எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

பரோக்ஷ் !

பரோக்ஷ் ! பார்த்ததும் அதிர்ந்தேன். ஆனால் நச் என்ற முடிவில் திகைத்தேன். இப்படியும் எடுக்க முடியுமா ஹேட்ஸ் ஆப் டு தெ டைரக்டர் கணேஷ் ஷெட்டி !.

பகிர்ந்தமைக்கு நன்றி சுசீலாம்மா !

///கர்நாடக மாநிலம் உடுப்பியருகே உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த [2015] . ஒரு மிகச்சிறிய உண்மைச்சம்பவத்தைத் துளு மொழியில் சுவாரசியமான குறும்படமாக்கியிருக்கிறது கணேஷ் ஷெட்டியின் ’’பரோக்‌ஷ்’’. தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பை ஒட்டி அதையே வாழ்வாதாரமாய்க்கொண்டு வாழும் ஒரு குடும்பம்.


குறிப்பிட்ட ஒரு மரத்திலிருந்து அவ்வப்போதுகேட்கும் சின்னஞ்சிறு குழந்தையின் அழுகுரலால் முதலில் திகிலாகிறாள் அதன் குடும்பத் தலைவி.பிறகு மற்றவர்களையும் அது தொற்றிக்கொள்ள மாயம், மற்றும் மாந்திரீகத்துக்காகத் தன் சொத்து முழுவதையும் கூட அவர்கள் செலவழிக்கத் தயாரான நிலையில் முடிவு என்ன என்பதை இயல்பான- யதார்த்தமான பாணியில் சொல்லும் இந்தப்படம் இணையத்தின் மூலம் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறது. பாலிவுட்டில் நுழைவதற்கான பொற்கதவுகளையும் இயக்குநருக்குத் திறந்து விட்டிருக்கிறது இந்த 13 நிமிடக்குறும்படம்.மிகை ஆரவாரங்கள் அற்ற அடங்கிய தொனியும் கச்சிதமான சுருக்கென்ற முடிவும் தவற விடக்கூடாத குறும்படங்களில் ஒன்றாக ’’பரோக்‌’’ஷை [PAROKSH / परोक्ष] ஆக்கி விடுகின்றன.////2 கருத்துகள்:

  1. பார்க்கிறோம்! இன்னிக்கு நம்ம எல்லாருக்குமான தோழரின் பிறந்தநாளாச்சே!! கொண்டாடிட்டு பார்க்கிறோம். பகிர்விற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. Nandri Geeths

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...