எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காற்றுவெளி இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காற்றுவெளி இதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஆகஸ்ட், 2017

தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள் :- காற்றுவெளி.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதில் 21-ம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும் 21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம்.

தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017. https://honeylaksh.blogspot.com/2017/07/2017.html

இக்கட்டுரை ஆய்வுக்காக நான் தேர்ந்தெடுத்த தலைப்பு மின்னிதழ்கள் பற்றியது.

"தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். "

எனவே மின்னிதழ்கள், இணைய இதழ்கள் பற்றி முழுமையான விபரம் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது எப்போது ? ஆரம்பித்தது யார், எந்த வருடம், எதை முக்கியத்துவப்படுத்தி இது செயல்படுகிறது , இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியில் இதன் பங்கு, இதுவரை இதன் ஆசிரியராக, நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் யார், மின்னிதழ் நடத்துவதில் மேற்கொண்ட சங்கடங்கள், இடையூறுகள், அவற்றை எப்படிக் களைந்தீர்கள்,  இம்மின்னிதழ் மூலம் அடைந்த சாதனைகள், விருதுகள், சிறப்புத் தகவல்களை, சிறப்பிதழ்கள், பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்

/////திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், வல்லமை,அதீதம், முத்துக் கமலம்,  வலைச்சரம்,  சுவடு, பூவரசி, தகிதா, புதிய” , அவள் பக்கம்தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல், கவிசூரியன்.////

ஏ 4 தாளில் நான்கு பக்கமே வரும் கட்டுரை என்பதால் சுருக்கி அனுப்பவேண்டும். ஆனால் என் வலைத்தளத்தில் ஒவ்வொரு மின்னிதழ் பற்றியும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விரிவான தகவல்கள் வெளியாகும்.

எனவே உங்கள் மின்னிதழ்கள் பற்றிய விரிவான தகவல்களை எனக்கு honeylaksh@gmail.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். வேறு மின்னிதழ்கள் பற்றியும் தெரிந்தால் அதன் ஈமெயில் ஐடி , விபரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

எல்லா மின்னிதழ்கள் பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பாகஇது அமையவேண்டும் என்பது எனது பேரவா.

வரும் ஜூலை 15 க்குள் அனுப்ப வேண்டும் என்பதால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் உங்கள் மின்னிதழ் விபரங்கள் எனக்குக் கிடைத்தால் நலம்.

அன்பும் நன்றியும்,

தேனம்மைலெக்ஷ்மணன். 


என எல்லா மின்னிதழ்களுக்கும் நான் மின்னஞ்சல் அனுப்பியும் நான்கைந்து மின்னிதழ்களில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தன. எனவே அவற்றை வைத்து என் ஆய்வை முடிக்கமுடியாது என்பதால் என் வலைத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.


இதை அவரது சுயவிவரத்தில் இருந்து எடுத்தேன். நன்றி முல்லை அமுதன் சார்.




முல்லைஅமுதன் எனும் பெயரில் 80களில் இருந்து எழுதி வரும் மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.  

செவ்வாய், 21 ஜனவரி, 2014

பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு :- ( காற்றுவெளி இதழில் )

பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு :-

 டெல்லியில் தாமினி, நிர்பயாவுக்கும் தமிழகத்தில் புனிதாவுக்கும் நிகழ்ந்த கொடுமைகளைப்போலத் தினமும் பத்ரிக்கையைப் புரட்டினால் நம்மையும் மிரளவைப்பது பாலியல் வன்முறைச் செய்திகள்தான்.

மும்பை சக்தி மில்ஸில் ஒரு பெண் ஃபோட்டோகிராஃபர் போட்டோ எடுக்கச்சென்ற போது அவரையும் அவரது நண்பரையும் பிடித்த காமுகக் கும்பல் அவரது நண்பரைக் கட்டிப் போட்டுவிட்டு அவரைப் பாலியல் கொடுமை செய்திருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி என்னவென்றால் அதன் பின் பலர் அந்தக் கும்பலில் மாட்டிச் சிக்கிச் சீரழிந்ததாக வரிசையாகப் புகார் அளித்து வருகிறார்கள். மகாலெக்ஷ்மி கோயிலுக்கருகில் சென்று கொண்டிருந்தபோது தானும் தன் தோழனும் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக ஒரு பெண் துணிந்து புகார் அளித்துள்ளார்.


