எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

சாப்பிட வாங்க – மின் புத்தகம். முன்னுரை

சாப்பிட வாங்க – மின் புத்தகம்.

THERE IS NO SINCERE LOVE THAN THE LOVE OF FOOD – GEORGE BERNARD SHAW.

ஃபிப் மாசம் அனுப்பிய மின்னூலுக்கு ஜூலை மாசம் முன்னுரை தருவது கொஞ்சம் இல்ல ரொம்பவே சோம்பேறித்தனமான செயல்தான். மன்னிச்சூ வெங்கட் சகோ. J

உணவில்லாமல் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்படலை இன்னும். உணவுதான் நம் ஊனாய், உணர்வாய் மாறி உயிர் கொடுக்குது. சாதாரணமா நாம் தினம் சாப்பிடும் சாப்பாட்ல ஏகப்பட்ட பிடிக்கும் பிடிக்காதது வைத்திருப்போம். ஆனா பேச்சிலரா வாழும் ஊரில் மற்றும் பயணம் செய்யும் ஊரில்  கிடைக்கும் உணவுகளைப் பிடித்தோ பிடிக்காமலோ சாப்பிட வேண்டி வரும். அதே பழக்கத்துல எல்லா உணவுகளையும் சாப்பிடப் பழகிடுவோம். அதுவே சிறப்புத்தான்.

மேலும் ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சீசனல் மற்றும் ரீஜனல் பொருட்கள், காய்கனிகள்  கொண்டு தயாரிக்கப்படும் உணவுதான் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றதா இருக்கும். அதை நான் டெல்லியில் இருந்தபோது உணர்ந்திருக்கேன். எக்ஸ்பெஷலி விண்டர்ல நிறைய காய் சீப்பா கிடைக்கும். அதை சாப்பிட்டா நல்லது. ஆனா அப்போ தமிழ்நாடு மாதிரி அதிகம் புளி சேர்த்த உணவுகள் ஜீரணமாகாது. அதைத் தவிர்க்கணும்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

சாப்பிட வாங்க மின் புத்தகத்துல பயண உணவுகளும் பல மாநில நண்பர்கள் இல்லத்தின் உணவுகளும் சிறப்பாவும் பக்குவமாவும் செய்யப்பட்டிருக்கு. என்ன சப்பாத்தி செய்ய இவ்ளோ நேரம் செய்றாங்க என நினைத்ததுண்டு. ஆனா அவங்க ஒவ்வொரு ஐட்டத்துக்கும் அரைச்சு வதக்கி பொறுமையா அரைமணி நேரம் ஒரு மணி நேரம் செலவழிச்சு நெய்யைக் கொட்டி டேஸ்டா செய்வாங்க. அதை உங்க பகிர்வுகளும் உறுதிப்படுத்துது.

இனிப்பு ரெஸிப்பீக்கள் சூப்பர். அதிலும் சுக்டி, சுர்மா,டேகுவா, பஞ்சீரி லட்டு, கேவர், சான்வி அட்டகாசம். இதுல நான் சான்வி செய்து பார்த்ததில்லை. சாப்பிட்டதும் இல்லை. ஆக்ரா ஸ்வீட்/பேடா நு பூசணி கொண்டு சர்க்கரைப் பாகில் வேகவைக்கப்படும் ஸ்வீட் போல இருக்கு அது.

புளிபோட்ட பாயாசம் படித்து சிரிப்பை நிறுத்த முடில. குவாலியர்ல எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கு. ஆனா அவங்க எல்லாம் இனிப்பு புளிப்பு ரசம் மாதிரி இருந்த அதை குடிச்சாங்க. J

ஷாஹி பன்னீர் ரெஸிப்பியும் டிப்ஸும் அட்டகாசம். அதேபோல் ஸ்டஃப்டு பூரி வகையறாக்களும். லிக்கர் சாய் வித்யாசம் J சுக், காச்ரி சட்னி, சுண்டல் சப்ஜி, புதினா தேநீர், தேப்லா நல்ல காரசாரம். செய்து பார்க்கணும்போல இருக்கு.   A FOOD HAS NO SOUL. YOU AS THE COOK MUST BRING SOUL TO THE RECIPE.

உணவே மருந்தும்பாங்க. உணவுல நிறைய ஓமம், பெருங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், கடுகு, கொத்துமல்லி  போன்ற உடல்நலம் பயக்கும் பொருட்கள் வடநாட்டு சமையல்ல சேர்க்கப்படுறதால உடலுக்கு மிக நல்லதுதான்.

தெரிஞ்ச பேரு, தெரியாத ரெசிப்பீஸைப் பயண அனுபவத்தோடு சுவாரசியமா பகிர்ந்தது அழகு. இந்தப் புத்தகம் நிறைய பேச்சிலர்களுக்கு சமையல் எளிது என்பதைக் கற்றுக் கொடுக்கும். வாழ்த்துகள்.

அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

2 கருத்துகள்:

  1. பெரும்பான்மையானவை அவரது தளத்தில் வாசித்திருந்தாலும் அதுவும் அவரது பயணக் குறிப்புகளுடன், எல்லாம் ஒரே இடத்தில் வாசிப்பது என்பது அழகான அனுபவம். நாங்களும் டவுன்லோட் பண்ணி வைத்து வாசித்துக் கொண்டிருக்கிறோம்...நல்ல விமர்சனம்...வாழ்த்துகள் இருவருக்கும்..

    பதிலளிநீக்கு
  2. Nandri Geeths.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...