எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெங்கட் நாகராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெங்கட் நாகராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

சாப்பிட வாங்க – மின் புத்தகம். முன்னுரை

சாப்பிட வாங்க – மின் புத்தகம்.

THERE IS NO SINCERE LOVE THAN THE LOVE OF FOOD – GEORGE BERNARD SHAW.

ஃபிப் மாசம் அனுப்பிய மின்னூலுக்கு ஜூலை மாசம் முன்னுரை தருவது கொஞ்சம் இல்ல ரொம்பவே சோம்பேறித்தனமான செயல்தான். மன்னிச்சூ வெங்கட் சகோ. J

உணவில்லாமல் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்படலை இன்னும். உணவுதான் நம் ஊனாய், உணர்வாய் மாறி உயிர் கொடுக்குது. சாதாரணமா நாம் தினம் சாப்பிடும் சாப்பாட்ல ஏகப்பட்ட பிடிக்கும் பிடிக்காதது வைத்திருப்போம். ஆனா பேச்சிலரா வாழும் ஊரில் மற்றும் பயணம் செய்யும் ஊரில்  கிடைக்கும் உணவுகளைப் பிடித்தோ பிடிக்காமலோ சாப்பிட வேண்டி வரும். அதே பழக்கத்துல எல்லா உணவுகளையும் சாப்பிடப் பழகிடுவோம். அதுவே சிறப்புத்தான்.

மேலும் ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சீசனல் மற்றும் ரீஜனல் பொருட்கள், காய்கனிகள்  கொண்டு தயாரிக்கப்படும் உணவுதான் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்றதா இருக்கும். அதை நான் டெல்லியில் இருந்தபோது உணர்ந்திருக்கேன். எக்ஸ்பெஷலி விண்டர்ல நிறைய காய் சீப்பா கிடைக்கும். அதை சாப்பிட்டா நல்லது. ஆனா அப்போ தமிழ்நாடு மாதிரி அதிகம் புளி சேர்த்த உணவுகள் ஜீரணமாகாது. அதைத் தவிர்க்கணும்னு தெரிஞ்சிக்கிட்டேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...