த உலகத்தைப் பார்க்கும் ரசிகாவோட துள்ளல் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. எள்ளல்ல மிரட்டிட்டாங்க. :)

இவங்கதான் எள்ளல் துள்ளலில் வள்ளல் நம்பர் 3. 

இது என்னோட ரசனை. என்னோட லிஸ்ட். உங்களுக்குப் பிடிச்சவங்களையும் நீங்க லிஸ்ட் பண்ணலாம். J
 


6 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையாய் வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல ரசனை.....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசனையை ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Jayakumar sago

nandri Venkat sago

nandri DD sago

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

G.M Balasubramaniam சொன்னது…

டீ ஆர் ராஜகுமாரி பற்றிச் சொல்லவில்லையே பார்வையில் ஒரு கிறக்கமிருக்குமே

Thenammai Lakshmanan சொன்னது…

ada aamaamla :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...