காரைக்குடி அழகப்பா
பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு
மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. 
இதில் 21-ம் நூற்றாண்டில்
தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும்
21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம். 
தமிழ்ப்பண்பாட்டு
மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017. https://honeylaksh.blogspot.
இக்கட்டுரை ஆய்வுக்காக
நான் தேர்ந்தெடுத்த தலைப்பு மின்னிதழ்கள் பற்றியது. 
"தமிழ் வளர்ச்சியில்
மின்னிதழ்கள். "
எனவே மின்னிதழ்கள்,
இணைய இதழ்கள் பற்றி முழுமையான விபரம் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் மின்னிதழ்
ஆரம்பிக்கப்பட்டது எப்போது ? ஆரம்பித்தது யார், எந்த வருடம், எதை முக்கியத்துவப்படுத்தி
இது செயல்படுகிறது , இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியில் இதன் பங்கு, இதுவரை இதன் ஆசிரியராக,
நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் யார், மின்னிதழ் நடத்துவதில் மேற்கொண்ட சங்கடங்கள்,
இடையூறுகள், அவற்றை எப்படிக் களைந்தீர்கள், 
இம்மின்னிதழ் மூலம் அடைந்த சாதனைகள், விருதுகள், சிறப்புத் தகவல்களை, சிறப்பிதழ்கள்,
பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்
/////திண்ணை, உயிரோசை,
கீற்று , வார்ப்பு, வல்லினம்,
வல்லமை,அதீதம், முத்துக்
கமலம்,  வலைச்சரம்,  சுவடு, பூவரசி,
தகிதா, புதிய “ழ”
, அவள் பக்கம்,  தென்றல், காற்று
வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ,
சொல்வனம். அமீரத்தின்
தமிழ்த் தேர், தமிழ்
ரைட்டர்ஸ் போர்ட்டல்,
கவிசூரியன்.////
ஏ 4 தாளில்
நான்கு பக்கமே வரும் கட்டுரை என்பதால் சுருக்கி அனுப்பவேண்டும். ஆனால் என்
வலைத்தளத்தில் ஒவ்வொரு மின்னிதழ் பற்றியும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விரிவான
தகவல்கள் வெளியாகும். 
எனவே உங்கள்
மின்னிதழ்கள் பற்றிய விரிவான தகவல்களை எனக்கு honeylaksh@gmail.com என்ற ஈமெயில்
ஐடிக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். வேறு மின்னிதழ்கள் பற்றியும் தெரிந்தால் அதன்
ஈமெயில் ஐடி , விபரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.
எல்லா மின்னிதழ்கள்
பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பாகஇது அமையவேண்டும் என்பது எனது பேரவா. 
வரும் ஜூலை 15
க்குள் அனுப்ப வேண்டும் என்பதால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் உங்கள் மின்னிதழ் விபரங்கள்
எனக்குக் கிடைத்தால் நலம். 
அன்பும்
நன்றியும், 
என எல்லா மின்னிதழ்களுக்கும் நான் மின்னஞ்சல் அனுப்பியும் நான்கைந்து மின்னிதழ்களில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தன. எனவே அவற்றை வைத்து என் ஆய்வை முடிக்கமுடியாது என்பதால் என் வலைத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
இதை அவரது
சுயவிவரத்தில் இருந்து எடுத்தேன். நன்றி முல்லை அமுதன் சார்.
முல்லைஅமுதன்
எனும் பெயரில் 80களில் இருந்து எழுதி
வரும் மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் திருகோணமலை பெருந்தெரு
தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம்
மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய்
இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.
 
நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத்
துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத் தொடும், ஆத்மா,
யுத்த காண்டம், விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான்,
சிநேகம், யாகம், இசைக்குள் அடங்காத
பாடல்கள், இலக்கியப்பூக்கள் போன்ற நூல்களுடன், தாமரைதீவானின்
மொழிநூறு,சுதந்திரன் கவிதைகள் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.  
வருடந்தம் ஈழத்து நூல் கண்காட்சிகளை
நடாத்துவதுடன், ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும்
வருவதுடன், காற்றுவெளி இலக்கிய சஞ்சிகயையும் நடாத்தி
வருகிறார். இவருக்கு இங்கிலாந்து ரூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறங்காவர் குழுவினரால்
முதமிழ் விழாவில் (14/04/2012) 'பைந்தமிழ்க் காவலர்' எனும் பட்டமளித்துக்
கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
என்னைப் பற்றி
| 
பாலினம் | 
MALE | 
| 
தொழில் | |
| 
இருப்பிடம் | 
 
காற்றுவெளி - புதிய அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குnandri Venkat sago
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!