புற்றீசல் போலக் கிளம்பும் இவர்கள் எங்கிருந்துதான் இந்தக் கெட்ட நோக்கங்களோடு பெண்களின் வாழ்வைச் சீரழிக்கின்றார்களோ. ஹைதராபாத்தில் சட்டக் கல்லூரியில் ( NLSIU)படித்த மாணவி வெளியே சென்றுவிட்டு விடுதிக்குத் திரும்பும் சமயம் அவரைக் கடத்திய ஆறுபேர் கொண்ட கும்பல் ஒன்று மரங்கள் அடர்ந்த பகுதிக்கு இழுத்துச் சென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருக்கின்றனர். கட்டைகளையும் கடப்பாறைகளையும் வைத்து முதலில் மிரட்டிய  ஆண்கள்  ( அதில் ஒருவருக்கு வயது 50 ) பின் அந்த ஆணைத் தாக்கி பெண்ணை மட்டும் இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து சிறந்த கல்விநிறுவனமென இங்கே படிக்க வந்த அந்தப் பெண் கல்வியைத் துண்டித்துவிட்டுத்  தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார். இது தவறான முன்னுதாரணமாக அமைந்து இங்கே படிக்க வரும் மற்ற நாட்டவர்களையும் தடை செய்து விடும். அசாராம் பாபு என்ற சாமியாரும் ஆசாமியாக மாறி மைனர் பெண்ணிடம் தகாத உறவு கொண்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆசிரமங்களும், அநாதை ஆசிரமங்களும் கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாயில்லை.

பெங்களூரு சிறையில் இருந்து தப்பித்து இன்று பிடிபட்டிருக்கும் ஜெய் சங்கர் கிட்டத்தட்ட 30 கற்பழிப்பும் கொலையும் செய்தவர். சிறைக்காவலில் இருந்து அவர் எப்படித் தப்பித்து இருக்க முடியும் எனப் பத்ரிக்கைகள் பத்தி பத்தியாகக் கிழித்தபோதுதான் தெரிந்தது, ஒரு கண்காளிப்பாளரே தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தொல்லை கொடுத்த ஒருவனைப் பழிவாங்க அவனைத் தப்பிக்க வைத்தது.

சிறையிலிருந்து ஆஸ்பத்ரிக்குக் காண்பிக்கப்போனபோது கையுறை எடுத்தது, காவலர் உடையில் சிலர் பார்த்தது, சிறைச்சாலையின் இரு எல்லைச் சுவர்களை இணைக்கும் சுவர் உடைக்கப்படாமல் இருந்தது, அதில் பதிக்கப்பட்ட கண்ணாடிகளின் மேல் ஷூக்கள் அணிந்த காலால் ஓடியது, போர்வையால் கயிறு போல் இழுத்துக் கட்டி சுவற்றில் இருந்து குதித்து அருகே நின்றிருந்த வண்டி மூலம் தப்பியது எனப் பட்டியலிட்ட பத்ரிக்கை. அந்த சிறைச்சாலை அறையில் கதவைப் பூட்டி பூட்டுப்போட்டு  இருக்கும் இடம் 4 அடி தூரம் என்றும், கிட்டத்தட்ட 360 டிகிரியில் திருப்பினால்தான் அந்தப் பூட்டைத் திறக்க இயலும் என்றும், மேலும் தப்பிய சமயம் மேலே கண்காணிக்கும் கோபுரத்தின் விளக்குகள் எரியவில்லை என்றும், காம்பவுண்டுச் சுவரின் உச்சிவேலியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது என்றும் பத்திரிக்கைகள் பட்டியலிடுகின்றன.

RAPISTS ARE TERRISTS . STOP RAPE  என்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளைப் பிடித்தபடி நீதி மன்றத்தின் வாசலில் மக்கள் நீதிக்காகக் காத்து நிற்கின்றனர். தன்னுடைய சகோதரியைக் கெடுத்துக் கொன்றவன் மைனராக இருப்பதால் 27 மாதங்கள் மட்டும் ஜெயில் வாசம் என வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாமினியின் சகோதரர் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

சட்டக்கல்லூரிப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான வழக்கில் கைதான ஆண்களை எல்லாம் திருமணமானவர்கள்,  திருமணம் ஆகாதவர்கள், மற்றும் அவர்களின் ஜாதி, மதம், இனம் , நிறம் பொருளாதார சமூக மதிப்பு எல்லாம் சிறப்புத் தகுதியாகக்  கணக்கில் கொள்ளப்படாமல் குற்றவாளிகளுக்கு என்னென்ன தண்டனை வழங்க வேண்டுமோ அதை இரும்புக் கரம் கொண்டு நிறைவேற்றுவோம் என்று நீதிபதி சொல்லி இருப்பதும், அதேபோல அந்தக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதும் ஆறுதல் அளிக்கக்கூடியது.

ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிக் கொலை செய்து போடுவது எவ்வளவு கொடுமையானதோ அதேபோல வன்கொடுமை செய்துவிட்டு மிரட்டித் தூக்கிப் போட்டுவிட்டுப் போவதும் ஆத்மரீதியிலான உளைச்சலை உயிர்வாழும் காலம் வரை ஏற்படுத்தும் என்று கோர்ட் சொல்லி இருக்கிறது. மேலும் 133 பக்கம் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்டபோது இந்தியன் பீனல்கோடு செக்‌ஷன்  376(2) (g) இன் படி குறைந்தது பத்தாண்டுகளாவது  சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறுவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாகவும் தீர்ப்பளித்திருக்கிறது. 

நம் ஜனாதிபதியின் மகள் ஷர்மிஷ்டா முகர்ஜி பாலியல் சீரழிவுகள் குறித்துக் கருத்துக் கேட்கபட்டபோது சமூக மாற்றம் ஏற்படவேண்டும். இதில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற கோபம் சாமான்ய மனிதர்களுக்கு வருவது இயல்பு என்றும் தான் மரண தண்டனையை ஆதரிக்காவிட்டாலும் அதற்கு ஈடான ஒரு கடுமையான தண்டனையை வழங்கினால்தான் இம்மாதிரிக் குற்றவளிகளின் மனதில் மாற்றம் ஏற்படும் எனவும் கூறி இருக்கிறார்.

மணிப்பால், டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், போன்ற இடங்களில் நிகழ்ந்த கற்பழிப்புக்களாலும் கற்பழிப்புக் கும்பல்களாலும் மாநிலம் வாரியாகப் பெண்களுக்குப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. இந்தப் பாலியல் வன்கொடுமைகளுக்கு சமூகத்தின் பொறுப்பும் இருக்கிறது. குற்றவாளிகள் தப்பக்கூடாது.  சட்டம் தன் இரும்புப் பிடியைக் கொண்டு  கடுமையான தண்டனை வழங்கி இனி இதுபோன்ற துர்ச்சம்பவங்கள் நிகழாமல் காக்க வேண்டும்.


நன்றி காற்றுவெளி 

டிஸ்கி :- இந்தக் கட்டுரை 13, அக்டோபர் 2013காற்றுவெளி இதழில் வெளியானது.   http://issuu.com/kaatruveli/docs/_______________________________oct_/33?e=1847692/5206191

திங்கள், 13 ஜனவரி, 2014

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை .. எனது பார்வையில்.


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை

பூட்டிக் கிடக்கும் ஒரு வீட்டைத் திறந்து ஒவ்வொரு கதவாக, ஜன்னலாகத் திறந்து வைத்துப் போகும்போது ஏற்படும் வெளிச்சம் போன்றது அகநாழிகை பொன் வாசுதேவன் கவிதைகள். ப்ரியம் பற்றிய கவிதைகள் கதகதப்பை வழிய விடுவது போல இழப்பும் இயலாமையும் பற்றிய கவிதைகள் கொஞ்சம் நசநசக்கும் குளிர் போலக் குத்துகின்றன.